"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

28 November 2008

முஸ்லிம் கண்ணாடியைப் போன்றவன்

தினகரன் (ஆலமுல் இஸ்லாம்) - 19/12/2008
ஒரு முறை நபி ஸல்லல்லாஹஅலைஹிவஸல்லம் அவர்கள் “ஒரு முஸ்லிம் தனது அடுத்த சகோதரனுக்கு கண்ணாடியைப் போன்றவன்” என்று கூறினார்கள். உண்மையில் இது வெறும் வார்த்தைகளல்ல. அதில் ஊறியிருக்கும் ஆழ்ந்த கருத்துக்களும் தத்துவங்களும் மகத்தானவை. அதன் கருத்தாழத்தை நன்கு புரிந்து கொண்டமையால்தான் அன்றைய ஸஹாபாக்கள் ஒருவர் மற்றவருக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய்த் திகழ்ந்தார்கள். இன்றும் திகழ்க்கிறார்கள். ஒரு முஸ்லிம் கண்ணாடிக்கு உவமிக்கப்பட்டுள்ளான் என்றால் அதனை விளங்க அக்காண்ணாடிக்கிருக்கும் முக்கிய பண்புகளைப்பற்றி சற்று விளங்கிக்கொள்ளவோம். கண்ணாடிக்கு முக்கியமான மூன்று பண்புகள் காணப்படுகின்றன. ஒன்று : முன்னிருக்கும் தோற்றத்தை அப்படியே பிரதிம்பப்படுத்தும். இரண்டு

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

01 November 2008

இஸ்பைனில் இஸ்லாம்

“இறைவா! இந்த சாகரம் மட்டும் என்னைக் குறுக்கிட்டுத் தடுத்திராவிடின் கண்காணாத தூரம் வரை சென்று உன் நாமத்தைப் பரப்பியிருப்பேன்”

மேற்கு ஆபிரிக்காவின் கடற்கரையிலிருந்து அடுத்ததாக உள்ளது அட்லாண்டிக் சாகரம். அன்று வடமேற்கு ஆபிரிக்காவின் எல்லை வரை இஸ்லாமியத் தளபதி உக்பா வெற்றிகண்டுகொண்டே முன்னேறினார். இறுதியாக அட்லாண்டிக் சாகரத்தையடைந்ததும் இதற்கப்பால் தன்னால் செல்ல முடியவில்லையே என்ற கவலை தொனிக்கும் குரலில் தனது புரவியின் கழுத்தைச் சாகரம் தொடுமளவிற்க்கு அதனைக் கடலிலே செலுத்திவிட்டுக் கூறியதுதான் மேற்கண்ட கூற்று.

அதன் பின்பு தளபதி மூஸா பின் நுஸைரின் தலைமையில் வந்த படை ஸ்திரமாகவே வடஆபிரிக்காவில் நிலைகொண்டுவிட்டது. அங்கிருந்து இஸ்லாத்தின் ஒளிக்கீற்றுகள் படிப்படியாக ஐரோப்பாவின் எல்லைவரை பிரகாசிக்கலானது. இக்காலப் பிரிவு ரொட்ரிக் என்ற கொடுங்கோலன் ஸ்பைனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தான். அவனது அட்டகாசங்களையும் கொடுமைகளையும் தாங்காத மக்கள் அங்கிருந்து வடஆபிரிக்கா நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். காலச் சக்கரம் சுழல தினம் தோறும் இடம்பெயர்ந்து வந்து கவர்னர் மூஸாவிடம் முறையிடும் மக்கட்தொகை கூடிக்கொண்டே வந்தது. வடஆபிரிக்காவில் இஸ்லாத்தின் மகிமையைக் கண்ட அம்மக்கள் படிப்படியாக இஸ்லாத்தின் பால் கவரப்பட்டுவந்தனர்.
...ஆலிப் அலி...

Related Posts Plugin for WordPress, Blogger...