கடுமையான குற்றங்களைச்
செய்து சிறை தண்டனை, ஆயுள் தண்டனை, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும் சில மாதங்களில் பிணையில் வெளிவருகின்றனர். அரசியல்
பலத்தோடு, பண பலத்தோடு குற்றமிழைப்பவர்கள் பாதுகாப்புடன், சொகுசான வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். சிலபோது இவர்களுக்கு சிறைக் கூடங்களே சொகுசான
வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கின்றது. இன்னும்
பலர் குற்றங்களைச் செய்துவிட்டு தலைமறைந்து வாழ்கின்றனர். சிறைத் தண்டனை வழங்கியவர்கள் திருந்தி வாழ்வதற்குப் பதிலாக அங்குள்ள வேறு
பெரிய பெரிய குற்றம் செய்தவனுடனெல்லாம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இன்னும் பல குற்றங்களைப்
பழகிக்கொண்டு வெளியேறுகின்றனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...