"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 January 2012

A BUILDING IN CHINA LYING ON THE GROUND

Don't you feel better now that these are the folks that 
manufacture nearly EVERYTHING we buy and use today?
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

24 January 2012

செக்கனுக்கு 4 மில்லியன் டொன் வெப்பத்தை விடும் சூரியன்

சூரியன் 70% ஆன ஹைட்ரஜன் அணுக்களாலும் 28% ஆன ஹீலியம் அணுக்களாலும் ஆனது. ஒவ்வொரு செக்கனிலும் 600 மில்லியன் டொன் ஹைட்ரஜன் அணுக்கள் 596 மில்லியன் டொன் ஹீலியம் அணுக்களாக தகனமடைகின்றன. எஞ்சிய 4 மில்லியன் டொன்னும் வெப்பமாகவும் வெளிச்சமாகவும் இன்னும் பிற வாயுக் கதிர்களாகவும் வெளியேற்றப்படுகின்றன. சூரியனின் நடுப் பகுதியிலிருந்து சக்தி மேற்பரப்பை வந்தடைய 10 மில்லியன் வருடங்கள் செல்லும். சூரியனில் அல்லாஹ் பல் அத்தாட்சிகளை காண்பிக்கிறான்.

23 January 2012

161 தப்லீக் ஜமாஅத்தினர் நாட்டைவிட்டும் திடீர் வெளியேற்றம்.

இஸ்லாமிய அழைப்புப் பணிக்கா இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள 161 தப்லீக் ஜமாஅத் சகோதரர்களை ஒரு வாரத்திற்குள் நாட்டைவிட்டும் வெளியேறுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. டுவரிஸ்ட் வீசா மூலம் இலங்கைக்கு வருகை தரும் இவர்கள் மதத் தீவிரவாதத்தை மக்கள் மத்தியில் போதிப்பதாக பொய்யானதொரு குற்றச்சாட்டை அரசாங்கம் சுமத்தியுள்ளது. மேற்படி அறிவிப்பின் பின் 60 பேர்களே நாட்டைவிட்டும் வெளியேறியிருப்பதாக உள்நாட்டு குடிவரவு, குடியகழ்வுத் திணைக்களத்தின் அதிகாரி சூலாநந்த பெரேரா திவய்ன பத்திரிகைக்கு அறிவித்துள்ளார்.

20 January 2012

பலஸ்தீன் என்றொரு நாடு இல்லை

இவ்வாண்டு (2012) அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமாவுக்குப் போட்டியாக குடியரசுக் கட்சியில் போட்டியிடவுள்ள நியுட் கிங்ரிச் “பலஸ்தீன மக்கள் இஸ்ரேலை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவா்கள்” என்று விசமக் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் “பலஸ்தீன் என்றொரு தனிநாடு இருந்ததே இல்லை என்றும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே அது இருந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். யூதா்களின் ஆதரவின்றி அமெரிக்காவில் யாரும் ஜனாதிபதியாக முடியாது என்பதால்தான் கிங்ரிச்சும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார் போலும். உஸ்மானிய கிலாபத்தை வீழ்த்தி இஸ்ரேல் என்றொரு சட்டவிரோத நாட்டை அமைத்துக்கொண்ட வரலாறு கிங்ரிச்சிற்குத் தெரியாதிருக்க முடியாது.

19 January 2012

2011ஆம் ஆண்டின் சில முக்கிய உலக நிகழ்வுகள்

கடன் நெருக்கடியில் மூழ்கியிருந்த கிரேக்கம், சிக்கன நடவடிக்கைகளுக்கும் கடுமையான விதிமுறைகளுக்கும் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்திடம் சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து அந்நாட்டில் வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.
 இன்னும் பல...
ஆலிப் அலி (இஸ்லாஹி)

கடன் நெருக்கடியில் மூழ்கியிருந்த கிரேக்கம், சிக்கன நடவடிக்கைகளுக்கும் கடுமையான விதிமுறைகளுக்கும் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்திடம் சம்மதம் தெரிவித்திருந்தது. ஆனால் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து அந்நாட்டில் வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.
 இன்னும் பல...
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

யாகூ நிறுவன இஸ்தாபகர் பதவி விலகினார்.

1995ம் ஆண்டு இஸ்தாபிக்கப்பட்ட யாகூ நிறுவனத்தின் இஸ்தாபகத் தலைவர்களுள் ஒருவரான ஜொ்ரி யாங் பேஜ் நேற்று முன்தினம் (17/ 01/ 2012) நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்தும், பிற பதவிகளில் இருந்தும் விலகிக்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த இந்த நிறுவனம் கூகுளின் அசுர வளர்ச்சியால் பின்னோக்கி சரியத்துவங்கியது.

அல்குர்ஆன் கூறும் பிரம்மிப்பூட்டும் கருந்துளைகள்

பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தின் அற்புதங்களில் அதிகமாக மனிதனின் கவனத்தை ஈர்துள்ள விடயம் விண்வெளியில் குவிந்துகிடக்கும் பேரற்புதங்கள்தாம். 20ம் நூற்றாண்டில் விண்வெளியில் கண்டுபடிக்கப்பட்ட ஆச்சரியமான அதிசயங்களில் பிரதானமாக விளங்குவது கருந்துளைகளென விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால்தான் கருந்துளை என்பது வான் பௌதிக விஞ்ஞானிகளின் புதிய சிந்தனை (Astro Physics) என்று கூறப்படுகின்றது. கருந்துளைகள் இறை வல்லமைக்குச் சாட்சியம் கூறுகின்றன.

18 January 2012

5 மணி நேரத்திற்குக் குறைவாகத் தூங்கினால் ஆண்மை குறையும்.

ஒருவர், நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் அளவு குறைந்துவிடும் என்று சிகாகோ பல்கலைக் கழகம் சார்பில் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.  அதில் குறிப்பாக இளம் வயதினர் 5 மணி நேரங்களுக்கும் குறைவாகத்  தொடர்ந்து ஒரு வாரத்திற்குத் தூங்காதிருந்தால் இதன் பாதிப்பை ஒரு வாரத்திற்குள்ளாகவே அனுபவிக்க முடியும் என அவ் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்காகப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து 10 பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஆண்களின் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய டெஸ்ட்டாஸ்ட்டுரோன்எனும் ஹோமனின் அளவு 6 மணி நேரங்களுககும் குறைவாகத் தூங்குவதனால் குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

15 January 2012

google முகப்பில் வித்தைகள்…

அதிவேக மற்றும் அதி பிரபல தேடற் பொறியான google பயனர்களுக்குப் பல்வேறு வசதிகளைத் தருகின்ற அதே நேரம் தற்போது அதன் முகப்புப் பக்கத்தில் வித்தைகள் புரியும் விளையாட்டையும் செய்துதந்துள்ளது. இதற்கு Easter eggs என்று பெயர்வைத்துள்ளது google நிறுவனம். உதாரணமாக சிலதைக் குறிப்பிடுகின்றேன். முகப்புப் பக்க Search box இல் do a barrel roll அல்லது z or r twice என்ற வாசகத்தை டைப் பண்ணினால் அதன் முகப்புப் பக்கம் அப்படியே ஒருமுறை சுற்றிவந்து நிற்கும்.
இன்னும் உள்ளன…

14 January 2012

NASA நிறுவனம் பூமி அளவான இரு கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.

NASA விஞ்ஞனிகள் முதல் தடவையாக எமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் பூமிபோன்ற இரண்டு கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அக்கோள்களுக்கும் அதன் நட்சத்திரத்திற்கும் இடையிலுள்ள தூரமும் எமது பூமிக்கும் சூரியனுக்குமிடையிலுள்ள தூரத்தை ஒத்திருக்கின்றதாம். இதில் Kepler – 20e என்ற கோள் வீனஸின் அளவையும் Kepler – 20f பூமியின் பருமனையும் கொண்டுள்ளன.

13 January 2012

வருக வருக என்று வரவேட்கிறேன்

ன்பின் வார்ளே!

எனது என் கண்ணில்... வலைப் பூங்காவை இரண்டு நாட்களாக நிருத்திவைத்திருந்ததையிட்டு மனம் வருந்துகின்றேன்... மன்னிப்புக் கோறுகின்றேன்...

இந்த 2012 ஆம் ஆண்டுடன் வலைப் பக்கத்தின் முகத்தோற்றத்தை மாற்றி இன்னும் பல புதிய விடயங்களைச் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் சில மாற்றங்களைச் செய்துகொண்டிருந்தமையாலே இந்தத் தாமதம்.

இனி தொடர்ந்தும் பல புதிய விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்...

உங்களை என் தளத்திற்கு அன்புடன் வரவேற்பதோடு தொடர்ந்தும் இணைப்பிலிருந்து பலருக்கும் இதனை அறிமுகம் செய்து பயன்பெறச் செய்யுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

இவன்
ஆலிப் அலி...

11 January 2012

கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரம் பெறமுடியும்

சீன நிறுவனத்தின் ஆய்வு கூறுகின்றது

கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆய்வு இலங்கையில் வெற்றி பெற்றுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட சீனாவின் ஹெனா சக்தி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சினிகியாங் சூ தலைமையிலான அதிகாரிகள் குழு, கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய தனது ஆய்வு அறிக்கையை இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம் சமர்ப்பித்துள்ளது.

10 January 2012

இலங்கை குறித்து சில முக்கிய தகவல்கள்

விக்கிலீக்ஸ் வலைதளம் இலங்கை குறித்து வெளியிட்ட சில முக்கிய தகவல்களை Colombo Telegraph இணையச் செய்திச்சேவை அண்மையில் வெளியிட்டுள்ளது. 

1. பஸிலுக்கும் கோதபாயவுக்கும் இடையில் முருகல்...
2. ஊழலில் பஸில். இருமுறை பாடசாலையிலிருந்தும் விலக்கப்பட்டுள்ளார்...
3. ஜனாதிபதித் தோ்தலில் ராஜபக்ஷ வென்றால் நான் 11 வருடமாக முயற்சித்த அனைதையும் அழித்துவிடுவார்...
4. மஹிந்த அவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பைக்கூட (Advanced Level) பூர்த்திசெய்யவில்லை...

இவை அனைத்தும் Colombo Telegraph இணைய தளத்திலிருந்து பெறப்பட்டவை.
http://colombotelegraph.com/category/wikileaks/

09 January 2012

இஸ்லாமிய நூலகங்களும் அவற்றின் வீழ்ச்சியும்

“For five centuries, from 700 tp 1200, Islam led the world in power, order, and extent of government; in refinement of manners; in standards of living; in human legislation and religious tolerance; in literature, scholarships, science, medicines, and philosophy.” By: Dr.Bader Malek, (Aljumuah issue   No:10)

ஸிரியாவில் காணப்பட்ட ஒரு நூலகத்தில் சகல கலைகளையும் தழுவிய மூன்று மில்லியன் நூல்களும் 50,000 அல்குர்ஆன் பிரதிகளும் 80,000 தப்ஸீர் நூல்களும் இருந்ததாக வரலாற்றாசிரியர் இப்னு புராத் குறிப்பிடுகின்றார்.கோர்டோவா நகரில் 70 நூலகங்கள் காணப்பட்டன. அவற்றுல் 5 இலட்சம் கையைழுத்துப்பிரதிகள் பாதுகாக்கப்பட்டடுள்ளன. ஸமூர் பின் அர்தசீர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட நூலகம் 10,000 முதல் 14,000 வரையான வல்யூம் நூல்களை உள்ளடக்கியிருந்தது.

08 January 2012

பணிப்பெண்களில் 1/3 துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர்

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் செல்பவர்களில் சராசரியாக மூவரில் ஒருவர் தாக்கப்படுதல், தீக்காயத்துக்கு உட்படுத்தப்படல், உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாதல் போன்ற இடர்களை அனுபவிப்பதாக கத்தோலிக்க ஆயர்கள் அமைப்பின் சமூகசேவைப் பிரிவான கரிட்டாஸ் ஸ்ரீலங்கா செடக் நிறுவனத்தின் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...