"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 April 2012

தம்புள்ளை பள்ளிவாயில் சம்பவம், அம்பாறையில் ஹர்த்தால்!

தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு சம்பவத்தைக் கண்டித்து அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து ஏற்பாடு செய்த ஹர்த்தால் இன்று (2012.04.26) அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மாவட்டத்தில் பொது போக்குவரத்து சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

20 April 2012

தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் மீது தாக்குதல்

தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் இன்று நண்பகல் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இன்று காலை தம்புள்ளையிலுள்ள பிரபல விகாரை ஒன்றில் ஒன்றுதிரண்ட பெரும்பான்மை இனத்தவர்கள் பௌத்த பிக்குகள் தலைமையில் பேரணியாகச் சென்று இப் பள்ளிவாசல் மீது கல் வீசித் தாக்கியதாகவும் பின்னர் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 500க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசலை நோக்கிப் பேரணியாக வந்த பின்னரே இப் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தற்போது இப் பள்ளிவாசலைக் குறித்த தரப்பினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

19 April 2012

முட்டையிடாமல் குஞ்சை ஈன்ற கோழி

பொதுவாக கோழிகள் முட்டையிட்டபின் அதனை அடைகாத்தே குஞ்சுகைளப் பொரிக்கின்றன. ஆனால் எமது நாட்டில் வெலிமடைப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒரு கோழி முட்டையிடுவதற்குப் பதிலாக நேரடியாக குஞ்சை ஈன்றுள்ளது. இது பலரையும் ச்சரியத்திற்கு ள்ளாக்கியுள்ளது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

பொதுவாக கோழிகள் முட்டையிட்டபின் அதனை அடைகாத்தே குஞ்சுகைளப் பொரிக்கின்றன. ஆனால் எமது நாட்டில் வெலிமடைப் பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒரு கோழி முட்டையிடுவதற்குப் பதிலாக நேரடியாக குஞ்சை ஈன்றுள்ளது. இது பலரையும் ச்சரியத்திற்கு ள்ளாக்கியுள்ளது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

18 April 2012

அமெரிக்கா குண்டுபோட அரபு நாடுகள் உயர்த்திக்கட்டுகின்றன

சமீபத்தில் புர்ஜ் டுபாய் கட்டப்பட்டது. உலகில் தற்போது மிக உயர்ந்த கட்டிடமாக விளங்குவது இக்கட்டிடமே. 830 மீட்டர் உயரம். அதற்கு அடுத்த இடத்தில் மக்காவின் மிகப் பெரிய கடிகார டவர் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்துக்கும் போட்டியாக சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் கிங்டம் ஹோல்டிங் என்ற நிறுவனம் மிக உயர்ந்த கட்டிடத்தைக் கட்டவுள்ளது. 6330 கோடி ரூபா செலவில் 63 மாதங்களில் இக்கட்டிடம் நிர்மானிக்கப்படவுள்ளது.
(காணொளி இணைக்கப்பட்டுள்ளது) 

இலட்சக் கணக்கில் கூடும் பென்குயின்கள்

ஒவ்வொருவருடமும் தமது இனப்பெருக்கத் தேவைக்காகவும் உணவுத் தேவைக்காகவும் பென்குயின்கள் இப்பகுதியில் இலட்சக் கணக்கில் ஒன்று கூடுகின்றன.ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

17 April 2012

புகைபிடிப்பதால் மறதி அதிகரிக்கும்.

புகைபிடிப்பவர்களுக்கு அவர்களது வழமையான நடவடிக்கைகளில் மூன்றில் ஒரு பகுதி மறந்துவிடுவதாக புதிய ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இதனை மருத்துவர் டொம் ஹெபர்னனும் அவரது குழுவும் மேற்கொண்ட ஆய்விலிருந்து உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாய்வுக்காக புகை பிடிப்படிவர்கள், அதை நிறுத்தியுள்ளவர்கள் மற்றும் புகையே பிடிக்காதவர்கள் என மூன்று பிரிவினர்களாகப் பிரித்து ஆய்வை நடாத்தியுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட நினைவாற்றல் சோதனையில் புகை பிடிப்பவர்களுக்கு 59 சதவிகித ஞாபக சக்தியும் புகை பிடிப்பதைக் கைவிட்டவர்களுக்கு 74 சதவிகிதமான ஞாபக சக்தியும் புகையே பிடிக்காதவர்களுக்கு 82 சதவிகித ஞாபக சக்தியும் இருப்பது தெரிய வந்தது. புகைபிடிப்பதால் ஞாபக சக்தியென்ன உயிரே போகும் என்று தெரிந்திருந்தும் குடிக்கிறார்களே இந்த அபலை மனிதர்கள்...

16 April 2012

Inception திரை விமர்சனம்

சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராக அறியப்படும் க்ரிஸ்டோஃபர் நோலனின் தயாரிப்புதான் இந்த INCEPTION திரைப்படம். ஆரம்பம் என்று பொருள். கனவுலகத்துடன் தொடர்பு படுத்தி கனவுகளுக்கே வித்தியாசமானதொரு வரைவிலக்கனம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் எப்படித்தான் நோலனின் கற்பனையில் உதித்ததுவோ? ஏனெனில் படத்தைப் பார்க்கும்போதே மண்டை குழம்பிப் போகின்றது. நான் உளவளத்துணையில் டிப்லோமாக் கற்கையைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றேன். இத்திரைப்படமும் உளவியலோடு தொடர்புபட்டது என்பதால் இதனைப் பார்க்கவேண்டும் என்று எண்ணினேன். அதனடிப்படையிலே இத்திரைப் படம் பற்றி இங்கு பதிவிடுகின்றேன்.

இவ்வுலகில் நியாயமாகத் தீர்ப்பு வழங்குவது சாத்தியமில்லை.

கடுமையான குற்றங்களைச் செய்து சிறை தண்டனை, ஆயுள் தண்டனை, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும் சில மாதங்களில் பிணையில் வெளிவருகின்றனர். அரசியல் பலத்தோடு, பண பலத்தோடு குற்றமிழைப்பவர்கள் பாதுகாப்புடன், சொகுசான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். சிலபோது இவர்களுக்கு சிறைக் கூடங்களே சொகுசான வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கின்றது. இன்னும் பலர் குற்றங்களைச் செய்துவிட்டு தலைமறைந்து வாழ்கின்றனர்.சிறைத் தண்டனை வழங்கியவர்கள் திருந்தி வாழ்வதற்குப் பதிலாக அங்குள்ள வேறு பெரிய பெரிய குற்றம் செய்தவனுடனெல்லாம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இன்னும் பல குற்றங்களைப் பழகிக்கொண்டு வெளியேறுகின்றனர்.

13 April 2012

குளவியின் சூட்சுமம்

மற்ற பூச்சிகள் எல்லாம் அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக இரையும் இணையும் தேடிச்செல்லும்போது குளவி மட்டும் வெயில் நன்கு உச்சிக்கு வந்ததன் பின்னர்தான் வெளியே வருகின்றது. “சூரியனைப் பார்க்க எழும்புபவன் சீதேவி, சூரியன் அவனைப் பார்த்தபின் எழும்புபவன் மூதேவி” இந்தப் பழமொழியை குளவிக்கு ஒப்பிடவேண்டாம். ஏனெனில் குளவியின் அடி வயிறு பூராவும் சின்னச் சின்ன ஃபோட்டோ செல்கள் காணப்படுகின்றன. நல்ல வெயிலில்தான் அதற்கு உற்சாகம் கிளம்பும் ஹோமோன்கள் சுறக்கின்றன.

10 April 2012

விதவைகளால் நிரம்பி வழியும் விருந்தாவனம்.

விருந்தாவனத்தில் இருள் சூழ்ந்த இரவுகளில் நாற்றமெடுக்கும் அதன் குப்பை மேடுகளிலும் தெருவோரங்களிலும் அநாதைகளாகப் படுத்துக் கிடக்கும் விதவைகளின் உடலை மேய்வதற்காக காமப் பித்தர்கள் வருவதும் வாடிக்கையாகிவிட்டது. முதலில் எதிர்த்து நின்றவர்களும்கூட பிறகு தங்கள் உடல் பசியைப்போக்க யாராவது வர மாட்டார்களா என்று தானாகவே தேடி அலையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுவிடுகிறது.

07 April 2012

அதிபுத்திசாலியாக புதிய சுட்டி ஜீனியஸ்...

பிரிட்டனில் வசிக்கும் சாப்ரான் பிளட்ஜர் என்ற 3 வயதுடைய சிறுமி சுட்டி ஜீனியஸ்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளார். பிரிட்டனின் சராசரி IQ திறன் 100 என்ற நிலையையும் விட 140 என்ற அற்புத IQ திறனைப் பெற்றுள்ளார். தொலைக்காட்சி குயிஸ் நிகழ்ச்சிகளில் படு சுட்டியாக சாப்ரான் விடையளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றார். செனல் 4 தொலைக்காட்சியில் நடாத்தப்படும் கணிதப் போட்டிகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுடனும் போட்டியிட்டு தனது அதீத திறமையால் அவர்களையும் தோற்கடிக்கிறார். தனது மூத்த சகோதரிகளின் பாடசாலைப் புத்தகங்களையும் கணிதப் பயிற்சிகளையும் திறம்படச் செய்துமுடிக்கிறார். உலகில் இவ்வாறான சில அதீத அறிவாற்றல் (Advanced Knowledge) பெற்றவர்களை காலத்திற்குக் காலம் அல்லாஹ் தோற்றுவிக்கின்றான்.

05 April 2012

முட்டை வந்ததா முதலில் கோழி வந்ததா?

“முட்டை வந்ததா முதலில் கோழி வந்ததா?” என்ற கேள்விக்கான விடையைப் பின்பு விவாதிப்போம். முதலில் முட்டையிலிருந்து எவ்வாறு கோழி வருகின்றது என்பதை விளக்கப்படங்களுடன் பார்ப்போம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

“முட்டை வந்ததா முதலில் கோழி வந்ததா?” என்ற கேள்விக்கான விடையைப் பின்பு விவாதிப்போம். முதலில் முட்டையிலிருந்து எவ்வாறு கோழி வருகின்றது என்பதை விளக்கப்படங்களுடன் பார்ப்போம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...