“ஹுத்
ஹுத்” என்றதுமே இப்பறவையையும் அதுதொடர்பாக அல்குர்ஆனில்
வந்துள்ள சம்பவமும் உங்கள் ஞாபத்திற்கு வந்திருக்கும். சூரா அந்நம்லில் சுலைமான் நபியவர்களின்
சரித்திரத்தைப் படிக்கும்போது ஹுத் ஹுத் என்ற இப்பெயரைக் கண்டுகொள்ளலாம். இப்பறவைக்கு
அல்லாஹ் கொடுத்துள்ள புத்திக் கூர்மையையும் அதன் வாழ்க்கை முறைகளையும் இத்தொடரில் கற்றுக்கொள்வோம்.
ஹுத் ஹுத் என்ற பெயரில் இப்பறவை சுலைமான் நபியவர்கள்
காலத்திலிருந்தே திரிபுபடாமல் அழைக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவத்தை அல்லாஹ் நபியவர்களுக்குக்
கூறியதிலிருந்து, அல்குர்ஆனில் இடம்பெற்றிருப்பதிலிருந்து சுமார் 1400 ஆண்டுகளாக இப்பெயர்
நிலைத்திருப்பதும் அற்புதம்தான். இதன் அறிவியற் பெயர் Upupa epops என்பதாகும். ஆங்கிலத்தில் “Hoopoe” என்றும் தமிழில் “கொண்டலாத்தி” என்றும் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் Hoopoe என்ற இப்பெயர் வரக் காரணம் அதன் குரலெழுப்பும் சப்தம்தான். இவை
சப்தமிடும்போது ஹுப்… ஹுப்… என்ற ஒலியே வெளிப்படும். இதனாலயே இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவியலில் விலங்கினங்களின் குரலொலியை வைத்துப் பெயரிடும் முறை
Onomatopoetic எனப்படுகின்றது. தமிழில் கொண்டலாத்தி என்பதற்குக் காரணம் அது தன் தலைமேல்
இருக்கும் கொண்டையை விரித்து நடனமாடுவதாலாகும்.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
காலை ஆறு மணி இருக்கும்.
ஜன்னல் வழியாக “டொக்… டொக்…” என்று ஒரு சப்தம்.
யார் ஜன்னலை விடாமல் தட்டிக்கொண்டிருப்பது? என்று சற்று கோபத்தோடு எட்டிப் பார்த்தேன். சின்னஞ் சிறிய ஹம்மிங்
பேர்ட் ஒன்று அதன் விம்பம் கண்ணாடியில் இருப்பதைக கண்டு ஏமார்ந்து தன் அலகினால் தட்டி
விளையாடிக்கொண்டிருந்தது. அந்த ஹம்மிங் பேர்ட் தான் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.
அஷ்.எம்.என்.ஆலிப்
அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling
Al-Quran & Science Researcher
உங்கள் கருத்து:
நாமனைவரும் அறிந்த
எமக்குப் பழக்கமான பறவைதான் மைனா. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் மைனாக்களின் சப்தங்களைக்
கேட்கலாம். அவ்வளவு பிரபலமானவை. இவை ஸ்டார்லிங்
எனும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. கிழக்காசிய நாடுகள்தான் அதுவும் இந்தியா, இலங்கை நாடுகள்தான் இவற்றின் தாய் பூமி. ஒரு காலத்தில் இங்கிருந்து
அமெரிக்க நாடுகளுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழ், சிங்களம், ஆங்கிளம், மலயாளம், ஹிந்தி போன்ற அனைத்து
மொழிகளிலும் இது மைனா –
Myna என்றே அழைக்கப்படுகின்றது. இதன் சரியான தமிழ்ப் பெயர் நாகணவாய்ப்புள் என்பதாகும்.
இலக்கியங்களில் ‘ சிறுபூவாய் ‘ என அழைக்கப்படுகிறது.
சிறுவர் இலக்கியப் பாடல்களிலும் காதல் பாடல்களிலும் கூட மைனாக்கள் இடம்பிடித்திருப்பது
இவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து: