"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

30 June 2011

படை நடுங்கவைக்கும் பாம்புகள்

உலகிலே மகிப் பெரிய பாம்பு தென் அமெரிக்க அனகொண்டாவும் வரிவரிகொண்ட ஆசிய மலைப்பாம்புமாகும். அனகொண்டா சுமார் 35அடி நீளம் கொண்டது. இது அமேசன் காட்டிலேயே அதிகமாகக் காணப்படுகிறது. இப்பாம்பு ஒரு முறையில் 33 குட்டிகள் ஈணும். அண்மையில் விலங்கியல் ஆய்வாளர்கள் கரீபியன் தீவொன்றிலிருந்து உலகிலேயே மிகச் சிறிய பாம்பினத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். இது சுமாராக 10cm நீளத்தைக் கொண்டது. ஆய்வாளர்கள் இதற்குLeptotyphiops   என்றும் Carlae என்றும் பெயரிட்டுள்ளனர். பாம்புகளில் மிகவேகமாக ஊர்ந்து செல்லக்கூடியது ஆபிரிக்கக் கறுப்பு மம்பாஎனும் பாம்பாகும். இது மணிக்கு 11Km வேகத்தில் செல்லும்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

அற்புதப் படைப்பு தும்பி

பூச்சியினங்களில் தும்பியினங்களே கூரிய பார்வைத் திறன் கொண்டவை. அதன் விசாலமான இரண்டு கண்களிலும் 30,000 லென்ஸ்கள் காணப்படுகின்றன. அதாவது தும்பிகளிடம் நாம் கானும் இரண்டு கண்களுக்குள்ளும் மொத்தமாக 30,000 சிறிய கண்கள் காணப்படுகின்றன. இந்த ஒவ்வொரு கண்ணும் துல்லியமான முறையில் செயற்பட்டு காட்சிகளை அப்படியே பிரதி பண்ணி மூளைக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன.எனவே பல மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் சிறிய அசையாப்  பொருளாயினும் இவற்றால் எளிதாகவும் விரைவாகவும் அதனை இனங்கான முடியும்.இது வல்ல நாயன் அவற்றிற்கு வழங்கிய ஓர் அற்புதமாகும்.

பஃபின் பறவைகளின் அற்புதம்

பபின் பறவைகளின் அலகு சற்றுப்பெரிதாகக் காணப்படுகின்றது. இதன் மூலம் இவை  நிறைய சிறிய மீன்களை அலகில் சேமித்து வைத்துக்கொண்டு பறந்து வந்து கூட்டை அடைகின்றன. பின்பு அலகிலுள்ள மீன்களை தமது குஞ்சுப் பறவைகளுக்கு இறையாகக் கொடுக்கின்றன. இவற்றால் சுமார் 62 சிறிய மீன்களை ஒரே முறையில் தமது அலகினுள் வைத்துக்கொள்ள முடியும். குஞ்சுப் பறவைகள் இளம் பருவத்தை அடைந்தும் தமது பெற்றோரிடமிருந்து பிரிந்து சுயமாக இறைதேடி வாழப் பழகிக்கொள்கின்றன. பொதுவாக ஒரு பஃபின் பறவை சுமார் 25 வருடங்ளே உயிர்வாழ்கின்றது.
மே/2011 அகரம் சஞ்சிகையில் பிரசுமானது.

மரங்கொத்திப் பறவை (wood pecker)

இவற்றின் உடலில் உள்ள மற்றுமொரு அற்புதம்தான் இவற்றின் நாக்கு. இது ஒரு மரங்கொத்தியின் அலகைவிட ஐந்து மடங்கு நீண்டதாகும். கறையான் எறும்பு போன்றவற்றின் புற்றுகளினுள் தனது நீளமான நாக்கைச் செலுத்தி இரையைப் பிடிக்கின்றன. இவற்றின் நாவில் வழுவழுப்பான ஒட்டும் தன்மைவாய்ந்த ஒருவகைத் திரவம் காணப்படுகின்றது. எனவே இதன்மூலம் பூச்சிகள் எளிதில் மாட்டிக்கொள்கின்றன. மேலும் இவற்றின் நாக்கு, அலகின் மேற்பகுதியில் நாசித்துவராத்துக்கு அருகாமையால் ஆரம்பமாகி மண்டையோட்டைத் தள்ளி, தொண்டை வழியாக வாயை அடைகின்றது. எப்போதும் சாதாரன நிலையில் உள்ள நாவு இரையைப் பற்றும்போது நீளமாகும்.

29 June 2011

இறைவனின் கைவண்ணம் (Photoes)

www.kute-group.blogspot.com

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

முதல் 10 இந்திய பணகாரர்கள்

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

பெரியார் தாசனிடம் ஒரு கேள்வி

பேராசிரியா் பெரியார் தாஸன் அவர்கள் இஸ்லாத்தை ஏற்று அப்துல்லாஹ் ஆக மாறிய பின் அண்மையில் முதன் முதலாக இலங்கைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் இவ்வாறு ஒரு கேள்விகேட்கப்பட்டது. ”நீங்கள் இதற்கு முன்பு கடவுளே இல்லை என்றுதானே கூறிவந்தீர்கள், தற்போது உங்கள் நிலைப்பாடு எப்படி?” என்று. அதற்கு அப்துல்லாஹ் தாசன் கூறிய பதில்  “இப்போதும் நான் கடவுளே இல்லை என்றுதான் கூறுகின்றேன். ஆனால் வல்லவன் அல்லாஹ்வைத் தவிர” என்றார்கள். அல்லாஹ் அவருக்கு அருள்புரிந்து தொடர்ந்தும் இந்நேரான பாதையில் நிலைத்திருக்க அருள்பாளிப்பானாக.

26 June 2011

உழைப்பில் நம்பிக்கை வை...

சில சிறுவர்கள் தமது சொந்த செவுக்காக தெருவோரமாய் பிளாட்போமில் அமர்ந்துகொண்டு, போகிற வருகிறவர்களது காளணிகளுக்கெல்லாம் போலிச் போட்டு காசு சேர்த்துக்கொண்டிருந்தார்கள். பாதைக்கு மறுபுறத்திலிருந்து தன் காரின் கண்ணாடியைப் பாதி கீழிறக்கி, அதனூடாகத் தண் நண்பர்களுக்கு, அச்சிறுவர்களைச் சுட்டிக்காட்டுகின்றார் ஒரு தனவந்தர். தனவந்தர் தனது நண்பர்களிடம் கூறினார்; “அவர்கள் எனது புதல்வர்கள். இன்று நான் செல்வந்தனாக இருக்கின்றேன். ஆனால் என்வாழ்க்கையும் அன்று இப்படித்தான் ஆரம்பமாகியது. உழைப்பில் நம்பிக்கை வைக்கும் எந்த ஏழையும் தோற்றுப் போவதில்லை என்பது என் அனுபவம். என் புதல்வர்களும் தங்கள் வாழ்வை ஏழைகளாகத் தொடங்கினால்தான் நியாயமாக இருக்கும்.” என்றார். இது வெறும் கற்பனைக் கதை என்று நினைத்துவிட வேண்டாம். இவ்வாறு கூறியவர்தான் “ஹென்றி போர்ட்”

25 June 2011

கூகில் ட்ரான்ஸ்லேட்டர் தமிழிழும்...

அனைவருமே அறிந்த விடயம்தான் கூகில் ட்ரான்ஸ்லேட்;டர். குறிப்பிட்ட சில மொழிகளிலிருந்து இன்னும் சில மொழிகளுக்கு எமக்குத்தேவையான சொல்லின் விளக்கத்தை மாற்றிப் பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு இலகு வழிமுறைதான் இது. தற்போது கூகில் நிறுவனம் வாரி வழங்கும் பல்வேறு சேவைகளில் இதுவும் ஒன்று.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
அனைவருமே அறிந்த விடயம்தான் கூகில் ட்ரான்ஸ்லேட்;டர். குறிப்பிட்ட சில மொழிகளிலிருந்து இன்னும் சில மொழிகளுக்கு எமக்குத்தேவையான சொல்லின் விளக்கத்தை மாற்றிப் பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு இலகு வழிமுறைதான் இது. தற்போது கூகில் நிறுவனம் வாரி வழங்கும் பல்வேறு சேவைகளில் இதுவும் ஒன்று.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

24 June 2011

இமாம் நாஸிருத்தீன் அல்பானி (வாழ்க்கைக் குறிப்பு)

சமகால இஸ்லாமிய அறிஞர்கள் அனைவராலும் அறியப்படக்கூடிய, பிரபல்யமான, தலைசிறந்த ஒரு அறிஞர்தான் அஷ்ஷெய்க் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள். இவர் ஹிஜ்ரி 1332 (1914)ல் பிறந்தார். அல்பேனியாவின் தலைநகரமான அஷ்கொடராவில் எளிமையானதொரு குடும்பத்தில் பிறந்தார். நாஸிருத்தீன் அல்பானி அவர்களின் தந்தை நூஹ் நஜ்ஜாதி அல்அல்பானி, கொன்ஸ்தாந்துநோபிள் என அழைக்கப்பட்ட இஸ்தான்பூலிலே மார்க்கக் கல்வியைப் பூர்த்திசெய்துவிட்டு அல்பேனியாவிலே சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இறை மறுப்புக்கொள்கையான நாத்திகம் அல்பேனியாவில் தடம் பதித்தபோது வெறுப்படைந்த நூஹ் நஜ்ஜாதி அவர்கள் குடும்ப சகிதம் சிரியாவின் தலைநகரான டமஸ்கஸிற்கு இடம்பெயர்ந்தார்.

22 June 2011

பொய்யுரைத்துத் தவறிழைக்கும் (முன்நெற்றி) நாஸியா

நாஸியா வழங்கும் தீர்மானங்களை வைத்தே உடல் அவயவங்கள் கருமமாற்றுகின்றன. இதுதொடர்பாக Essentials of anatomy and physiology என்ற கற்கை பின்வருமாறு விளக்குகின்றது. “தூண்டுதல், திட்டமிடுதல் மற்றும் ஒரு விடயத்தை ஆரம்பித்துவைத்தல் போன்ற செயற்பாடுகளை முன்நெற்றியே செய்கின்றதுஎன்கின்றது. எனவேதான் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்தும் பெரிய பெரிய குற்றங்களைச் செய்துகொண்டிருக்கும் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவர்களது மூளையின் முன்பகுதியில் உள்ள நாஸியாவை சத்திர சிகிச்சை மூலம் துண்டித்து அகற்றிவிடுகின்றனர். இதனால் அக்குற்றவாளி சுயமாகத் தீர்மானம் எடுத்து எதனையும் செய்யும் சக்தியிழந்து சொல்வதை மாத்திரம் செய்யும் ஒரு ரோபோ போன்று ஆகிவிடுகின்றான்.

டொனி பிளேயர் அல்குர்ஆனைக் கற்கின்றார்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் தான் தினமும் அல்குர்ஆனைக் கற்று வருவதாக பிரித்தானியாவின் “The Observer” என்ற சஞ்சிகைக்குக் கொடுத்த பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதற்காக மாத்திரமல்லாமல் அது ஒரு மகிப் பெரிய வழிகாட்டி நூல் என்ற வகையிலும் நான் அதனைப் படித்துவருகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரிட்டனின் தூதுவராகக் கடமையாற்றும் பிளேயர் அப்பகுதி மக்களின் மத நம்பிக்கைகள் தொடர்பாக பலதையும் அறிந்திருப்பது தனது பணிக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொனி பிளேயரின் மனைவியின் சகோதரியும் பிரபல ஊடகவியலாளருமான லோரன் பூத் கடந்த வருடம் இஸ்லாத்தைத் தழுவியமையும் இங்கு அவசியம் குறிப்பிடத்தக்கதாகும்.
  டொனி பிளயர்
லோரன் பூத்

பெண் பாக்கப் போறீங்களா? எச்சரிக்கை

மேகப்னா சும்மா அப்டி இப்டின்னு செய்றதுன்டு நெனச்சேன்.ஆனா நேத்திக்கு ஒரு மெயில் வந்திச்சி, பாத்துட்டு கதிகலங்கிப் போயிட்டேன்.   எந்திரன்ல ரஜினிக்கு போட்டங்கலே மேக்கப்பு, அதெல்லாம் சும்மா ஜுஜுபீயாம்.... அப்பிடியிருக்கு அது! அதான் உங்கள எல்லாம் எச்சரிக்க பண்ணலாம்னு ஒரு நல்ல எண்ணத்துல அத பதிவாவே போட்டுட்டேன்! மேக்கப்ப வெச்சி ஏதோ கொஞ்சம் செகப்பா காட்டலாம்னு பாத்திருக்கோம் ஆனா இது புது ரகமாவுல்ல இருக்கு! நீங்களும் பாருங்க.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)

19 June 2011

Facebook இன் ஆபத்தைத் தவிர்ந்துகொள்ள ஒரு வழி.

Facebook சமீபகாலமாக அனைவராலும் விருப்பத்துடன் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமாகும் (Social Network Website). இந்த தளத்தில் உறுப்பினராக உள்ள நீங்கள் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியாகஅதிகாரியாக,பணியாளராகமுதலாளியாக அல்லது ஆசிரியராகசமூக சேவகராககுடும்ப பெண்ணாகமாணவனாகமாணவியாக இப்படி ஏதோ ஒருவராக இருக்கலாம்.

16 June 2011

நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்... (கவிதை)

தாய், தகப்பன் கண் முன்னே
கணவன் உன் முன்னே
பிள்ளைகளும் பார்த்திருக்க
உடல் வேர்த்திருக்க கதறக் கதறக் கற்பழித்து
கூட்டு பலாத்காரம் புரியப்பட்ட
இளம் சோதரிகளே!
எம்மை மன்னித்துவிடுங்கள்...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...

ஆலிப் அலி (இஸ்லாஹி)

தாய், தகப்பன் கண் முன்னே
கணவன் உன் முன்னே
பிள்ளைகளும் பார்த்திருக்க
உடல் வேர்த்திருக்க கதறக் கதறக் கற்பழித்து
கூட்டு பலாத்காரம் புரியப்பட்ட
இளம் சோதரிகளே!
எம்மை மன்னித்துவிடுங்கள்...
நாம் இன்னும் பிஸியாக இருக்கிறோம்...

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

சுவைமிகு கனிகள்

முதலில் வித்திலிருந்து மரம் வந்ததா? அல்லது மரத்திலிருந்து வித்து வந்ததா?” என்று பலரும் கிண்டளாகக் கேட்பதை நீங்கள் செவியுற்றிருப்பீர்கள். உண்மையில் வித்து விருட்சமாகி, விருட்சத்தில் பூப் பூத்து, பூ காயாகி, காய் பழமாகி, பழத்திலிருந்து வித்துருவாகி, அவ்வித்து மீண்டும் விருட்சமாகி... இத்தொடர் கதைக்கு முடிவே இல்லை. இக்கதை அல்லாஹ் இப்பூவுலகைப் படைத்தது முதல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது.

12 June 2011

மாற்று ஏற்பாடு

அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள எப்போதும் இணைந்தே வலம் வந்தன. பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும். நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது. கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை. இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.
ஆனால், மிக வித்தியாசமான அபூர்வமான ஒரு விடயத்தையும் அவர் செய்தார். கண்தெரியாத குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார். மணியோசை கேட்டு ஊனமுற்ற குதிரை, அடுத்ததைத் தொடர்ந்து வலம்வரும். அந்த உரிமையாளர் செய்ததைத்தான் இறைவனும் செய்கின்றான். ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை செய்துவைத்துள்ளான். நன்றி : மீள்பார்வை.

Related Posts Plugin for WordPress, Blogger...