"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

07 January 2009

நெருப்பில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சிகளா?

...ஆலிப் அலி...

இப்பூவுலகுக்குப் பேரொளியாய் வந்துதித்தவர்தான் எம்பெருமான் முஹம்மத் நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லமவர்கள். நெறி பிறழ்ந்து செல்லும் மக்களை நன்னெறிப்படுத்தி, அதள பாதாளத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்கப் பெரும் பிரயத்தனம் கொண்டார்கள். அதனால் பலரினதும் கல்வீச்சுக்கும் சொல்வீச்சுக்கும் இலக்கானார்.

எனினும் அன்னார் தனது உம்மத்தின்மீது வைத்த அன்புக்கு அளவேயில்லை. நரகிலிருந்து இவ்வும்மத்தைக் காப்பாற்ற அவர் பல துன்பங்களையும் தாங்கிக்கொண்டார். மக்கள் நரகின்பால் செல்வதையும் அதைவிட்டும் அம்மக்களைக் காத்து நிற்பதையும் சிறந்ததோர் உதாரணத்தின் மூலம் நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லமவர்கள் எமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.

எனக்கு உதாரணம் காரிருளில் ஒரு தீப்பந்தத்தை எரியவைத்; ஒரு மனிதனின் உதாரணத்தைப் போன்றதாகும். அவனைச் சூழ அது ஒளிவிட்டுப் பிரகாசித்தபோது விட்டில் பூச்சிகள் அந்நெருப்பிலே வேகமாக வந்து விழலாயின. அம்மனிதனோ எரியும் நெருப்பில் வீழ்வதைவிட்டும் அப்பூச்சிகளைத் தடுத்துக்கொண்டிருந்தான். ஆனால் அவனையும் மீறி அப்பூச்சிகள் அந்நெருப்பில் வந்து வீழ்ந்துகொண்டிருந்தன.” என்றுவிட்டுநானோ நரக நெருப்பிலிருந்தும் உங்களைத் தடுப்பவன். நீங்களோ அதில் சென்று வீழ்பவர்களாக இருக்கின்றீர்கள்.” என்று நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லமவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இவ்வாறு ஓர் அழகான உதாரணத்தைக் கூறிய நபியவர்கள்யார் தனக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றாறோ அவர் பெரும் அழிவிலிருந்தும் அபயம் பெற்றாரென்றும் யார் தனது கூற்றைப் பொய்ப்பித்து மாறுசெய்கின்றாறோ அவரை ஆபத்து சூழ்ந்துகொள்ளும் என்று அழகியதோர் உதாரணத்தின் மூலம் விளக்குகின்றார்.

எனக்கும் நான் கொண்டுவந்த செய்தி(கற்)க்கும் உதாரணம் எப்படியென்றால்: ஒரு மனிதன் அவனது சமூகத்தின் பக்கம் பதட்டத்துடன் ஓடோடி வந்து சமூகமே! இடைவழியில் நானொரு பெரும் படையைக் கண்டேன். அதன் அழிவிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் தப்பித்துக்கொள்ளுங்கள்என்றான். அக்கிராம வாசிகளில் ஒரு கூட்டம் அம்மனிதனையும் அவனது செய்தியையும் ஏற்று அங்கிருந்து வெளியேறிச்; சென்றது. அப்படையின் பேரழிவிலிருந்தும் அபயம் பெற்றது. மற்றைய கூட்டம் அம்மனிதனைப் பொய்ப்பித்து அங்கேயே தங்கிவிட்டது. அது அப்படையின் தாக்குதலுக்குள்ளாகி துவம்சமானது.” என்று கூறிவிட்டுயார் எனக்குக் கட்டுப்பட்டு நான் எடுத்துவந்தவற்றைப் பின்பற்றிகிறார்களோ அவர்கள் தப்பித்துவிட்டார்கள். யார் எனக்கு மாறுசெய்கின்றார்களோ அவர்கள் சத்தியத்தைப் பொய்ப்பித்தவர்களாவர்.” என்று கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)

நரகின்பால் செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்தி, தன்னை ஏற்று தான் ஏவியவற்றை எடுத்து வாழ்பவர்கள் வெற்றிபெற்றவர்கள் என்று கூறிவிட்டு, தான் ஏவியவற்றைப் பின்பற்றி வாழ்வதுபோல அவற்றைப் பிறருக்கும் எத்திவைக்கும்படி மேலுமோர் கருத்தாழமுள்ள உதாரணத்தின் மூலம் நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லமவர்கள் எம்மை உணர்வூட்டுகிறார்கள்.

அல்லாஹ் எனக்கு நேர்வழியையும் கல்விஞானத்தையும் தந்தனுப்பியது பெரும் வறட்சிக்குப் பின்னால் பெய்த மாமழையைப் போன்றதாகும். மழையைப் பெற்ற நிலத்தின் ஒரு பகுதி வளமான பகுதி. அது நீரை உள்வாங்கி புட்பூண்டுகளை முளைப்பித்தது. அந்நிலம் தன்னிலும் பயனைடைந்து பிறருக்கும் பயனளித்தது.”

மற்றுமோர் பகுதி இறுகிப்போன கறடு முரடான பகுதி. அது மழை நீரைத் தன்னுள்ளீர்த்துக்கொள்ளாது பூமியின் மேலே தேக்கிவைத்தது. அதனால் அப்பூமி பயனடையாது பிற ஜீவராசிகளுக்குப் பயனளித்தது. மிருகங்கள் அதிலிருந்து நீர் பருகின. மனிதன் அதன் மூலம் விவசாயம் செய்தான். இது, தான் பயனடையாது பிறருக்குப் பயனளித்த நிலம்.”

மேலுமொரு பகுதி தட்டையான பகுதி. அது நீரை உள்வாங்கவுமில்லை, புட்பூண்டுகளை முளைப்பிக்கவுமில்லை, பிற ஜீவன்களுக்கு பயனளிக்கும் விதமாக தேக்கிவைக்கவுமில்லை. இது தானும் பயனடையாது பிறருக்கும் பயனளிக்காத நிலம்.” என்று கூறிவிட்டு நபியவர்கள் மேலும் தொடர்ந்தார்கள். “கற்றவற்றைத் தானும் பின்பற்றி அதனைப் பிறருக்கும் கற்றுக்கொடுப்பவனுக்கு உதாரணம் முதலாம் நிலத்தைப் போன்றதாகும். இரண்டாவது உதாரணம் கற்றதின் மூலம் தான் பயனடையாது பிறருக்குப் பயனளிப்பவனுக்குரியதாகும். தானும் பயனடையாது, பிறருக்கும் பயனளிக்காதவனுக்கு உதாரணம் மூன்றாவது நிலமாகும்என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஆக இந்த மூன்று ஹதீஸ்களின் மூலம் நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லமவர்கள் எமக்கு ஒரு முக்கிய செய்தியைக் கூறுகின்றார்கள். அதாவது; மனிதன் நரக நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சியாக மாறும்போது அவனை அதைவிட்டும் தடுக்கவேண்டும். அப்பணியைச் செய்ய அல்குர்ஆனையும் ஹதீஸையும் ஆயுதமாகக் கைக்கொள்ளவேண்டும். அவற்றிலிருந்து கற்றவற்றைத் தானும் பின்பற்றி பிறருக்கும் போதிக்கவேண்டும் என்ற அறிவுரையை எமக்குப் புகட்டுகின்றார்கள்.

எனவே “(விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டம் நன்மையின்பால் அழைப்பவர்களாகவும் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்களாகவும் இருக்கட்டும்” (ஆலுஇம்ரான்:104) என்ற அல்குர்ஆனின் வசனத்திற்கேற்ப நாமனைவரும் செயற்பட்டால் எவ்வளவு இலகுவாக தீமைகளைக் களைபிடுங்க முடியும். நன்மைகளை விதைக்க முடியும். அப்படி செயற்பட்டால்அவர்கள்தாம் வெற்றிபெற்றவர்கள்” (ஆலுஇம்ரான்:104) என அல்லாஹ்வே கூறுகின்ற வெற்றியாளர்கள் நாமல்லாது வேறுயாராக இருக்கமுடியும்…? ...ஆலிப் அலி...

உங்கள் கருத்து:

இஸ்லாத்தின் பார்வையில் உலகவாழ்க்கை
...ஆலிப் அலி...

மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள்தாம் இவ்வுலகில் பகட்டு வாழ்ககை வாழ்கின்றனர். இது நிரந்தரமானதல்ல என அறிந்தபோரிலும் தமது மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு அதன்படி வாழ்ந்து மடிகின்றனர். இப்பிரபஞ்சப் படைப்புகளிலே உயர்ந்த அறிவார்ந்த படைப்பு மனிதனென்று உறுதியாகக் கூறலாம். அவ்வாறான மனிதன் இவ்வுலகில் வெறும் உடலிச்சைகளையும் மனோ இச்சைகளையும் மாத்திரம் தீர்த்துக்கொண்டு அவன் படைக்கப்பட்டதன் சரியான நோக்கத்தை புறிந்துகொள்ளாமல் பொருளாதாரத்தை ஈட்டுவதில் தனது குறுகிய ஆயுளைச் செலவு செய்துவிட்டு இறந்துவிடுவதென்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று.

மனிதன் இவ்வுலகம்தான் சுவர்க்கம் என நினைத்து இதன் மீது வைத்துள்ள அபரிமிதமான விருப்பின் காரணமாக ({ப்புத் துன்யா) அவனுக்கு வழிகாட்ட வந்த வழிகாட்டிகளையும் நிராகரித்துவிட்டு, அவனைப் படைத்த இறைவனையும் நிராகரித்துவிட்டு மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக் கின்றான்.

உண்மையில் இது நிரந்தரமா வாழ்க்கையல்ல. அதே போன்று மனிதன் உலக இன்பங்களை அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டவனுமல்ல. இவ்வுலகில் அவன் அனுப்பப்பட்டதற்கான ஓர் உயரிய நோக்கம் உண்டு. மனிதனின் நிரந்தரமான வாழ்க்கை மறுமையில்தான் அமைகின்றது. இம்மை என்பது வெறும் தற்காலிகத் தங்குமிடம்தான். இவ்வுலகம் பெறுமதியற்றது, கவர்ச்சித்தன்மை கூடியது, வீணும் விளையாட்டும் நிரம்பியது. அல்லாஹ்விடத்திலும் நபியவர்களிடத்திலும் இவ்வுலகம் மதிப்பற்றது. இதனைச் சில அல்குர்ஆனிய வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. “(மனிதர்களே!) அறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வுலக வாழ்ககையெல்லாம் விளையாட்டும் வீணும் அலங்காரமும் உங்களுக்கு மாத்தியில் பெருமையடித்துக்கொள்வதும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் அதிகப்படுத்திக் கொள்வதும்தான்...” (அல்ஹதீத்:20) மற்றுமோரிடத்தில் இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை” (ஆலஇம்ரான்:185) பிரிதோரிடத்திலும் ல்லாஹ் கூறுகிறான். மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடு மேலானதாகும்” (அல்அன்ஆம்:32) உலகம் பெருமதியற்றது என்பதை நபி(ஸல்) வர்கள் ஓர் நடைமுறை உதாரணத்தின் மூலம் குறித்துக் காட்டினார்கள். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்கள் புடைசூழ கடைத்தேருவோன்ளைக் கடந்துகொண்nருந்தார்கள். அப்போது அங்கே செத்து, காதுகள் அருந்துகிடந்த ஓர் ஆட்டைக் கண்டார்கள். உடனே அதனை நெருங்கி அதன் காதைப் பிடித்துக்கொண்டுஉங்களில் யார் இதை ஒரு வெள்ளிக் காசுக்கு வாங்க விரும்புவார்?” என்று கேட்டார். அதற்கு அம்மக்கள்நாம் அதனை வாங்கி விரும்ப மாட்டோம். அதனைவைத்து நாம் என்ன செய்வோம்?” என்று கேட்டனர். நபியவர்கள் இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பமாட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு மக்கள்அல்லாஹ்வின் மீதானையாக உயிரோடு இருந்தாலும் இது காதருந்த குறையுள்ள ஒரு ஆடு. அவ்வாறிருக்க செத்த நிலையில் எப்படி (ற்கு மதிப்பிருக்கும்)” எனக் கேட்டனர். அதற்கு நபியவர்கள்அவ்வாறாயின் அல்லாஹ்வின் மீதானையாக இந்தச்செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் அற்பமானதுஎன்றார்கள் (முஸ்லிம்) முடிவாக மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்தும் ஹதீஸினூடாகவும் உலகம் எனபது அற்பமானதும் கவர்ச்சிகரமானதும்தான் என்பதைப் புறிந்துகொள்ள முடிகிறது. மறுமைக்காட்சிகளை அவர்கள் காணும் போது சொற்ப காலமே வாழ்ந்ததுபோல்; உணர்வார்களென குர்ஆன் கூறுகின்றது. அதனை அவர்கள் காணும் நாளில் மாலையிலோ அல்லது அதன் முற்பகலிலோ (ஒரு சொற்ப நேரமே) தவிர (பூமியில்) தங்கியிருக்காதது போன்று (அவர்கள் உணர்வார்கள்)” (அந்நாஸிஆத்:46) அல்குர்ஆனும் அல்ஹதீஸ்{ம் இவ்வாறு கூறும் அதே சமயம் மனித ஆன்மாவின் பயணத்தொடரை கணிபபிட்டுப் பார்ப்பதனூடாகவும் வித்தியாசமானதொரு முறையில் இந்த உண்மையை விளங்கலாம். சற்று சிந்தனையை சிறகடிக்கவைப்போம். மனிதன் என்ற பதப்பிரயோகம் இப்பூமியில்தான் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்கு முன்னுள்ள கட்டங்களிலும் பின்னுள்ள கட்டங்களிலும்ஆன்மா (ரூஹ்)” என்றே குறிக்கப்படுகின்றது. மனித ஆன்மா ஆறு கட்ட நிலைகளைக் கடந்துதான் வேதனைமிக்க அல்லது இன்பம் சொட்டும் அழிவேயற்ற நிரந்தரமான வாழ்வை அடைகின்றது. இவ்வுலக வாழ்வென்பது ஆன்மாவின் நீண்ட பயணத்தொடரின் மூன்றாம் கட்ட நிலையாகும். இம்மூன்றாம் கட்ட நிலையை ஏனைய கட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது சொற்பகாலம்தான் என்பதை விளங்கலாம். ஆன்மாவின் அந்த ஆறு கட்டப் பயணத் தொடரை பின்வரும் வரைபின் மூலம் விளங்கலாம்.

இவ்வரைபின் ஒவ்வொரு கட்டத்தையும் சற்று விரிவாக நோக்குவோம். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்து அவருக்கு ரூஹை (ஆன்மாவை) ஊதியதன் பின்பு அவரிலிருந்து மறுமை நாள் நிகழும் வரையிருக்கும் இருதி மனிதன் வரையுள்ள அனைவரதும் ஆன்மாக்களைப் படைத்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான். நபியே உமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களது முதுகளிலிருந்து அவர்களது சந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தமக்கே சாட்சியாக்கி அவர்களிடம் நான் உங்கள் இரட்சகனல்லவா? என்று (கேட்ட) சமயத்தில்...” (அல்அஃராப்:172) அவ்வான்மாக்கள் இருக்குமிடம்ஆலமுல் அர்வாஹ்” (ரூஹ்களின் உலகம்) என அழைக்கப்படுகின்றது. இதுவே ஆன்மாக்களின் பயணத்தொடரின் ஆரம்பகட்டம். இதில் ஒரு ஆன்மா தங்கியிருக்கும் காலமோ மிக் நீண்டது. எவ்வளவெனின் இன்றொரு குழந்தை பிறக்குமென்றிருந்தால் அதன் ஆன்மா ஆதம் (அலை) அவர்களைப் படைத்ததிலிருந்து தாயின் கருவரையில் சேர்க்கப்படும்வரை எண்ணிப்பார்க்க முடியாத காலங்கள் ரூஹ்களின் உலகத்தில் தங்குகின்றது. ஆன்மா இரண்டாம் கட்டமாக தாயின் கருவரையை அடைகின்றது. இங்கு பொதுவாக நான்கு அல்லது ஐந்து மாதங்களே தங்கியிருக்கும். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போது அதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பிவைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில் அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்துவிடுகின்றார்.” (முஸ்லிம்) தாயின் கருவரையிலிருந்து இப்பூவுலகை அடைகின்றது அவ்வான்மா. இதுதான் மிக முக்கிய இடம். ஆன்மாக்கள் எந்நோக்கத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டனவோ அந்நோக்கத்தை சரியாக நிறைவேற்ற வேண்டிய இடம் இதுதான். அல்லாஹ்விடம் ஆன்மாக்கள் ஆலமுல் அர்வாஹில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய இடம். இதில் ஆன்மா இறை வழிகாட்டலையும் அவன் தூதரின் போதனைகளையும் ஏற்றுப் பின்பற்றி வாழந்தால் அதன் அடுத்த கட்ட நகர்வுகள் சுபீட்சமானதாக அமையும். மாறாக அவற்;றைப் புறக்கனித்து வாழ்ந்தால் வேதனை மிக்கதாக அமையும். இவ்வுலக வாழ்க்கை என்பது இரண்டு பாதைகளைப் பிரிக்கும் ஒரு சந்தி (Junction). தொடர்ந்து ஒரே பாதையில் (One way) வந்த ஆன்மா இங்கிருந்து பிரியும் இரு பாதைகளில் ஏதாவதொரு பாதையின் மூலமே செல்லமுடியும். அல்லாஹ் இந்த இரண்டு பாதைகளையும் மனிதனுக்குக் காட்டித்தந்துள்ளான். அவன் கூறுகின்றான். “(நன்மை, தீமையாகிய) இரு பாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்து விட்டோம்.” (அல்பலத்:10) மற்றும் {ரதுத்தஹ்ரின் மூன்றாம் வசனத்தில்நிச்சயமாக, நாம் அவனுக்கு (நல்லது, தீயது பற்றிய) வழியைத்தெளிவு செய்தோம், (அதைப்பின்பற்றி) அவன் ஒன்று நன்றியுள்ளவனாக இருக்கலாம், அல்லது (அதனைப் பின்பற்றாது) நன்றிகெட்ட (நிராகரிப்ப)வனாக இருக்கலாம்.” என்று கூறுகின்றான். இவ்விரு பாதைகளில் ஒன்று நரகின் பாதை மற்றையது சுவனத்தின் பாதை. (மேற்குறிப்பிட்ட வரைபை அவதானிக்கவும்) எனவே இதில் நாம் சுவனத்திற்கான நேரான பாதையைத் தெரிவுசெய்யவேண்டும். மாற்றமாக இவ்வுலகை சுவனமாக எண்ணி மனம்போன போக்கில் வாழ்வது நேரெதிரான நரகின் பாதையைத் தெரிவுசெய்ததாயமையும். எனவேதான் அல்லாஹ் தனது கட்டளைகளனி பிரகாரம் உலகில் வாழுமாறும் உலகக் கவர்ச்சிகளில் மூழ்கிவிட வேண்டாமென்றும் கூறி உலக வாழ்க்கை அற்பமானது என்று கூறுகின்றான். இம்மை மறுமையின் விளைநிலம்என நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கிணங்க, மறுமைக்கான கட்டுச்சாதனங்களை இங்குதான் தயார்செய்துகொள்ள வேண்டும். உலகம் எனும் இத்தேர்வுக்களத்தை நல்ல முறையில் எதிர்கொண்டால்தான் முறுமையில் சிறந்த பேருகிடைக்கும். ஆன்மாவின் பயணத்தில் அது பூமியில் தங்கும் காலம்தான் மிகச் சொற்பமானது. இதனை ஏனைய காலகட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கலாம். எனினும் மனிதன் இங்குதான் தவறிலைக்கின்றான். இறைவனது அருட்கெடைகளையெல்லாம் பூரணமாக அனுபவித்துவிட்டு செருக்குக்கொள்கின்றான். ஆடம்பரத்தில் ஆடுகின்றான். இறைவனையும் நிராகரிக்கின்றான். அவனது பார்வையில் உலகம் என்பது வெறுமனே இன்பமனுபவித்துவிட்டுச் செல்லும் ஓர் இடம். ஏனெனில் நிரந்தரமான உயர்ந்த மறுமையின் சுவன வீட்டை அவன் மறுக்கிறானல்லவா? அதனால்தான் இது அற்பமானதென்பதை விளங்காதிருக்கின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்எனது உம்மத்தின் வாழ்க்கை 60-70 வயதுக்கு இடைப்பட்டதாகும்” (திர்மிதி) இந்த ஹதீஸ் குறிப்பிடும் இவ்வுலகில் ஆன்மாவின் வயதெல்லையையும் அது தங்கும் ஏனைய கட்டங்களின் கால அளவையும் ஒப்பிடுகையில் இது குறுகிய காலம்தான். உடலைவிட்டுப் பிரியும் ஆன்மா அடுத்து ஆலமுல் பர்ஸகை அடைகின்றது. ஆலமுல் பர்ஸக் என்பது மரணத்திற்கும் மறுமைக்கும் இடைப்பட்ட வாழ்க்கை. மரணித்த ஒருவரது ஆன்மா நல்லதாக இருந்தால் அது இல்லிய்யீனிலும் அதுவே கெட்டதாக இருந்தால் ஸிஜ்ஜிய்யீனிலும் பதியப்பட்டதன் பின்பு பர்ஸகிலே சேர்க்கப்படும். இங்கும் ஆன்மாக்கள் நீண்டகாம் தங்கியிருக்கும். எவ்வாறெனின் ஆலமுல் அர்வாஹிலிருக்கும் ஆன்மாக்கள் அனைத்தும் பூமியை அடைந்து பின்பு பூமையை அடைந்தவையெல்லாம் மரணித்து ஆலமுல் பர்ஸகை அடைந்து மறுமை நாளாகும்வரை ஏற்கனவே பர்ஸகை அடைந்த ஆன்மாக்கள் நீண்டதொரு கால இடைவெளியில் தங்கியிருக்கும். இங்கு நல்ல ஆன்மாக்கள் இன்பத்தையும் கெட்ட ஆன்மாக்கள் வேதனையையும் அனுபவித்துக்கொண்டிருக்கும். ஆலமுல் பர்ஸகில் இருந்த ஆன்மாக்கள் அடுத்தகட்ட நகர்வாக மஹ்ஷர்வெளியை அடையும். பூவுலகில் செய்த நன்மைக்கும் தீமைக்குமேற்ப கூலிவழங்கப்படும் தீர்ப்பு நாள்தான் மஹ்ஷருடைய நாள். அது ஒரு மாபெரும் திடல். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்து இருதி மனிதன்வரை அனைவரும் அங்கு திரண்டிருப்பார்கள். அனைத்து ஆன்மாக்களும் மீண்டும் அவற்றுக்கான புதிய உடல்களில் நுழைவிக்கப்பட்டிருக்கும். அவ்வுடல்கள் மறுமையின் வேதனையையோ அல்லது இன்பத்தையோ அனுபவிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும். அல்லாஹ் கூறுகின்றான். “ஆன்மாக்கள் (அவற்றின் உடல்களோடு)ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும்போது.” (அத்தக்வீர்:07) இங்கும் ஆன்மாக்கள் மிக நீண்டகாலம் தங்கியிருக்கும். அது இத்துனை வருடங்கள்தான் என்று குறிப்பிட்டுக்கூற முடியாது. அதனை அல்லாஹ்தான் அறிவான். எனினும் இது தொடர்பாக இரண்டு குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடலாம். 1 மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 1000 வருடங்களுக்குச் சமன். நிச்சயமாக உம் இரட்சகனிடத்தில் ஒரு நாள் நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் போன்றதாகும்.” (அல்ஹஜ்:47) 2 மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 50,000 வருடங்களுக்குச் சமன். மலக்குகளும் ஜிப்ரீலும் இவன் பக்கம் ஒரு நாளில் உயர்ந்து செல்வார்கள். அதன் அளவு ஐம்பதுநாயிரம் வருடங்களாகும்.” (அல்மஆரிஜ்:04) இவ்விரு வசனங்களும் வித்தியாசமான கால அளவைக் காட்டினாலும் தப்ஸீர் அறிஞர்களின் கருத்துப்படி ஒரு முஸ்லிமுக்கு மஹ்ஷரின் ஒரு நாள் இம்மையின் ஆயிரம் வருடங்களுக்குச் சமனாகவும் ஒரு காபிருக்கு மஹ்ஷரின் ஒரு நாள் இம்மையின் ஐம்பதுநாயிரம் வருடங்கள்குச் சமனாகவும் இருககும் என ஒரு கருத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் எவ்வளவு காலம் என எமது குறிகிய அறிவால் சரியாகக் குறிக்துக் கூற முடியாது. ஆனாலும் ஒரு கணிப்பீட்டுக்காக ஒரு முஸ்லிம் ஐந்து நாட்கள் தங்குவதாகக் கொண்டால் அது இப்பூமியின் ஐந்தாயிரம் வருடங்களுக்குச் சமன். இதுகூட பூவுலக வாழ்வைவிட நீளமானதே! ஆன்மாவின பயணத் தொடரின் இக்கட்ட வாழ்வுதான் நிரந்தரமானது. ஒவ்வொரு ஆன்மாவும் பூமியில் எவ்வகையான வாழ்க்கையை வாழ்ந்ததுவோ அதற்கு ஏற்றதான வாழ்கை இங்கு பெற்றுக்கொள்ளும். உலகில் இஸ்லாம் கூறிய பிரகாரம் வாழ்ந்து நன்மைகள் புரிந்து இறைதிருப்தியைப் பெற்றிருந்தால் அந்த ஆன்மா சுவனத்தை அனந்தரமாகக்கொள்ளும். இதற்குப் புறம்பான வாழ்வை வாழ்ந்தால் வேதனைகள் மிகுந்த நரகை ஒதுங்குமிடமாகப் பெற்றுக்கொள்ளும். இங்கு வாழும் வாழ்க்கைக்கு முடிவே இல்லை. ஆக ஆன்மாவின் இந்த ஆறு கட்ட பயணங்களையும் எடுத்து நோக்கினால் மிகக் குறைந்த கால வாழ்க்கை பூமியிலேயே அமைகின்றது. இந்த சொற்பமான வாழ்க்கை அற்பமானதுதான். ஆரம்பத்தில் கூறியதுபோன்று மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு பாதைகளும் இரண்டு விருப்பு, வெறுப்புகளைக் கொண்டது. ஒன்று; இறை விருப்பு, வெறுப்பு. மற்றையது மனித விருப்பு, வெறுப்பு. இதில் மனித விருப்பு, வெறுப்புகளுக்கு முன்னுரிமையளித்தவன் நரகின் பாதையைத் தெரிவு செய்வான். இறை விருப்புக்கும் வெறுப்புக்கும் முன்னுரிமையளித்து அதன்படி வாழ்ந்தவன் சுவனப் பாதையைத் தெரிவுசெய்தவனாவான். அல்லாஹ் கூறுகின்றான்: யார் தனது இரட்சகனின் சந்நிதியைப் பயந்து தனது விருப்பு வெறுப்புகளிலிருந்தும் தனது உள்ளத்தைத் தடுத்துக் கொள்கிறானோ அவன் ஒதுங்குமிடம் நிச்சயமாக (நிரந்தர இன்பங்கள் நிரைந்த) சுவனம்தான்” (69:40,41) எனவே நாம் இந்த உலகினதும் மனித வாழ்வினதும் யதார்த்த நிலையை விளங்கவேண்டும். உண்மையில் உலக வாழ்க்கை வீணும் வேடிக்கையும் நிறைந்தது. ஆற்பமும் சொற்பமும் விளைந்தது. ஆனால் இதுதான் மனித ஆன்மாவின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு சந்தி. எனவேதான் இந்த உலக வாழ்வில் மனிதனை ஒரு வழிப்போக்கனைப்போல் வாழுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் உலகத்தில் ஓர் அண்ணியனைப்போல் அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் இருங்கள்.” (புகாரி) மலக்குல் மௌத் இப்பூமியில் 950 வருடங்கள் வாழ்ந்த நூஹ் நபியிடம் வந்துநீர் எவ்வளவு காலம் இங்கு வாழ்ந்தீர்?” என்று கேட்டதற்குஒரு வீட்டின் முன் வாயிலால் நுழைந்து பின் வாயிலால் வெளியேளியது போன்ற காலம்தான்.” என்றார்கள். ஆல்குர்ஆனும் இதனையே கூறுகின்றது. “ஆண்டுகளின் எண்ணிக்கையால் நீங்கள் எவ்வளவு காலம் பூமியில் கங்கினீர்கள்?” என்று அவன் கேட்பான். அதற்கவர்கள்ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியே தங்கியிருப்போம்என்பார்கள்.” (23:112,113) அது மட்டுமன்றி அல்லாஹ்விடத்தில் ஈயின் இறக்கையிலும் அற்பமானது என நபியவர்கள் கூறினார்கள். “இந்த உலகம் அல்லாஹ்விடத்தில் ஓர் ஈயின் இறக்கையளவு பெருமதியாக இருக்குமென்றால் அவனை நிராகரிக்கும் மனிதனுக்கு தண்ணீரும் கொடுக்கமாட்டான்.” (திர்மிதி) ஆக மனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக் கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோ இச்சையின் பிரகாரம் வாழ்ந்துவிட்டுப்போகும் சதைப் பிண்டமோ அல்ல. மாறாக அவனது வாழ்வு இறை வழிகாட்டலின் கீழ் அமையவேண்டும். இவ்வுலகில் எமது பணி என்ன என்பதை விளங்கவேண்டும். ஆதன்படி செயற்பட்டு நிரந்தர சுவனபதியை அனந்தரமாகக்கொள்வோம்....ஆலிப் அலி...

மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள்தாம் இவ்வுலகில் பகட்டு வாழ்ககை வாழ்கின்றனர். இது நிரந்தரமானதல்ல என அறிந்தபோரிலும் தமது மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு அதன்படி வாழ்ந்து மடிகின்றனர். இப்பிரபஞ்சப் படைப்புகளிலே உயர்ந்த அறிவார்ந்த படைப்பு மனிதனென்று உறுதியாகக் கூறலாம். அவ்வாறான மனிதன் இவ்வுலகில் வெறும் உடலிச்சைகளையும் மனோ இச்சைகளையும் மாத்திரம் தீர்த்துக்கொண்டு அவன் படைக்கப்பட்டதன் சரியான நோக்கத்தை புறிந்துகொள்ளாமல் பொருளாதாரத்தை ஈட்டுவதில் தனது குறுகிய ஆயுளைச் செலவு செய்துவிட்டு இறந்துவிடுவதென்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று.

மனிதன் இவ்வுலகம்தான் சுவர்க்கம் என நினைத்து இதன் மீது வைத்துள்ள அபரிமிதமான விருப்பின் காரணமாக ({ப்புத் துன்யா) அவனுக்கு வழிகாட்ட வந்த வழிகாட்டிகளையும் நிராகரித்துவிட்டு, அவனைப் படைத்த இறைவனையும் நிராகரித்துவிட்டு மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக் கின்றான்.

உண்மையில் இது நிரந்தரமா வாழ்க்கையல்ல. அதே போன்று மனிதன் உலக இன்பங்களை அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டவனுமல்ல. இவ்வுலகில் அவன் அனுப்பப்பட்டதற்கான ஓர் உயரிய நோக்கம் உண்டு. மனிதனின் நிரந்தரமான வாழ்க்கை மறுமையில்தான் அமைகின்றது. இம்மை என்பது வெறும் தற்காலிகத் தங்குமிடம்தான். இவ்வுலகம் பெறுமதியற்றது, கவர்ச்சித்தன்மை கூடியது, வீணும் விளையாட்டும் நிரம்பியது. அல்லாஹ்விடத்திலும் நபியவர்களிடத்திலும் இவ்வுலகம் மதிப்பற்றது. இதனைச் சில அல்குர்ஆனிய வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. “(மனிதர்களே!) அறிந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வுலக வாழ்ககையெல்லாம் விளையாட்டும் வீணும் அலங்காரமும் உங்களுக்கு மாத்தியில் பெருமையடித்துக்கொள்வதும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் அதிகப்படுத்திக் கொள்வதும்தான்...” (அல்ஹதீத்:20) மற்றுமோரிடத்தில் இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை” (ஆலஇம்ரான்:185) பிரிதோரிடத்திலும் ல்லாஹ் கூறுகிறான். மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடு மேலானதாகும்” (அல்அன்ஆம்:32) உலகம் பெருமதியற்றது என்பதை நபி(ஸல்) வர்கள் ஓர் நடைமுறை உதாரணத்தின் மூலம் குறித்துக் காட்டினார்கள். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்கள் புடைசூழ கடைத்தேருவோன்ளைக் கடந்துகொண்nருந்தார்கள். அப்போது அங்கே செத்து, காதுகள் அருந்துகிடந்த ஓர் ஆட்டைக் கண்டார்கள். உடனே அதனை நெருங்கி அதன் காதைப் பிடித்துக்கொண்டுஉங்களில் யார் இதை ஒரு வெள்ளிக் காசுக்கு வாங்க விரும்புவார்?” என்று கேட்டார். அதற்கு அம்மக்கள்நாம் அதனை வாங்கி விரும்ப மாட்டோம். அதனைவைத்து நாம் என்ன செய்வோம்?” என்று கேட்டனர். நபியவர்கள் இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பமாட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு மக்கள்அல்லாஹ்வின் மீதானையாக உயிரோடு இருந்தாலும் இது காதருந்த குறையுள்ள ஒரு ஆடு. அவ்வாறிருக்க செத்த நிலையில் எப்படி (ற்கு மதிப்பிருக்கும்)” எனக் கேட்டனர். அதற்கு நபியவர்கள்அவ்வாறாயின் அல்லாஹ்வின் மீதானையாக இந்தச்செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் அற்பமானதுஎன்றார்கள் (முஸ்லிம்) முடிவாக மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்தும் ஹதீஸினூடாகவும் உலகம் எனபது அற்பமானதும் கவர்ச்சிகரமானதும்தான் என்பதைப் புறிந்துகொள்ள முடிகிறது. மறுமைக்காட்சிகளை அவர்கள் காணும் போது சொற்ப காலமே வாழ்ந்ததுபோல்; உணர்வார்களென குர்ஆன் கூறுகின்றது. அதனை அவர்கள் காணும் நாளில் மாலையிலோ அல்லது அதன் முற்பகலிலோ (ஒரு சொற்ப நேரமே) தவிர (பூமியில்) தங்கியிருக்காதது போன்று (அவர்கள் உணர்வார்கள்)” (அந்நாஸிஆத்:46) அல்குர்ஆனும் அல்ஹதீஸ்{ம் இவ்வாறு கூறும் அதே சமயம் மனித ஆன்மாவின் பயணத்தொடரை கணிபபிட்டுப் பார்ப்பதனூடாகவும் வித்தியாசமானதொரு முறையில் இந்த உண்மையை விளங்கலாம். சற்று சிந்தனையை சிறகடிக்கவைப்போம். மனிதன் என்ற பதப்பிரயோகம் இப்பூமியில்தான் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்கு முன்னுள்ள கட்டங்களிலும் பின்னுள்ள கட்டங்களிலும்ஆன்மா (ரூஹ்)” என்றே குறிக்கப்படுகின்றது. மனித ஆன்மா ஆறு கட்ட நிலைகளைக் கடந்துதான் வேதனைமிக்க அல்லது இன்பம் சொட்டும் அழிவேயற்ற நிரந்தரமான வாழ்வை அடைகின்றது. இவ்வுலக வாழ்வென்பது ஆன்மாவின் நீண்ட பயணத்தொடரின் மூன்றாம் கட்ட நிலையாகும். இம்மூன்றாம் கட்ட நிலையை ஏனைய கட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது சொற்பகாலம்தான் என்பதை விளங்கலாம். ஆன்மாவின் அந்த ஆறு கட்டப் பயணத் தொடரை பின்வரும் வரைபின் மூலம் விளங்கலாம்.

இவ்வரைபின் ஒவ்வொரு கட்டத்தையும் சற்று விரிவாக நோக்குவோம். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்து அவருக்கு ரூஹை (ஆன்மாவை) ஊதியதன் பின்பு அவரிலிருந்து மறுமை நாள் நிகழும் வரையிருக்கும் இருதி மனிதன் வரையுள்ள அனைவரதும் ஆன்மாக்களைப் படைத்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான். நபியே உமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களது முதுகளிலிருந்து அவர்களது சந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தமக்கே சாட்சியாக்கி அவர்களிடம் நான் உங்கள் இரட்சகனல்லவா? என்று (கேட்ட) சமயத்தில்...” (அல்அஃராப்:172) அவ்வான்மாக்கள் இருக்குமிடம்ஆலமுல் அர்வாஹ்” (ரூஹ்களின் உலகம்) என அழைக்கப்படுகின்றது. இதுவே ஆன்மாக்களின் பயணத்தொடரின் ஆரம்பகட்டம். இதில் ஒரு ஆன்மா தங்கியிருக்கும் காலமோ மிக் நீண்டது. எவ்வளவெனின் இன்றொரு குழந்தை பிறக்குமென்றிருந்தால் அதன் ஆன்மா ஆதம் (அலை) அவர்களைப் படைத்ததிலிருந்து தாயின் கருவரையில் சேர்க்கப்படும்வரை எண்ணிப்பார்க்க முடியாத காலங்கள் ரூஹ்களின் உலகத்தில் தங்குகின்றது. ஆன்மா இரண்டாம் கட்டமாக தாயின் கருவரையை அடைகின்றது. இங்கு பொதுவாக நான்கு அல்லது ஐந்து மாதங்களே தங்கியிருக்கும். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போது அதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பிவைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில் அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்துவிடுகின்றார்.” (முஸ்லிம்) தாயின் கருவரையிலிருந்து இப்பூவுலகை அடைகின்றது அவ்வான்மா. இதுதான் மிக முக்கிய இடம். ஆன்மாக்கள் எந்நோக்கத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டனவோ அந்நோக்கத்தை சரியாக நிறைவேற்ற வேண்டிய இடம் இதுதான். அல்லாஹ்விடம் ஆன்மாக்கள் ஆலமுல் அர்வாஹில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய இடம். இதில் ஆன்மா இறை வழிகாட்டலையும் அவன் தூதரின் போதனைகளையும் ஏற்றுப் பின்பற்றி வாழந்தால் அதன் அடுத்த கட்ட நகர்வுகள் சுபீட்சமானதாக அமையும். மாறாக அவற்;றைப் புறக்கனித்து வாழ்ந்தால் வேதனை மிக்கதாக அமையும். இவ்வுலக வாழ்க்கை என்பது இரண்டு பாதைகளைப் பிரிக்கும் ஒரு சந்தி (Junction). தொடர்ந்து ஒரே பாதையில் (One way) வந்த ஆன்மா இங்கிருந்து பிரியும் இரு பாதைகளில் ஏதாவதொரு பாதையின் மூலமே செல்லமுடியும். அல்லாஹ் இந்த இரண்டு பாதைகளையும் மனிதனுக்குக் காட்டித்தந்துள்ளான். அவன் கூறுகின்றான். “(நன்மை, தீமையாகிய) இரு பாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்து விட்டோம்.” (அல்பலத்:10) மற்றும் {ரதுத்தஹ்ரின் மூன்றாம் வசனத்தில்நிச்சயமாக, நாம் அவனுக்கு (நல்லது, தீயது பற்றிய) வழியைத்தெளிவு செய்தோம், (அதைப்பின்பற்றி) அவன் ஒன்று நன்றியுள்ளவனாக இருக்கலாம், அல்லது (அதனைப் பின்பற்றாது) நன்றிகெட்ட (நிராகரிப்ப)வனாக இருக்கலாம்.” என்று கூறுகின்றான். இவ்விரு பாதைகளில் ஒன்று நரகின் பாதை மற்றையது சுவனத்தின் பாதை. (மேற்குறிப்பிட்ட வரைபை அவதானிக்கவும்) எனவே இதில் நாம் சுவனத்திற்கான நேரான பாதையைத் தெரிவுசெய்யவேண்டும். மாற்றமாக இவ்வுலகை சுவனமாக எண்ணி மனம்போன போக்கில் வாழ்வது நேரெதிரான நரகின் பாதையைத் தெரிவுசெய்ததாயமையும். எனவேதான் அல்லாஹ் தனது கட்டளைகளனி பிரகாரம் உலகில் வாழுமாறும் உலகக் கவர்ச்சிகளில் மூழ்கிவிட வேண்டாமென்றும் கூறி உலக வாழ்க்கை அற்பமானது என்று கூறுகின்றான். இம்மை மறுமையின் விளைநிலம்என நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கிணங்க, மறுமைக்கான கட்டுச்சாதனங்களை இங்குதான் தயார்செய்துகொள்ள வேண்டும். உலகம் எனும் இத்தேர்வுக்களத்தை நல்ல முறையில் எதிர்கொண்டால்தான் முறுமையில் சிறந்த பேருகிடைக்கும். ஆன்மாவின் பயணத்தில் அது பூமியில் தங்கும் காலம்தான் மிகச் சொற்பமானது. இதனை ஏனைய காலகட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கலாம். எனினும் மனிதன் இங்குதான் தவறிலைக்கின்றான். இறைவனது அருட்கெடைகளையெல்லாம் பூரணமாக அனுபவித்துவிட்டு செருக்குக்கொள்கின்றான். ஆடம்பரத்தில் ஆடுகின்றான். இறைவனையும் நிராகரிக்கின்றான். அவனது பார்வையில் உலகம் என்பது வெறுமனே இன்பமனுபவித்துவிட்டுச் செல்லும் ஓர் இடம். ஏனெனில் நிரந்தரமான உயர்ந்த மறுமையின் சுவன வீட்டை அவன் மறுக்கிறானல்லவா? அதனால்தான் இது அற்பமானதென்பதை விளங்காதிருக்கின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்எனது உம்மத்தின் வாழ்க்கை 60-70 வயதுக்கு இடைப்பட்டதாகும்” (திர்மிதி) இந்த ஹதீஸ் குறிப்பிடும் இவ்வுலகில் ஆன்மாவின் வயதெல்லையையும் அது தங்கும் ஏனைய கட்டங்களின் கால அளவையும் ஒப்பிடுகையில் இது குறுகிய காலம்தான். உடலைவிட்டுப் பிரியும் ஆன்மா அடுத்து ஆலமுல் பர்ஸகை அடைகின்றது. ஆலமுல் பர்ஸக் என்பது மரணத்திற்கும் மறுமைக்கும் இடைப்பட்ட வாழ்க்கை. மரணித்த ஒருவரது ஆன்மா நல்லதாக இருந்தால் அது இல்லிய்யீனிலும் அதுவே கெட்டதாக இருந்தால் ஸிஜ்ஜிய்யீனிலும் பதியப்பட்டதன் பின்பு பர்ஸகிலே சேர்க்கப்படும். இங்கும் ஆன்மாக்கள் நீண்டகாம் தங்கியிருக்கும். எவ்வாறெனின் ஆலமுல் அர்வாஹிலிருக்கும் ஆன்மாக்கள் அனைத்தும் பூமியை அடைந்து பின்பு பூமையை அடைந்தவையெல்லாம் மரணித்து ஆலமுல் பர்ஸகை அடைந்து மறுமை நாளாகும்வரை ஏற்கனவே பர்ஸகை அடைந்த ஆன்மாக்கள் நீண்டதொரு கால இடைவெளியில் தங்கியிருக்கும். இங்கு நல்ல ஆன்மாக்கள் இன்பத்தையும் கெட்ட ஆன்மாக்கள் வேதனையையும் அனுபவித்துக்கொண்டிருக்கும். ஆலமுல் பர்ஸகில் இருந்த ஆன்மாக்கள் அடுத்தகட்ட நகர்வாக மஹ்ஷர்வெளியை அடையும். பூவுலகில் செய்த நன்மைக்கும் தீமைக்குமேற்ப கூலிவழங்கப்படும் தீர்ப்பு நாள்தான் மஹ்ஷருடைய நாள். அது ஒரு மாபெரும் திடல். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்து இருதி மனிதன்வரை அனைவரும் அங்கு திரண்டிருப்பார்கள். அனைத்து ஆன்மாக்களும் மீண்டும் அவற்றுக்கான புதிய உடல்களில் நுழைவிக்கப்பட்டிருக்கும். அவ்வுடல்கள் மறுமையின் வேதனையையோ அல்லது இன்பத்தையோ அனுபவிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும். அல்லாஹ் கூறுகின்றான். “ஆன்மாக்கள் (அவற்றின் உடல்களோடு)ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும்போது.” (அத்தக்வீர்:07) இங்கும் ஆன்மாக்கள் மிக நீண்டகாலம் தங்கியிருக்கும். அது இத்துனை வருடங்கள்தான் என்று குறிப்பிட்டுக்கூற முடியாது. அதனை அல்லாஹ்தான் அறிவான். எனினும் இது தொடர்பாக இரண்டு குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடலாம். 1 மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 1000 வருடங்களுக்குச் சமன். நிச்சயமாக உம் இரட்சகனிடத்தில் ஒரு நாள் நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் போன்றதாகும்.” (அல்ஹஜ்:47) 2 மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 50,000 வருடங்களுக்குச் சமன். மலக்குகளும் ஜிப்ரீலும் இவன் பக்கம் ஒரு நாளில் உயர்ந்து செல்வார்கள். அதன் அளவு ஐம்பதுநாயிரம் வருடங்களாகும்.” (அல்மஆரிஜ்:04) இவ்விரு வசனங்களும் வித்தியாசமான கால அளவைக் காட்டினாலும் தப்ஸீர் அறிஞர்களின் கருத்துப்படி ஒரு முஸ்லிமுக்கு மஹ்ஷரின் ஒரு நாள் இம்மையின் ஆயிரம் வருடங்களுக்குச் சமனாகவும் ஒரு காபிருக்கு மஹ்ஷரின் ஒரு நாள் இம்மையின் ஐம்பதுநாயிரம் வருடங்கள்குச் சமனாகவும் இருககும் என ஒரு கருத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் எவ்வளவு காலம் என எமது குறிகிய அறிவால் சரியாகக் குறிக்துக் கூற முடியாது. ஆனாலும் ஒரு கணிப்பீட்டுக்காக ஒரு முஸ்லிம் ஐந்து நாட்கள் தங்குவதாகக் கொண்டால் அது இப்பூமியின் ஐந்தாயிரம் வருடங்களுக்குச் சமன். இதுகூட பூவுலக வாழ்வைவிட நீளமானதே! ஆன்மாவின பயணத் தொடரின் இக்கட்ட வாழ்வுதான் நிரந்தரமானது. ஒவ்வொரு ஆன்மாவும் பூமியில் எவ்வகையான வாழ்க்கையை வாழ்ந்ததுவோ அதற்கு ஏற்றதான வாழ்கை இங்கு பெற்றுக்கொள்ளும். உலகில் இஸ்லாம் கூறிய பிரகாரம் வாழ்ந்து நன்மைகள் புரிந்து இறைதிருப்தியைப் பெற்றிருந்தால் அந்த ஆன்மா சுவனத்தை அனந்தரமாகக்கொள்ளும். இதற்குப் புறம்பான வாழ்வை வாழ்ந்தால் வேதனைகள் மிகுந்த நரகை ஒதுங்குமிடமாகப் பெற்றுக்கொள்ளும். இங்கு வாழும் வாழ்க்கைக்கு முடிவே இல்லை. ஆக ஆன்மாவின் இந்த ஆறு கட்ட பயணங்களையும் எடுத்து நோக்கினால் மிகக் குறைந்த கால வாழ்க்கை பூமியிலேயே அமைகின்றது. இந்த சொற்பமான வாழ்க்கை அற்பமானதுதான். ஆரம்பத்தில் கூறியதுபோன்று மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு பாதைகளும் இரண்டு விருப்பு, வெறுப்புகளைக் கொண்டது. ஒன்று; இறை விருப்பு, வெறுப்பு. மற்றையது மனித விருப்பு, வெறுப்பு. இதில் மனித விருப்பு, வெறுப்புகளுக்கு முன்னுரிமையளித்தவன் நரகின் பாதையைத் தெரிவு செய்வான். இறை விருப்புக்கும் வெறுப்புக்கும் முன்னுரிமையளித்து அதன்படி வாழ்ந்தவன் சுவனப் பாதையைத் தெரிவுசெய்தவனாவான். அல்லாஹ் கூறுகின்றான்: யார் தனது இரட்சகனின் சந்நிதியைப் பயந்து தனது விருப்பு வெறுப்புகளிலிருந்தும் தனது உள்ளத்தைத் தடுத்துக் கொள்கிறானோ அவன் ஒதுங்குமிடம் நிச்சயமாக (நிரந்தர இன்பங்கள் நிரைந்த) சுவனம்தான்” (69:40,41) எனவே நாம் இந்த உலகினதும் மனித வாழ்வினதும் யதார்த்த நிலையை விளங்கவேண்டும். உண்மையில் உலக வாழ்க்கை வீணும் வேடிக்கையும் நிறைந்தது. ஆற்பமும் சொற்பமும் விளைந்தது. ஆனால் இதுதான் மனித ஆன்மாவின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு சந்தி. எனவேதான் இந்த உலக வாழ்வில் மனிதனை ஒரு வழிப்போக்கனைப்போல் வாழுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் உலகத்தில் ஓர் அண்ணியனைப்போல் அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் இருங்கள்.” (புகாரி) மலக்குல் மௌத் இப்பூமியில் 950 வருடங்கள் வாழ்ந்த நூஹ் நபியிடம் வந்துநீர் எவ்வளவு காலம் இங்கு வாழ்ந்தீர்?” என்று கேட்டதற்குஒரு வீட்டின் முன் வாயிலால் நுழைந்து பின் வாயிலால் வெளியேளியது போன்ற காலம்தான்.” என்றார்கள். ஆல்குர்ஆனும் இதனையே கூறுகின்றது. “ஆண்டுகளின் எண்ணிக்கையால் நீங்கள் எவ்வளவு காலம் பூமியில் கங்கினீர்கள்?” என்று அவன் கேட்பான். அதற்கவர்கள்ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியே தங்கியிருப்போம்என்பார்கள்.” (23:112,113) அது மட்டுமன்றி அல்லாஹ்விடத்தில் ஈயின் இறக்கையிலும் அற்பமானது என நபியவர்கள் கூறினார்கள். “இந்த உலகம் அல்லாஹ்விடத்தில் ஓர் ஈயின் இறக்கையளவு பெருமதியாக இருக்குமென்றால் அவனை நிராகரிக்கும் மனிதனுக்கு தண்ணீரும் கொடுக்கமாட்டான்.” (திர்மிதி) ஆக மனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக் கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோ இச்சையின் பிரகாரம் வாழ்ந்துவிட்டுப்போகும் சதைப் பிண்டமோ அல்ல. மாறாக அவனது வாழ்வு இறை வழிகாட்டலின் கீழ் அமையவேண்டும். இவ்வுலகில் எமது பணி என்ன என்பதை விளங்கவேண்டும். ஆதன்படி செயற்பட்டு நிரந்தர சுவனபதியை அனந்தரமாகக்கொள்வோம்.

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...