"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 February 2011

இயல்பூக்கம் + அத்தாட்சிகள் = இறையிருப்பு

மனிதன் இவ்வுலகில் படைக்கப்படுவதற்கு முன்பு அல்லாஹ் அவனை ரூஹாக ஆலமுல் அர்வாஹில் படைத்து தன்னை இரட்சகனாக ஏற்கும்படி ஓரு வாக்குறுதியை வாங்கியுள்ளான். அவ்வாக்குறுதிதான் இவ்வுலகில் மனிதனிடம் இறைவன் இருக்கின்றான் என்ற உள்ளுணர்வாக, இயல்பூக்கமாக வெளிப்படுகின்றது. எவ்வாரெனின் மனித இயல்பு கற்றலோ கற்பித்தலோ இன்றி காரண காரிய விதியை ஏற்றுக்கொள்கின்றது.
காரண காரிய விதியென்பது எல்லா நிகழ்வுக்கும் பின்னால் ஒரு காரணமுண்டு. காரணமின்றிக் காரியமில்லை. செயல்களுக்குப் பின்னால் செய்தவன் ஒருவன் இருக்கின்றான். எதுவம் காரணமின்றித் தோன்றாது. இந்த விளக்கமே காரண காரிய விதியாகும்.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

22 February 2011

காட்டுத் தீயாக மக்கள் புரட்சி

அரபு பிரதேசத்தில் துனீசியா மக்கள் எழுச்சியினைத் தொடர்ந்து எகிப்து, யெமன், ஓமன், பஹ்ரைன், மொரோக்கோ, ஈரான், சிரியா, லிபியா என அரபுலகம் முழுவதும் மக்கள் எழுச்சி வேகமாகப் பரவி வருகிறது. மொத்தத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ, மற்றும் வளைகுடா அரபு நாடுகளான ஜோர்டான், சிரியா, செளதி அரேபியா, ஏமன், எகிப்து, பஹ்ரைன், ஈரான் ஆகிய 10 நாடுகளில் அரசுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் பரவி உள்ளது. இதில் லிபியா, பஹ்ரைன், ஈரான், ஏமன், ஆகிய நாடுகளில் கலவரம் மோசமாக வெடித்துள்ளது. செளதி அரேபியாவில் சிறிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இலங்கையின் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு.

இலங்கை வரலாற்று நெடுகிலும் மேற்குலக நாடுகளின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டே வந்துள்ளது. 1505 முதல் 1658 வரை போர்த்துக்கேயரும் 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தர்களும் 1796 முதல் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி வரை ஆங்கிலேயர்களும் இலங்கை மண்ணை ஆண்டு வந்துள்ளனர். இவ்வாறு இலங்கை பல்வேறு ஆக்கிரமிப்புகற்கு உட்பட்டபோதிலும் அதில் இன்னபல அனுகூலங்களும் சேர்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆலிப் அலி (இஸ்லாஹிய்யா வளாகம்.)

15 February 2011

சந்திரனில் அற்புதங்கள்

பிற கோள்களைவிடவும் சந்திரனை நாம் இரவு வானில் தெளிவாகக் காண முடியுமானபோதிலும் உலகில் யாரும் இருவரை நேரடியாகக் காணாத ஒரு பக்கமும் சந்திரனுக்கு உண்டு. அதாவது எப்போதும் சந்திரனின் ஒரே முகப்பக்கம்தான் இரவு நேரங்களில் பூமியை நேபக்கியிருக்கின்றது. புவிச் சுழற்சி மற்றும் சுற்றுகையினாலும் சந்திரனின் சுழற்சி மற்றும் சுற்றுகை என்பனவற்றாலும் சந்திரனின் மறுபக்கத்தை எம்மால் நேரடியாகக் காண முடியாதுள்ளது. 1959ஆம் ஆண்டில் ரஷ்யாவின் லூனா- IIIஎன்ற விண்களமே முதன் முதலில் சந்திரனின் மறுபக்கத்தைப் படமெடுத்து எம்மாலும் அதனைப் பார்க்கக்கூடிய விதத்தில் செய்தது. (படம்)
அல்லாஹ் சந்திரன் உட்பட அனைத்துமே குறிப்பிட்டதொரு தவணைவரை செல்வதாகக் குறிப்பிடுகின்றான். சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தி வைத்திருக்கின்றான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றுக்கென) குறிப்பிட்டதொரு தவணைப்படியே செல்கின்றன.”(35:13)(39:5)

11 February 2011

ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் புரட்சி

அரபு நாடுகளின் சர்வாதிகார அடக்குமறை ஆட்சிக்கெதிராக வீருகொண்டெழுந்துள்ள மக்கள் புரட்சி இன்னும் இன்னும் சூடுபிடித்துக்கொண்டே வருகின்றது. முப்பதுஇ நாட்பது  வருடங்களாக உள்ளுக்குள்ளே அமுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த மக்களின் உளக் குமுரல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எரிமலையாக வெடித்துச் சிதறிப் பெருக்கெடுத்துப் பிரளயமாய் ஓடுவதை இன்று உலகமே பார்த்துக்கொண்டிருக்கின்றது.
டியுனீஸியாவில் ஸைனுல் ஆப்தீன் பின் அலியின் 23 வருட அடக்குமறை ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி (ஜெஸ்மின் புரட்சி) வெடித்ததிலிருந்து காட்டுத்தீபோல் பிற நாடுகளுக்கும் புரட்சிச் சிந்தனைகள் பரவிவருகின்றன.

அல்குர்ஆன் கூறும் முளையவியல் அற்புதம்

குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் (பெண்ணின் மார்பகங்களுக்கு மேல்) நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது.” (86:6,7)
ஒருமுறை யூத மதத்தைப் பின்பற்றும் ஒருவர் நபி (ஸல்) அவர்களைப் பார்த்து ஏ முஹம்மதே! மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ஓ யூதனே! மனிதன் ஆணினதும் பெண்ணினதும் கலப்புத் துளியிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான்என்றார்கள். உடனே அந்த யூதர் முன் வந்த நபிமார்களும் இவ்வாறுதான் கூறினார்கள்என்றார்.” (முஸ்னத் அஹ்மத்)

Related Posts Plugin for WordPress, Blogger...