புகைபிடிப்பவர்களுக்கு அவர்களது வழமையான நடவடிக்கைகளில் மூன்றில்
ஒரு பகுதி மறந்துவிடுவதாக புதிய ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இதனை மருத்துவர்
டொம் ஹெபர்னனும் அவரது குழுவும் மேற்கொண்ட ஆய்விலிருந்து உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாய்வுக்காக
புகை பிடிப்படிவர்கள், அதை நிறுத்தியுள்ளவர்கள் மற்றும்
புகையே பிடிக்காதவர்கள் என மூன்று பிரிவினர்களாகப் பிரித்து ஆய்வை நடாத்தியுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொண்ட நினைவாற்றல் சோதனையில் புகை பிடிப்பவர்களுக்கு 59 சதவிகித ஞாபக சக்தியும் புகை
பிடிப்பதைக் கைவிட்டவர்களுக்கு 74 சதவிகிதமான ஞாபக சக்தியும் புகையே பிடிக்காதவர்களுக்கு 82 சதவிகித ஞாபக சக்தியும் இருப்பது
தெரிய வந்தது. புகைபிடிப்பதால் ஞாபக சக்தியென்ன உயிரே போகும் என்று தெரிந்திருந்தும்
குடிக்கிறார்களே இந்த அபலை மனிதர்கள்...
ஆலிப்
அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...