*பிரம்மாண்டமான பிரபஞ்சம்.*
எமது பிரபஞ்சம் நன்றாகக்
காற்று நிரப்பப்ட்ட ஒரு பலூனைப் போன்ற மிகப் பிரம்மாண்டமானதொரு வெளி. இது ஒவ்வொரு வினாடியும்
300,000 கிலோ மீட்டர் (ஒளியின்) வேகத்தில்
விரிவடைந்துகொண்டிருக்கின்றது. இப்பிரபஞ்சத்தில் 300 மில்லியன்களுக்கும் அதிகமான கெலக்ஸிகள் காணப்படுகின்றன.
கெலக்ஸி என்பது கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் அல்லது ஞாயிற்றுத் தொகுதிகளின் குவியல்
என்று கூறலாம். 300 மில்லியன்களுக்கும்
அதிகமான கெலக்ஸிகளில் பல்வீதி (Milky way) என்றழைக்கப்படும் ஒரு கெலக்ஸியில்தான் நாம் இருக்கின்றோம். இந்த கெலக்ஸியில் மாத்திரம்
250 பில்லியன்களுக்கும் அதிகமான
நட்சத்திரங்கள் (சூரியக் குடும்பங்கள்) இருக்கவேண்டுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அவற்றில் ஒன்றுதான் எமது சூரியக் குடும்பம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
பல்வேறு வண்ணங்களில் உள்ள பொருட்களை நாம் பார்ப்பதென்பது அவற்றின்
மீது விழும் ஒளி தெரிப்படைந்து நமது கண்களில் வீழ்வதால்தான். ஒரு பொருளில் ஒளி படவில்லை
யென்றால் அதன் நிறமும் வெளிக்காட்டாது. எனவேதான் வெளிச்சமில்லாதபோது எந்த நிறமும் எமக்குப்
புலப்படாத கருமையாகக் காட்சியளிக்கின்றன. ஒளி எமது கண்களை வந்தடையா வண்ணம் நாம் கண்களை
மூடிக்கொண்டால் அங்கு நிறம் இல்லையென்று ஆகிவிடும். இதனைத்தான் “பார்ப்பதற்கு யாருமே இல்லாவிட்டால் வானம் எப்படி
நீல நிறமாக இருக்கும்” என்று கேட்கிறார் கவிஞர் ஆதி சங்கரர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
உலக அழிவு எப்படி நிகழும்
என்பதை அச்சொட்டாக இல்லாவிடினும் அல்குர்ஆன்
மற்றும் சுன்னாவின் நிழலில் ஓரளவேனும் விளங்கச் சற்று முயற்சிப்போம். நவீன விஞ்ஞான
ஆய்வுகள் சூரிய மண்டலம் உறுப்பெற்று அதனுடைய கிரகங்கள் அனைத்தும் முழுவளர்ச்சி பெற்று
அதாவது பிரபஞ்சம் படைக்கப்பட்டு இற்றைக்கு 13.5 பில்லியன் வருடங்களாகின்றன என்கின்றது. அத்தோடு இப்பிரபஞ்சம்
தொடர்ந்தும் வினாடிக்கு 300,000 Km வேகத்தில் விரிவடைவதாகவும்
குறிப்பிடுகின்றது. இவ்வாறு விரிவடையும் பிரபஞ்சம் முழுமையாக அழியும் என்பதாக இஸ்லாம்
கூறிக்கொண்டிருக்கின்றது. இன்று விஞ்ஞானமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபஞ்ஞ அழிவு
பற்றி அறிவதற்கு அதன் உருவாக்கம் பற்றி சிறிது அறிந்துகொள்வது அவசியம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
ஏலியன்ஸ் என்ற பெயரில் பிரபஞ்ச வெளியில் ஏதோ ஒரு படைப்பிருக்க
வேண்டும் என்பதாக விஞ்ஞானிகள் சுமார் 50 வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து
வருகின்றனர். அது தொடர்பாக பல திரைப்படங்களையும் நாவல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையிலும் Pacific Rim
என்றொரு திரைப்படம் வெளிந்துள்ளது. வேற்றுக் கிரக வாசிகளான ஏலியன்கள் அவர்களது
செல்லப்பிராணிகளை இப்புவிக்கு ஏவிவிட்டு புவியை அழிக்க முணைவதாகவும் அதற்கு எதிராக
மனிதர்கள் போராடுவதுபோன்றும் அத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
அல்லாஹ்வின் படைப்புகளில்
முக்கியமானதும் சிக்கலானதும் கடினமானதுமான படைப்பு என்றால் அது வானம்தான். மனிதனைப்
படைப்பதைவிடவும் இது ஒரு படிமேல் என அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான். “நிச்சயமாக வானங்களையும்
பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும். எனினும் மனிதர்களில்
அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள்.” (40:57) மற்றுமோர் வசனத்தில் “வானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் படைக்கச் சக்திபெற்றவனாக
இல்லையா? ஆம் அவன் மிகப் பெரிய
படைப்பாளன், யாவற்றையும் அறிந்தவன்.” (36:81) இவ்வாறு முதலாவதாகவே
அல்லாஹ் வானத்தின் படைப்பு பற்றி விளக்குகின்றான்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
1969ம் ஆண்டு ஜூலை
மாதம் 20ம் தேதி அப்பல்லோ மிமி என்ற விண்கலம் சந்திரனில் தரை
இறங்கியது. அதில் இருந்து நீல் ஆம்ஸ்ட்ராங்தான் முதல் ஆளாக நிலவில் காலடி எடுத்து
வைத்ததாகக் கூறப்படுகின்றது. பூமி திரும்பிய பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங்
நாசாவில் தொடர்ந்து விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 5ம் தேதி அவர்
தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கடந்த 7ம் தேதி
அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதில் இருந்து உடல் நலம் குன்றி இருந்த
ஆம்ஸ்டிராங் தனது 82வது வயதில் காலமானார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களை வரிசைக்
கிரமமாகப் பின்வருமாறு ஒழுங்குபடுத்த முடியும். சூரியனுக்கு மிக அண்மையில் புதன் கோள்
(Mercury) காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளி (Venus), புவி (Earth), செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter), சனி (Satan), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune) போன்ற கிரகங்கள் காணப்படுகின்றன. புவி
ஞாயிற்றுத் தொகுதியில் சூரியனிலிருந்து மூன்றாவது கோளாகவும் நெப்டியூன் சூரியனிலிருந்து
கடைசிக் கோளாகவும் தொலைவில் அமைந்துள்ளன. ஆரம்பத்தில் ஞாயிற்றுது தொகுதியில் புளுட்டோவுடன்
(Pluto) நவ கிரகங்கள் அல்லது ஒன்பது கிரகங்கள்
இருப்பதாக நம்பப்பட்டது. பாடப் புத்தகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் அவ்வாறுதான் கற்பிக்கப்பட்டும்
வந்தது. என்றாலும் அது கோளுக்குரிய தகுதிகளைப் பெறவில்லை என்ற காரணத்தினால் ஞாயிற்றுத்
தொகுதியின் உருப்பிலிருந்து நீக்கப்பட்டது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
சூரியனை வெள்ளிக் கிரகம் கடந்து செல்லும் அற்புத நிகழ்வு நாளை (6ம் திகதி) இடம்பெறவுள்ளது. 105
வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் இவ் அற்புத நிகழ்வை யாரும் தவரவிடாமல்
பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற தொரு நிகழ்வை எமது வாழ்நாளில் மீண்டும் ஒரு முறை
சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்காது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வெள்ளிக் கிரகம் பயணிக்கும் இக்காட்சியை இலங்கை வாழ் மக்களால்
சூரிய உதயம் முதல் காலை பத்து மணிவரை அவதானிக்க முடியும். இப்படி வெள்ளி சூரியனை கடக்கும்
நிகழ்வு இதுவரை ஏழு முறை மட்டுமே பார்வையிடப்பட்டுள்ளது.
(1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 ஆம்
ஆண்டுகளில்) நடைபெற்றிருக்கிறது.
நாளை நடைபெற இருப்பது எட்டாவது
நிகழ்வாகும். இக்காட்சியை யாரும் வெற்றுக்
கண்களால் பார்ப்பின் கண்கள் பாதிக்கப்படும். சூரியனின் பிம்பத்தை திரையொன்றில்
விழவைத்துப் பார்க்கமுடியும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
மணிக்கு 90Km வேகத்தில் பிரயாணித்துக்கொண்டிருக்கும் ஒரு பேருந்து ஒரேயடியாக நிறுத்தப்பட்டு மீண்டும் அதேவேகத்தில் பின்னோக்கிச் சென்றால் அதனுள் இருக்கும் பிரயாணிகளின் நிலை என்னவாக இருக்கும். இதேபோன்றுதான் இப்பூமியும் தற்போது சுழலும் அதுவேகத்தில் மேற்கு கிழக்காகச் சுழன்றாலும். இதனால் பூமியின் தட்டுகள் குழுங்கி, மலைகள் இடம்பெயர்ந்து, பூகம்பங்கள் தோன்றி பலத்த சேதங்கள்தான் விளையும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
சூரியன் 70% ஆன ஹைட்ரஜன் அணுக்களாலும் 28% ஆன ஹீலியம் அணுக்களாலும் ஆனது. ஒவ்வொரு செக்கனிலும் 600 மில்லியன் டொன் ஹைட்ரஜன் அணுக்கள் 596 மில்லியன் டொன் ஹீலியம் அணுக்களாக தகனமடைகின்றன. எஞ்சிய 4 மில்லியன் டொன்னும் வெப்பமாகவும் வெளிச்சமாகவும் இன்னும் பிற வாயுக் கதிர்களாகவும் வெளியேற்றப்படுகின்றன. சூரியனின் நடுப் பகுதியிலிருந்து சக்தி மேற்பரப்பை வந்தடைய 10 மில்லியன் வருடங்கள் செல்லும். சூரியனில் அல்லாஹ் பல் அத்தாட்சிகளை காண்பிக்கிறான்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தின் அற்புதங்களில் அதிகமாக மனிதனின் கவனத்தை ஈர்துள்ள விடயம் விண்வெளியில் குவிந்துகிடக்கும் பேரற்புதங்கள்தாம். 20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயங்களில் பிரதானமாக விளங்குவது கருந்துளைகளென விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான் கருந்துளை என்பது வான் பௌதிக விஞ்ஞானிகளின் புதிய சிந்தனை (Astro Physics) என்று கூறப்படுகின்றது. கருந்துளைகள் இறை வல்லமைக்குச் சாட்சியம் கூறுகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
NASA விஞ்ஞனிகள் முதல் தடவையாக எமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் பூமிபோன்ற இரண்டு கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அக்கோள்களுக்கும் அதன் நட்சத்திரத்திற்கும் இடையிலுள்ள தூரமும் எமது பூமிக்கும் சூரியனுக்குமிடையிலுள்ள தூரத்தை ஒத்திருக்கின்றதாம். இதில் Kepler – 20e என்ற கோள் வீனஸின் அளவையும் Kepler – 20f பூமியின் பருமனையும் கொண்டுள்ளன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
பிரபஞ்சம் என்பது நாம் வாழும் பூமி உட்பட பூமிக்கு வெளியில் இருக்கும் சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், வாயுக்கள், ஏனைய கோள்கள், பால்வீதிகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கி இருப்பதாகும். இதன் பிரமாண்டத்தை விளக்குவதாயின் பிரபஞ்சம் 300million இற்கும் அதிகமான Galaxies எனும் பால்வீதிகளைக் கொண்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இப்பால்வீதிகள் 250billion இற்கும் அதிகமான நட்சத்திரங்களைக் கொண்டுள்ளன. அதாவது பூமியில் உள்ள அனைத்துக் கடல் மணற்துணிக்கைகளையும் விட பிரபஞ்சததிலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாகும். சூரியன் இந்த மணற்துணிக்கைகளில் ஒன்று மாத்திரமே. எவ்வளவு தூரம் மைல்கணக்கில் சென்றாலும் பிரபஞ்சத்தின் எல்லையை அடையவே முடியாது. இத்தரவுகள் மூலம் பிரபஞ்சம் என்பது எவ்வளவு விசாலமானதும், பிரமாண்டமானதும் என்பதை எம்மால் புறிந்து கொள்ள முடியும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு பால்வீதியும் மற்றொன்றை விட்டு ஒளியாண்டளவு தூரத்திலேயே அமைந்துள்ளன. சூரியன் வருடத்துக்கு 9,370,800,000,000 கி.மீ வேத்தில் பயணிக்கின்றது. இவ்வாறே ஒவ்வொரு நட்சத்திரங்களும் சூரியனைவிடவும் அதிக கதியில் பயணிக்கின்றன. கோள்களும் பயணிக்கின்றன. கெலக்ஸிகளும் பால்வீதிகளும் இவ்வாறுதான் விண்ணில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மோதாதவிதத்தில் பயணிக்கும் அளவுக்கு இப்பிரபஞ்சம் எவ்வளவு விசாலமாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)
உங்கள் கருத்து:
பூமியில் உள்ள ஒவ்வொரு அங்கியும் உயிர்வாழ சூரிய ஒளி மிகமிக அவசியம். பக்றீரியாக்கள், பாசித்தாவரங்கள், புற்பூண்டுகள் மகா விருட்சங்கள் என யாவும் சூரிய ஒளியைக்கொண்டே காபனீ ரொட்சைட்டையும் நீரையும் ஒக்ஸிஜனாகவும் உணவாகவும் மாற்றிக் கொள்கின்றன. இதிலிருந்துதான் உலக ஜீவிகளின் உணவுச் சங்கிலியே தொடர்கின்றது. இதுவல்லாமல் சூரியனிலிருந்து இன்னும் பல்வேறுபட்ட பயன்களை நாம் அன்றாடம் பெற்றுக்கொள்கின்றோம். விண்வெளியிலே பில்லியன் கணக்காண நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் அளவிலும் சக்திப் பிறப்பாக்கத்திலும் பிரம்மாண்டமானவை.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ்)
உங்கள் கருத்து:
இவ்வாறு அல்லாஹ் அண்டவெளியிலே இன்னோரன்ன பல அத்தாட்சிகளையும் அற்புதங்களையும் வைத்திருக்கின்றான். அதனை இன்றைய அறிவியல் உலகம் பலவாறு ஆராய்ந்து வருகின்றது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா என பல்வேறு நாடுகளும் இந்த விண்வெளி ஆராய்ச்சியில் களமிறங்கி பல மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவுசெய்து பல செய்மதிகளை விண்ணுக்கு ஏவி NASA போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களையெல்லாம் நிறுவியும் ஏன் இன்னும் இறை வல்லமையை இவர்களால் உணர்ந்து ஈமான் கொள்ள முடியவில்லை? அவ்வாறு அவர்கள் ஈமான் கொள்ளாததற்கான காரணத்தை இங்கு அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
ஆலிப் அலி (இஸ்லாஹியாஹ் வளாகம்)
உங்கள் கருத்து: