அப்பிள்
நிறுவனம் என்றும் தனது தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வித்த்தில் புதுப் புதுப் படைப்புகளை
வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக இம்மாதம் (ஏப்ரல்) 10ம் திகதி உலகிலேயே
மிகவும் மெலிதான Mac Book Air 2015 லெப்டொப் கணினியை வெளியிட்டுள்ளது. பாவனைக்கும் பயணத்திற்கும்
இலகுவான அமைப்பில் மிக மெலிதான வடிவத்தில் கண்கள்ளைக் கவரும் வண்ணத்தில் பல்வேறு சிறப்பம்சங்களையும்
கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆலிப் அலி(இஸ்லாஹி)

லொகிட்ரோன்
ஸ்மார்ட் போனிலிருந்து ஒரு குறுந்தகவலை (sms / Command) அனுப்புவதன் மூலம் உலகின் எந்த
மூலையிலிருந்தும் தமது வீட்டினது கதவினைத் தாழிடவும் திறந்து கொள்ளவும் முடியும். இதனை
அமெரிக்காவின் எபிகி இன்க் (Apigy.inc) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் லொஸ்வெகாஸ்
நகரில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியில் CES – Consumer Electronics
Show கண்காட்சியகத்தில் வெளியிடப்பட்டது.
ஆலி்ப் அலி (இஸ்லாஹி)

விண்கற்கள் பூமியுடன் மோதி பூமி
அழிவதுபோன்றும்,கடல் பெருக்கெடுத்து நகர்ப்புறத்தினுள் நுழைவதுபோன்றும்
சூராவளிக் காற்று சுற்றிச் சுழன்றடிப்பதுபோன்றும்
எரிமலைகள் குழம்புகளைக் கக்கி வெடித்துச் சிதறுவதுபோன்றும்,வேற்றுக் கிரகங்களுக்குச்
சென்று கிரக வாசிகளுடன் போர்புரிவதுபோன்றும் கனவுக்குள் கணவுகாண்பது போன்றும் இன்று
மனிதனின் அபூர்வமான கற்பனைகளோடும் இத்தொழில்நுட்பங்களின் உதவிகளோடும் வித்தியாச வித்தியாசமான
திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
இது விண்டோஸ் 7-இல் இருக்கும் ஒரு பயனுள்ள வசதி என்று கூறலாம். அந்த வசதியின் பெயர் "முந்தைய பதிப்புகள்",ஆங்கிலத்தில் Previous Version எனப்படும்.
Previous Version?
Previous Version என்பது கோப்புகளின் முந்தைய பதிப்பு ஆகும், சுருக்கமாக ஒரு பெட்டகம் என்று வைத்துக்கொள்வோம்.இந்த வசதியின் மூலம் நீங்கள் நிரந்தரமாக ஒரு இயக்கியில் (local disk) அழித்த கோப்புகளை எளிதாக மீட்க முடியும்! இது நீங்கள் ஒவ்வொரு முறை அந்த இயக்கியில் அழித்த அல்லது திருத்தம் செய்த கோப்புகளை மீட்டிக் கொண்டே வரும் அதனோடு அந்நேரத்தில் அந்த இயக்கி எப்படி இருந்ததோ அப்படியே காட்டும் அதனை நீங்கள் திறந்து /நகலெடுத்து/மீட்டிக் கொள்ளலாம். இது எப்படி வேலை செய்கிறது என்பதை Read More... வை க்ளிக் பண்ணிப் பாருங்கள்...
குறிப்பு: எனக்கு வந்த மடல் நண்பர்களுக்கு பயன்படும் என்று பதிகின்றேன்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

நவீன திரைப்படக் கலாசாரமானது
பலரையும் தன்வயப்படுத்தும் அதீத ஆற்றலைக் கொண்டுள்ளது. சிறியோர் முதல் முதியோர்வரை
அனைவரையும் இழுத்துக் கட்டிப்போடும் பல்வேறு உத்திகளை இன்றைய திரைப்படங்கள் கையாள்கின்றன.
திரைப் படப்பிடிப்புத் துறையில் வளர்ச்சியுற்றிருக்கும் பல்வேறு தொழில்நுட்ப முறைகளே
இதற்குக் காரணம் எனலாம். ஆரம்ப காலங்களில் இருந்த கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிகள், அதில் ஒளிபரப்பப்பட்ட
கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள், பேசும் திரைப்படங்கள் அதன்பின்னர் வெளிவந்த வண்ணத் தொலைக்காட்சிகள்
வண்ணத் திரைப்படங்கள் என திரைப்படங்களின் வளர்ச்சி துரிதமாக எழுச்சியுற்று வந்துள்ளது.
அத்தோடு இன்று LCD, LEDமற்றும்3D தொழில்நுட்பங்களில் மலிந்துபோயிருக்கும் தொலைக்காட்சிகளாலும்
திரைப்படத் தயாரிப்புகள் முன்பைவிட அதிகரித்துள்ளன.
இவ்வாக்கத்தை எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரித்துள்ளேன்.

கூகுளின் ஒபீஸியல் ப்லொக் தரும்
மற்றுமொரு அற்புதமான வசதி. கலிபோனியா தேசிய பூங்காவை உங்கள் வீட்டிலிருந்துகொண்டே அதன்
பாதைகளில் உலவி உலவி பார்த்து ரசிக்க வேண்டுமா? இதோ இந்தத் தளத்தை தரிசித்துப் பாருங்கள்.
படங்களை முப்பரிமானத்தில் எடுத்து எமக்கு விரும்பியவாறு அவற்றை வடக்கு, கிழக்கு, தெற்கு,
மேற்கு மற்றும் மேல், கீழ் என எல்லாத் திசைகளிலும் திருப்பித் திருப்பிப் பார்க்க முடியுமான
அற்புத வசதி. கீழே உள்ள ரிலேட்டட் லின்க்கை க்ளிக் செய்யவும்.

சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பின் வழியாக இப்பேரண்டம் உருவானது. அதன்பின் அண்டத்தில்
காணப்பட்ட நுண் துகள்கள் ஒன்றுசேர்ந்தே அணுக்களும் கோள்களும் நட்சத்திரங்களும் உருவாகின
என்பது விஞ்ஞானிகளின் கூற்று. எவ்வாறு இம் மூலக்கூறுகள் இணைந்து துல்லியமான வடிவமைப்புக்கள்
உருவாகின அல்லது சந்திரன்,
பூமி, சூரியன், நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், கருந்துளைகள், விண்
பொருட்கள், இன்னும் என்னென்னவோ மர்மங்கள் இவற்றையெல்லாம் உள்ளடக்கி இயங்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்? எப்போது? எப்படி?என்பதுதான்
பல்லாண்டுகாலமாக விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் குழப்பிக்கொண்டிருந்த கேள்வி.

தகவல் பரிமாற்றத்தின்
ஜாம்பவானாகத் திகழும் உலகளாவிய வலைப்பின்னல்தான் இணையம். பாவனையாளர்களையும் தகவல்களையும்
கணினிகளையும் பிணைத்து இன்றைய தொழில்நுட்ப உலகிலே ஒரு பிரம்மாண்டமான தகவல் புரட்சியை
நடாத்தி வருகின்றது. இணையம் எமது அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
சிறியோர் முதல் முதியவர்கள் வரை அனைவரது தேவையும் இணையமாக மாறும் காலம் வெகு தொலைவில்
இல்லை. நகர்ப்புற மற்றும் படித்த சமூகத்திடம் இத்தேவை வயது வரையறையின்றி சகல மட்டத்திலும்
காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

மனிதன் இன்னும் தனது மூளையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவில்லை. சாதாரண மனிதர்கள்
7 சதவீதமும் அறிஞர்கள் மற்றும்
சிந்தனையாளர்கள் 10 சதவீதமும் விஞ்ஞானிகள்
12 சதவீதமும்தான் மூளையைப் பயன்படுத்துகின்றனர்.
மூளையை இதுவரை கூடுதலாகப் பயன்படுத்தியவர் எல்பர்ட் ஐன்ஸ்டீன். இன்னும் மூளையில் 88 சதவீதமான அளவு பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கின்றது.
பயன்படுத்திய 12 சதவீதத்திற்கே இத்தனை
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளுமென்றால் மீதமாக உள்ள 88 சதவீதத்துடன் சேர்த்து முழு அளவில் மூளையைப் பயன்படுத்தினால்
என்னெ;ன கண்டு பிடிப்புகளெல்லாம்
வளர்ந்திருக்குமோ...?

ஆணின் துணையின்றி பெண்ணின் உயிர்கலமொன்றை மாத்திரம் பயன்படுத்தி அப்பெண்ணையே ஒத்த குழந்தையொன்றை உருவாக்கும் Cloning முறையை விஞ்ஞானம் கண்டுபிடித்துவிட்டது. தற்போது ஆண் துணையின்றி பெண்ணை மட்டும் துணையாகக்கொண்டு குழந்தை உருவாக்குவதுபோலவே இன்னும் சில தசாப்தங்களில் மனிதனது ஆதாரமே இன்றி இன்னொரு மனிதனை உருவாக்கப்போவதாக விஞ்ஞனிகள் தம்பட்டமடித்துக்கொள்கின்றனர். மனிதனே மனிதனைப் படைக்க முடியுமாயின் கடவுள் எதற்கென்று கேள்வியும் எழுப்புகின்றார்கள்.

பின்னர் இச்செயல்முறை காய், பழவகைகளிலும் மரக்கரி, கீரை வகைகளிலும் செய்யப்பட்டு வித்தியாசமான வடிவங்கள் வித்தியாசமான புதுமைகள் பெறப்பட்டன. உதாரணமாக மல்லிகை வாசத்தையுடைய தாமரைப் பூ, பச்சை நிறத்திலான மல்லிகைப் பூ, சதுர, செவ்வக வடிவிலான பழங்கள், இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு பறித்த தக்காளிப்பழம் தற்போது பறித்ததுபோன்று பளபளப்பாக இருப்பதற்கான ஏற்பாடு, பூனையின் முகத்தோற்றத்தில் மீன்கள், உடலில் மயிரோ இறக்கையோ இல்லாத கோழிகள், வரிக்குதிரையை ஒத்த கங்காருகள் என பலதையும் உற்பத்திசெய்ய முடியுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாம் மனிதனின் வயதைக் கணிப்பிடுவது போலவே அவனது புத்தியின் வயதையும் கணிப்பிட முடியும். இது மூளை வயது (Mental Age)எனப்படுகின்றது. முப்பது வயதுள்ள ஒருவரின் மூளைத் திறன் 12வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 30வயதுடைய அவரின் மூளை வயது 12என்றே கொள்ளப்படும். அவ்வாறே 12வயதுடைய ஒரு சிறுவனின் மூளைத்திறன் முப்பது வயதுடைய ஒருவரின் மூளைத்திறனை ஒத்திருந்தால் 12வயதுடைய அச்சிறுவனின் மூளைத்திறன் 30என்று கொள்ளப்படும்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

சீனாவில் திருட்டு CD மற்றும் DVDகள் மிகப் பிரம்மாண்டமான அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. அமெரிக்காவில் பதிப்புரிமை செய்யப்பட்ட திரைப்படங்களும்,இசை அல்பம்களும்,கணினி மென்பொருட்களும் அதிகளவில் சீனாவில் பிரதியாக்கம் செய்யப்பட்டு விற்பனைசெய்யப்பட்டுவருவதாக அமெரிக்க அரசாங்கம் குற்றஞ்சாட்டுகின்றது. ஒவ்வொருவருடமும் இத்திருட்டு வியாபாரத்தினால் மாத்திரம் அமெரிக்கா பில்லியன் கணக்கான டொலர்களை இழந்துவருவதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் சீனாவுக்கு எதிராகத் தாம் முறையிடப் போவதாக அமெரிக்க நீண்ட நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கட் போட்டிகளில் மிக நுணுக்கமான கட்டங்களைப் படமெடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுவது Ultra Slow motion கேமெராக்கள் தான். இந்த வகை கமெராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷொட் வரை எடுக்க கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் ஷொட்களை எடுக்கக்கூடிய கமெராக்கள் தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவந்தன. இந்த கமெரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு ஒரு பொருளைத் துளைத்துக்கொண்டு செல்வதை கூட மிகத் துல்லியமாக, எளிதாக படம் பிடிக்க முடியும். ஆனால் இதையெல்லாம் மீறி மிக மிக மிகத் துல்லியமான முறையில் வினாடிக்கு 1 ட்ரில்லியன் ப்ரேம்களைப் படம்பிடிக்கக்கூடிய புதிய கமெராவை இந்திய MIT விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.