இன்று சுமார் 305 மில்லியன் குடும்பங்கள் இணைய இணைப்பில் இணைந்துள்ளன. அது மட்டுமன்றி ஒவ்வொரு அரை வருடமும் 50 விழுக்காடுகளால் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இது இஸ்லாத்தின் தூதை சரியான முறையில் அவர்களுக்கு எத்திவைப்பதற்கான சிறந்ததொரு களம் என்று கூறலாம். இக்காலம் எவ்விதத் தடையுமின்றி இத்தூதை அனைவருக்கும் எத்திவைப்பதற்கான சிறந்த வாய்ப்பை எம் கைவசம் கொண்டுவந்து தந்துள்ளது. ஒரு காலத்தில் ஒரு நாட்டின் குடிமக்களுக்கு தமது தூதை எத்திவைக்க அந்நாட்டு மன்னனின் அனுமதி அவசியம் தேவைப்பட்டது. அவர்கள் மறுத்தால் யுத்தம் செய்து நாட்டைக்கைப்பற்றித்தான் அம்மக்களைச் சுதந்திர சிந்தனையாளர்களாக மாற்றமுடியும். ஆனால் இன்று உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் புகுந்து ஒவ்வொரு தனிமனிதனது உள்ளத்துடனும் எவ்விதத் தங்கு தடைகளுமின்றி உரையாடக்கூடிய சாத்தியத்தை இணையதளம் அமைத்துத் தந்துள்ளது.
...ஆலிப் அலி...
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...