"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

19 August 2022

சுலைமான் நபியின் ஹுத் ஹுத் பறவை | Hoopoe

ஹுத் ஹுத்என்றதுமே இப்பறவையையும் அதுதொடர்பாக அல்குர்ஆனில் வந்துள்ள சம்பவமும் உங்கள் ஞாபத்திற்கு வந்திருக்கும். சூரா அந்நம்லில் சுலைமான் நபியவர்களின் சரித்திரத்தைப் படிக்கும்போது ஹுத் ஹுத் என்ற இப்பெயரைக் கண்டுகொள்ளலாம். இப்பறவைக்கு அல்லாஹ் கொடுத்துள்ள புத்திக் கூர்மையையும் அதன் வாழ்க்கை முறைகளையும் இத்தொடரில் கற்றுக்கொள்வோம்.

ஹுத் ஹுத் என்ற பெயரில் இப்பறவை சுலைமான் நபியவர்கள் காலத்திலிருந்தே திரிபுபடாமல் அழைக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவத்தை அல்லாஹ் நபியவர்களுக்குக் கூறியதிலிருந்து, அல்குர்ஆனில் இடம்பெற்றிருப்பதிலிருந்து சுமார் 1400 ஆண்டுகளாக இப்பெயர் நிலைத்திருப்பதும் அற்புதம்தான். இதன் அறிவியற் பெயர் Upupa epops  என்பதாகும். ஆங்கிலத்தில் “Hoopoe” என்றும் தமிழில் கொண்டலாத்திஎன்றும் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் Hoopoe என்ற இப்பெயர் வரக் காரணம் அதன் குரலெழுப்பும் சப்தம்தான். இவை சப்தமிடும்போது ஹுப்… ஹுப்… என்ற ஒலியே வெளிப்படும். இதனாலயே இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவியலில் விலங்கினங்களின் குரலொலியை வைத்துப் பெயரிடும் முறை Onomatopoetic எனப்படுகின்றது. தமிழில் கொண்டலாத்தி என்பதற்குக் காரணம் அது தன் தலைமேல் இருக்கும் கொண்டையை விரித்து நடனமாடுவதாலாகும்.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) 

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...