"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

31 May 2019

பாரம் சுமக்கும் கழுதைகள்கழுதை, Donkey, பூBருவாஎன்று எந்தப் பாசையில் சொன்னாலும் யாரையாவது திட்டுவதுபோன்றுதான் தோன்றும். ஏனெனில் இன்றளவில்  அந்தச் சொல் கழுதைகளுக்குப் பயன்படுவதைவிட மனிதர்களுக்குத்தான் அதிகளவில் பயன்படுகின்றது. கழுதைகள் உண்மையிலேயே தோற்றத்திலும் குணவியல்புகளிலும் விசித்திரமான விலங்குதான். இத்தொடரில் கழுதைகளின் சுவாரஷ்யமான சில பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A

கழுதை, Donkey, பூBருவாஎன்று எந்தப் பாசையில் சொன்னாலும் யாரையாவது திட்டுவதுபோன்றுதான் தோன்றும். ஏனெனில் இன்றளவில்  அந்தச் சொல் கழுதைகளுக்குப் பயன்படுவதைவிட மனிதர்களுக்குத்தான் அதிகளவில் பயன்படுகின்றது. கழுதைகள் உண்மையிலேயே தோற்றத்திலும் குணவியல்புகளிலும் விசித்திரமான விலங்குதான். இத்தொடரில் கழுதைகளின் சுவாரஷ்யமான சில பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A

உங்கள் கருத்து:

27 May 2019

லைலத்துல் கத்ர் – ஓர் இரவா? ஒரு முழு நாளா? ஆய்வுஉலகில் பெரும்பாலோர் லைலத்துல் கத்ர்ஒரு இரவு என்றே கூறி வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் ஆதாரம்: அரபி மொழியில் லைலத்துஎன்றால் இரவுஎன்று பொருள். அச்சொல்லைக் கொண்டு இறைமறை திருக்குர்ஆனில் லைலத்துல் கத்ர்என அல்லாஹ் கூறியிருப்பதாலும், இறைத் தூதர் நபி (ஸல்) அவர்களின் நபிமொழி (ஹதீஸ்)களிலும் அவ்விதமே குறிப்பிடப்படுவதாலும் லைலத்துல் கத்ர்என்றால் = கண்ணியமிக்க (கத்ர்) இரவு என்றே கூற வேண்டுமென வாதிடுகின்றனர். மேலும் தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக திருக்குர்ஆனின் பற்பல தமிழ் மற்ற மொழி பெயர்ப்புக்களைக் காட்டுகிறார்கள். அம்மொழி பெயர்ப்புக்களிலும் அவ்விதமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலதிகமாக திருக்குர்ஆனில் வரும் எல்லா இடங்களிலும் லைலத்துஎன்பதற்கு இரவு என்றே பொருள் கொள்ள வேண்டுமென அடம் பிடிப்போரும் இவர்களில் உள்ளனர். உலகில் பெரும்பாலோர் லைலத்துல் கத்ர்ஒரு இரவு என்றே கூறி வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் ஆதாரம்: அரபி மொழியில் லைலத்துஎன்றால் இரவுஎன்று பொருள். அச்சொல்லைக் கொண்டு இறைமறை திருக்குர்ஆனில் லைலத்துல் கத்ர்என அல்லாஹ் கூறியிருப்பதாலும், இறைத் தூதர் நபி (ஸல்) அவர்களின் நபிமொழி (ஹதீஸ்)களிலும் அவ்விதமே குறிப்பிடப்படுவதாலும் லைலத்துல் கத்ர்என்றால் = கண்ணியமிக்க (கத்ர்) இரவு என்றே கூற வேண்டுமென வாதிடுகின்றனர். மேலும் தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக திருக்குர்ஆனின் பற்பல தமிழ் மற்ற மொழி பெயர்ப்புக்களைக் காட்டுகிறார்கள். அம்மொழி பெயர்ப்புக்களிலும் அவ்விதமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலதிகமாக திருக்குர்ஆனில் வரும் எல்லா இடங்களிலும் லைலத்துஎன்பதற்கு இரவு என்றே பொருள் கொள்ள வேண்டுமென அடம் பிடிப்போரும் இவர்களில் உள்ளனர். 

உங்கள் கருத்து:

15 May 2019

மைனா பேசும் பறவை

நாமனைவரும் அறிந்த எமக்குப் பழக்கமான பறவைதான் மைனா. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மைனாக்களின் சப்தங்களைக் கேட்கலாம். அவ்வளவு பிரபலமானவை. இவை ஸ்டார்லிங்  எனும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. கிழக்காசிய நாடுகள்தான் அதுவும் இந்தியா, இலங்கை நாடுகள்தான்  இவற்றின் தாய் பூமி. ஒரு காலத்தில் இங்கிருந்து அமெரிக்க நாடுகளுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. தமிழ், சிங்களம், ஆங்கிளம், மலயாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் இது மைனா – Myna என்றே அழைக்கப்படுகின்றது. இதன் சரியான தமிழ்ப் பெயர் நாகணவாய்ப்புள் என்பதாகும். இலக்கியங்களில் சிறுபூவாய் என அழைக்கப்படுகிறது. சிறுவர் இலக்கியப் பாடல்களிலும் காதல் பாடல்களிலும் கூட மைனாக்கள் இடம்பிடித்திருப்பது இவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

Related Posts Plugin for WordPress, Blogger...