"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

25 June 2017

தேசம் கடந்து பயணிக்கும் சால்மன் மீன்கள்

சாலமன், சால்மன் அல்லது செமன் (Salmon) என்றதும் நாம் உணவுக்காக எடுத்துக்கொள்ளும் செமன் டின் மீன் ஞாபகத்திற்கு வருகின்றதா? ஆம் அதுவே தான். பதனிடப்பட்டு அடைக்கப்பட்டு கடைகளில் விற்பணைக்கு வரும் அந்த மீனினத்தைப் பற்றித்தான் நாம் இத்தொடரில் பார்க்க இருக்கின்றோம். இவற்றின் விசித்திரமான வாழ்க்கை வட்டத்தைப் படித்துப் பார்த்தால் ஆச்சரியப் படுவீர்கள். அற்புதமான, நம்ப முடியாத பல இயல்புகளைக் கொண்டு வாழ்க்கை நடாத்தும் இம் மீன்கள் வல்ல அல்லாஹ்வின் படைப்பாற்றலை ஒரு முறை மீட்டிப் பார்க்கவைக்கின்றன.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling
www.aliaalif.tk / aalifali@gmail.com

உங்கள் கருத்து:

17 May 2017

தாகத்தில் தண்ணீர்

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

20 April 2017

செல்லமான கினிப் பன்றிகள்

கினிப் பன்றி (Guinea pig) இந்தப் பெயரைக் கேட்டதும் பயந்துவிட வேண்டாம். பெயரில் பன்றி pig என்று வந்ததற்கு இது பன்றி இனத்தைச் சேர்ந்ததோ அல்லது கினி Guinea என்று வந்ததற்கு கினியா நாட்டைச் சேர்ந்ததோ அல்ல. "பன்றிகள்" என இவை அழைக்கப்படுவதன் சரியான விளக்கம் என்ன என்பது தெளிவில்லாமலே இருக்கின்றது. அவை ஏதோவொரு வகையில் பன்றிகளின் தோற்றத்தில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இது கொறித்து உண்ணும் கேவிடே குடும்பவகையினுடையதும் மற்றும் கேவியா எனும் விலங்கு வகையைச் சார்ந்ததுமாகும். இவை அந்தீஸ் மலை நாட்டுக்கு உரித்தானவையாகும். ஆனால் தற்போது இவற்றை இயற்கையான காட்டுப் பகுதிகளில் காண முடிவதில்லை. தற்போது இவை வீடுகளில் செல்லப் பிராணியாகவும் பண்ணைகளில் விற்பனைக்காவும் தான் வளர்க்கப்படுகின்றன.

27 March 2017

குடிகாரனுக்கு 40 கசயடி, அவதூறு பரப்புரவனுக்கு 80 கசயடி.

---------------------------------------------------------------
*. "ஹாய் பிரண்ட்ஸ்! இந்தப் பையன் யாரு தெரியுமா? நேத்து நடந்த விபத்துல இவனோட கண்ணு ரெண்டும் பழுதாப் போச்சு. சோ! இந்த மெசேஜ நீங்க செயார் பண்ணினா வட்ஸ்அப் கம்பனி அவங்க எக்கவுண்டுக்கு 1 ரூபா போடுவாங்க."
*. "அவசரம்! அவசரம்! ஐந்து வயதுப் பிள்ளை ஒன்றுக்கு AB+ இரத்தம் மிக அவசரமாகத் தேவை. இந்த மெசேஜ உடனடியா செயார் பண்ணி உதவி செய்ங்க."
*. "ஹெலோ காய்ஸ்! இவங்க என்னா சொல்றாங்கன்னா இந்த சின்ன பாப்பா சேப்டி பின்ன முழுங்கிட்டு. அதுக்கு ஆபரேசன் பண்ணனுமாம். சோ இந்த மெசேஜ செயார் பண்ணினா வட்ஸ்அப் கம்பனி அவங்களுக்கு எட்டு ரூபா கொடுக்குறாங்க."
*. ”லா இலாஹ இல்லல்லாஹ்! முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்” இந்த மெசேஜ பத்து குரூப்புக்கு இப்பவே செயார் பண்ணுங்க. விடியிறதுக்குள்ள நல்ல செய்தி வரும். இல்லயா ரத்தம் கக்கி சாவீங்க…"
அய்யய்யோ அய்யய்யய்யோ! தாங்க முடியல.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
B.A. (Cey) Dip. in Psychological Counseling.

16 March 2017

துடிப்புள்ள கறையான்கள்

அறிமுகம்
பல்வேறு பண்புகளில் கறையான்கள் சிறப்புப் பெறுகின்றன. தோற்ற அமைப்பு, கூட்டமைப்பு, வாழ்க்கை முறை என நிறையக் கூறலாம். அல்லாஹ்வின் இச்சிறு படைப்பில் இருக்கும் மகத்தான அற்புதங்கள் என்னவென்று இத்தொடரில் கற்றுக்கொள்வோம். கறையான்கள் Termites என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. எறும்பு, தேனி போன்று கறையான்களும் கூட்டமாக, சமூகமாக வாழும் பூச்சியினமாகும் (Social insect). கரையான்கள் Isoptera (சம இறகிகள்) என்ற வரிசையைச் சேர்ந்தன. Iso என்றால், ‘ஒரே மாதிரி என்றும் Ptera என்றால், ‘இறக்கை என்றும் பொருள். அதாவது, கரையான்களின் ஒரு வகையான ஈசல்களின் முன் மற்றும் பின் இறக்கைகள் ஒரே மாதிரி இருப்பதால், இந்தப் பெயர் வந்துள்ளது. கறையான்கள் வெள்ளை எறும்புகள்  என்றும் அழைக்கப்படுகின்றன. காரணம் அவற்றின் வெளித்தோற்ற அமைப்புதான்.
ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.

Related Posts Plugin for WordPress, Blogger...