"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 October 2009

"கருக்கலைப்பு" சவக்காடாகி வரும் கருவறைகள்

அல்ஹஸனாத் சஞ்சிகையில் பிரசுரமாகியது.

பல்பரிமான அறிவியல் வளர்ச்சியால் இன்று மனிதன் இன்னோரன்ன துறைகளில் பல்வேறு வசதிவாய்ப்புகளைப் பெற்றுவருகிறான். சடரீதியாக மாத்திரமன்றி சிந்தனா ரீதியாகவும் ஜனநாயகம், மனித உரிமை, சமூகவிடுதலை போன்ற பல்வேறு அம்சங்களில் முதிர்ச்சியடைந்துள்ளான். எனினும் இந்த முன்னேற்றப் பாதையில் வழிகாட்டியாக இறை சட்டதிட்டங்களைக் கைக்கொள்ளாது மனித மனோ இச்சைகளை எடுத்துக்கொண்டமையால் இன்று உலகளாவிய ரீதியில் அனாச்சாரங்களும் அழிச்சாட்டியங்களும் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் அரங்கேறிக்கொண்டிருப்பதனைக் காணக்கூடியதாயுள்ளது.

அந்தவகையில் இன்று சர்வதேச ரீதியாக, குறிப்பாக இன்றைய நாகரீக விரும்கிகளின் கனவு தேசமாக விளங்கும் மேற்குநாடுகளில் நடைபெறும் கருக்கலைப்பு தொடர்பாகவும் கருக்கலைப்பு செய்வதற்கான காரணிகள் பற்றியும் அதன் விளைவுகள் குறித்தும் சற்று விரிவாக விளங்கிக்கொள்வோம்...

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

10 October 2009

“ரிப்கா பாரி” வெளிக்கொணரப்படாது மூடிமறைக்கப்படும் உண்மைகள்

“ரிப்கா பாரி” அண்மையில் பத்திரிகைகளினதும் தொலைக்காட்சி, வானொலிச் செய்தியறிவிப்புளினதும் இணையத் தளங்களினதுமாக சர்வதேச பேசுபொருளாகக் காணப்பட்ட ஒரு பெயர். நாமனைவரும் அறிந்த விடயம். இவ்வாறு இப் பதினேழு வயது யுவதி உலகளவில் பிரபலமாவதற்கு பெரிதாக ஒன்றும் சாதனைகள் செய்துவிடவில்லை. இஸ்லாத்தை விட்டு விட்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவிக்கொண்டமைதான் இவ்வாறு இவர் பிரபல்யம் பெறக் காரணம். இந்த யுவதி மதம்மாறிச் சென்றதைச் சாட்டாகவைத்துக்கொண்டு ஊடகங்கள் இஸ்லாம் மிகப் பயங்கரமானதொரு கொள்கை. பெண்களுக்கு அதில் எந்த சுதந்திரமுமில்லை. அதனால்தான் மக்கள் இஸ்லாத்தைவிட்டும் விரண்டோடுகின்றார்கள் போன்ற புரளிகளை மக்கள் மத்தியில் கிளப்பிவிட்டுள்ளன.

03 October 2009

மர்வா அல் ஷெர்பினி: 'நீதி'யின் முன் 'அநீதி'யிழைக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்!

திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது. மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது....

ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன. இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.....ஆலிப் அலி (இஸ்லாஹி)

02 October 2009

சவாலாகிவரும் தொலைக்காட்சியின் ஆதிக்கம்

தொலைக்காட்சியின் பரவலாக்கம் இன்று உலகம் பூராகவும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. நாளுக்கு நாள் நவீன தொழிநுட்ப முறைகளைக்கொண்டு புதுப்புது வடிவிலான தொலைக்காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றுடன் சேர்ந்தாற்போல் தொலைக்காட்சி அலைவரிசைகளின் பெருக்கமும் அவற்றுக்கிடையில் நிகழும் போட்டித்தன்மையும் தம்பால் ரசிகர்களை ஈர்க்கவேண்டும் என்பதற்காகப் புதுப்புது நிகழ்ச்சிகளைத் தயாரித்து அறிமுகம்செய்கின்றன. எவ்வாறாயினும் உலக நடப்புகளைப் பார்த்தறிவதற்கும் அறிவை விருத்து செய்வதற்குமான சிறந்த ஊடகம் தொலைக்காட்சி என்பது ஒரு பொதுவான நோக்கு!
எனினும் இன்றைய தொலைக்காட்சிகளினால் விளையும் அனுகூலங்களைவிடவும் பிரதிகூலங்களே அதிகமென சமூகவியலாளர்களும் உளவியலாளர்களும் கருதுகின்றனர். இன்று தொலைக்காட்சிகள் ஒவ்வொரு வீட்டையும் ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கின்றன. மனிதனின் உடை, நடை, பாவனைகள்கூட தொலைக்காட்சியினாலேயே தீர்மானிக்கப்பட்டு வருகின்றது. சமூகத்தில் தொலைக்காட்சியின் பிரதிகூலங்களினால் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது சிறுவர்களென நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே இது குறித்து இக்கட்டுரையில் சற்று ஆராய்வோம்... ஆலிப் அலி (இஸ்லாஹி)

Related Posts Plugin for WordPress, Blogger...