நவீன திரைப்படக் கலாசாரமானது
பலரையும் தன்வயப்படுத்தும் அதீத ஆற்றலைக் கொண்டுள்ளது. சிறியோர் முதல் முதியோர்வரை
அனைவரையும் இழுத்துக் கட்டிப்போடும் பல்வேறு உத்திகளை இன்றைய திரைப்படங்கள் கையாள்கின்றன.
திரைப் படப்பிடிப்புத் துறையில் வளர்ச்சியுற்றிருக்கும் பல்வேறு தொழில்நுட்ப முறைகளே
இதற்குக் காரணம் எனலாம். ஆரம்ப காலங்களில் இருந்த கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சிகள், அதில் ஒளிபரப்பப்பட்ட
கருப்பு வெள்ளைத் திரைப்படங்கள், பேசும் திரைப்படங்கள் அதன்பின்னர் வெளிவந்த வண்ணத் தொலைக்காட்சிகள்
வண்ணத் திரைப்படங்கள் என திரைப்படங்களின் வளர்ச்சி துரிதமாக எழுச்சியுற்று வந்துள்ளது.
அத்தோடு இன்று LCD, LED மற்றும் 3D தொழில்நுட்பங்களில் மலிந்துபோயிருக்கும் தொலைக்காட்சிகளாலும்
திரைப்படத் தயாரிப்புகள் முன்பைவிட அதிகரித்துள்ளன.
இவ்வாக்கத்தை எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரித்துள்ளேன்.
1 comments:
நல்ல பதிவு..நன்றி..
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...