"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

29 October 2015

ஆணும் பெண்ணும் சமமானவர்களல்லர் – ஒரு உளவியல் பார்வை

ஆணையும் பெண்ணையும் படைத்த அல்லாஹ் திருமறையில் ஆணும் பெண்ணும் சரி சமமானவர்கள் அல்லர் என்று கூறுகின்றான். இந்த வசனம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் அடிப்படை வித்தியாசங்களைக் வேறுபிரித்துக் காட்ட விளைகின்றது. அத்தோடு இந்த வித்தியாசத் தன்மைதான் இருவரும் சேர்ந்து வாழ வழியமைக்கின்றது. ஆண் பெண்ணின் மீதும் பெண் ஆணின் மீதும் தேவையுடையவர்கள் என்பதை உண்ர்த்துகின்றது. ஆணோ, பெண்ணோ இருவரும் அரைகுறையானவர்கள். இருவரும் இணையும்போதுதான் அங்கு பூரணத்துவம் ஏற்படுகின்றது. திருமண வாழ்க்கையில் இந்த ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

My Birds Aviary

சிறு வயதிலிருந்தே செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமும் ஆசையும் இருக்கின்றது. தொலைக்காட்சி பார்ப்பதென்றாலும் உயிரினங்கள் தொடர்பாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைத்தான் அதிகம் விரும்பிப் பார்ப்பேன். Discovery Channel, Animal Planet போன்ற செனல்கள் எனக்கு அளாதிப் பிரியம். இந்த ஆர்வம்தான் என்னை இறை படைப்புகள் தொடர்பாக தேடவும் படிக்கவும் தூண்டியது. சிறு சிறு ஆய்வாராய்ச்சிகளும் செய்துள்ளேன். 
சிறுவர்களுக்கான மாதாந்த சஞ்சிகையான அகரம் சஞ்சிகையில் “அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள்” என்ற தலைப்பில் இது தொடர்பான கட்டுரைகளைத் தொடராக எழுதிவருகின்றேன். இதுவரை 85 தொடர்களை எழுதியுள்ளேன். அத்தோடு “படைப்பினங்களில் படைப்பாளனின் கைவண்ணம்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளேன். இந்த ஆர்வத்தின் தொடர் தற்போது வீட்டில் ஒரு மினி Zoo வையே வைத்துள்ளேன். நிறைய செல்லப்பிராணிகள் இருக்கின்றன. இந்த வீடியோவைப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

09 October 2015

இரத்தத்தில் இறைவன் வைத்துள்ள அற்புதங்கள்

மனித உடலை அல்லாஹ் வடிவமைத்திருக்கும் நேர்த்தியையும், அதிலுள்ள நுணுக்கங்களையும் சற்று உற்றுப்பார்த்தால் அதில் அல்லாஹ்வின் அருளையும் அவனது ஆற்றலையும் புரிந்துகொள்ளலாம். மனித உடலே இறை இருப்புக்கான ஓர் அத்தாட்சிதான். அல்லாஹ் கூறுகின்றான். سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ நிச்சயமாக (அவனே) உண்மையானவன் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், (ஏன்) அவர்களுக்குள்ளேயும் நாம் காண்பிக்கின்றோம். (41:53)

Related Posts Plugin for WordPress, Blogger...