சூரியனை வெள்ளிக் கிரகம் கடந்து செல்லும் அற்புத நிகழ்வு நாளை (6ம் திகதி) இடம்பெறவுள்ளது. 105
வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் இவ் அற்புத நிகழ்வை யாரும் தவரவிடாமல்
பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற தொரு நிகழ்வை எமது வாழ்நாளில் மீண்டும் ஒரு முறை
சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்காது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வெள்ளிக் கிரகம் பயணிக்கும் இக்காட்சியை இலங்கை வாழ் மக்களால்
சூரிய உதயம் முதல் காலை பத்து மணிவரை அவதானிக்க முடியும். இப்படி வெள்ளி சூரியனை கடக்கும்
நிகழ்வு இதுவரை ஏழு முறை மட்டுமே பார்வையிடப்பட்டுள்ளது.
(1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 ஆம்
ஆண்டுகளில்) நடைபெற்றிருக்கிறது.
நாளை நடைபெற இருப்பது எட்டாவது
நிகழ்வாகும். இக்காட்சியை யாரும் வெற்றுக்
கண்களால் பார்ப்பின் கண்கள் பாதிக்கப்படும். சூரியனின் பிம்பத்தை திரையொன்றில்
விழவைத்துப் பார்க்கமுடியும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...