Facebook கணக்கு வைத்திருக்கும் அன்பர்களே! ஒரு எச்சரிக்கை. நேற்றும் நேற்றைக்கு முன் தினமும் எனது இரண்டு நண்பர்கள் என்னை அழைத்து எனது Facebook முகப்புப் பக்கத்தில் (Wall) மோசமான சில ஆபாசப் படங்கள் காணப்படுவதாகவும் அவற்றை நானே என பெயரில், எனது Profile Picture உடன் Upload பண்ணியிருப்பதாகவும் முறையிட்டார்கள். நானும் பயந்துவிட்டேன். நான் மட்டுமல்ல பலரது கணக்கிலிருந்தும் இதுபோன்ற ஆபாச படங்கள் இணைக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் அது அவர்களுக்கே தெரியாதிருப்பதும் பின்னர் அறிந்துகொண்டேன். எமது பெயரில் நாம் பண்ணியது போன்று வேறு யாரோ செய்கிறார்கள். இது மானம் போகும் வேலை. எத்தனையோ பேர் எம்மை தப்பாக நினைத்துவிட ஏதுவாய் அமைகின்றது. கீழே இருக்கும் படத்தை சற்று வாசித்துப்பாருங்கள்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒருவர், “வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? என்று கேட்டார். அதற்கு ஐன்ஸ்டீன், “A=X+Y+Z” என்று பதிலளித்தார். இந்த பதிலைக் கேட்ட அவருக்கு ஒன்றுமே புரியவில்லை! பின் அதற்கான விளக்கத்தை விஞ்ஞானி ஐன்ஸ்டீனே விளக்கினார். “A” என்பது தான் வாழ்க்கையில் வெற்றி. கடினமான உழைப்பே “X” ஆரோக்கியமான விளையாட்டு ‘Y’ என்றார். உடனே அவர், ‘Z’ என்னவென்று சொல்லவில்லையே? என்றார். அதற்கு ஐன்ஸ்டீன், “அதிகம் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது!” என்றார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
கடந்த 10 வருடங்களில் முதுமை அடைந்தோரின் எண்ணிக்கை 18 சதவிகிதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குரே தெரிவித்துள்ளார். 2031ம் ஆண்டாகும் போது இது 22 சதவிகிதத்தால் அதிகரிக்குமெனவும் தற்போது முது டைந்துள்ள 40 இலட்சம்பேரும் அடுத்துவரும் 10 வருடங்களில் 50 இலட்சமாக அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் சுகாதார சேவை வளர்ச்சியடைந்துள்ளமையால்தான் உயிர் வாழும் வயதெல்லை 71 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முதியோர் இல்லங்களும் இலங்கையில் அதிகரித்துச் செல்வது குறிப்பித்தக்கது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
| Green Technology, Green Computing எல்லாம் கேள்விப்பட்டிருப்பீங்க. இது Green Train Tunnel. பசுமைத் தண்டவாளம்னு சொல்லலாம். |
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகக் கொள்ளப்படுகின்றது. இது உமர் (ரழி) அவர்களது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளன் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியதும் முஹர்ரம் மாதத்தில்தான். அல்லாஹ்வும் நபியவா்களும் இம்மாதத்தைப் புனிதப்படுத்தியுள்ளனர். எனவே இம்மாதத்தில் நோன்பு வைப்பது அதிசிறப்புக்குரியதாகவும், நன்மைகளை அல்லித்தருவதாகவும் விளங்குகின்றது. எனவே குறிப்பாக இம்மாதத்தில் 9,10ம் பிறைகளில் (தாஷுஆ, ஆஷுரா) நோன்புகளை நோற்று நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து: