இன்றைய சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு துறைசார் சமூக ஆர்வளர்களும் அவர்களது துறைக்கேற்ப ஒவ்வொரு பிரச்சினையையும் நோக்குகின்றனர். எனினும் இந்தத் தற்கொலை எனும் சமகால சமூகப் பிரச்சினையில் (Contemporary Social Issue) அனைத்து சமூகவியல் அறிஞர்களும் பொதுநோக்குடனேயே கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில் அது ஒரு பாரிய சமூக நோய். தொற்று நோய் என்று கூடக் கூறலாம். தற்கொலை என்பது சமூகப் பஜரச்சினைகளின் வேறு ஒரு பரிமாணம். அது தனிப்பட்ட ஒரு நபரின் செயலாயினும் சமூக நிகழ்வாகவே சமூகவியலாளர்களால் நோக்கப்படுகின்றது.
27 June 2010
02 June 2010
உயிர்பல்வகைமையும் (Bio diversity) சுற்றுச் சூழல் தொழில்நுட்பமும் (Green Technology)
உயிர்வாழ்க்கைக்குச் சாத்தியமான இந்தப் பூவுலகில் மனிதனால் புரியப்படும் பல்வேறு காரணிகளால் அதன் எதிர்காலமே கேள்விக்குள்ளாகி வருகின்றது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப விருத்தியில் முன்னேரிச்செல்லும் மனிதன் அதிகமாகவே இயற்கைகையச் சீண்டிவிட்டுள்ளான். இதனால் புவி வெப்பமடைதல் (Global worming), ஓசொன் படலத்தில் துவாரம், வளி, நீர் என்பன மாசடைதல் என பல்வேறு சவால்களை இன்று இவ்வுலகம் எதிர்நோக்கியுள்ளது. இதன் மூலமாக பூவுலகின் உயிர்ப் பல்வகைமை அழிவைநேக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
உயிர்வாழ்க்கைக்குச் சாத்தியமான இந்தப் பூவுலகில் மனிதனால் புரியப்படும் பல்வேறு காரணிகளால் அதன் எதிர்காலமே கேள்விக்குள்ளாகி வருகின்றது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப விருத்தியில் முன்னேரிச்செல்லும் மனிதன் அதிகமாகவே இயற்கைகையச் சீண்டிவிட்டுள்ளான். இதனால் புவி வெப்பமடைதல் (Global worming), ஓசொன் படலத்தில் துவாரம், வளி, நீர் என்பன மாசடைதல் என பல்வேறு சவால்களை இன்று இவ்வுலகம் எதிர்நோக்கியுள்ளது. இதன் மூலமாக பூவுலகின் உயிர்ப் பல்வகைமை அழிவைநேக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்
அலெக்ஸ் வெய்னுக்கு ஆயுள்தண்டனை.
கடந்த வருடம் (2009) ஜூலை 01 ஆம் திகதியின் பின்னர் முழு உலகையுமே சலசலப்புக்குள் ஆழ்த்திய விடயமாக மர்வா அலி அல் ஷெர்பினியின் கொலைச்சம்பவம் திகழ்கிறது. நீதி வேண்டி நீதிமன்றம் சென்ற மர்வா நீதிபதிகள், பொலிசார், பொதுமக்கள் என அனைவர் முன்னிலையிலும் ஏன் அவரது கனவர் மற்றும் மூன்றே வயதான அவரது மகன் முன்னாலும் நீதிமன்றிலேயே வைத்து 18 தடவைகள் கத்தியால் குத்திக் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். இவ்வளவுக்கும் அவர் மூன்று மாதக் கர்ப்பிணியும் கூட. நினைக்கும் போது உடலெல்லாம் புல்லரித்து சிலிர்த்துவிடுகின்றதல்லவா? சில சமயம் இதனை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். ஏனெனில் ஊடகங்கள் கூட இவ்விடயத்தில் இருட்டடிப்புச் செய்துவிட்டன.
உங்கள் கருத்து:
Labels:
திடீர் NEWS
15 May 2010
டாக்டர் கீத் மூர் (Dr.Keith More)
டாக்டர் கீத் மூர் (Dr.Keith More) உலகப் பிரசித்திபெற்ற ஒரு முளையவியற்துறைப் பேராசிரியர். இவர் கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக்கழகத்தில் உடற்கூற்று மற்றும் முளையவியற்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஒருமுறை அரபு மாணவர்கள் சிலர் இவரிடம் முளையவியல் பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களைத் திரட்டி அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்து அவரிடம் கொடுத்துவிட்டு அவை பற்றிய தெளிவை ஆய்வுமூலம் விளக்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டனர்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
வரலாறு,
வீடியோ க்ளிப்ஸ்
14 May 2010
சீனாவில் இஸ்லாம் : வரலாற்று மறு வாசிப்பு
மிக சமீபத்தில் உலக முஸ்லிம்களது மாத்திரமன்றி அனைவரினதும் கவனத்தைத் தன்பால் ஈர்த்த ஒரு விடயம்தான் உய்குர் முஸ்லிம்களது சுதந்திரப் போராட்டம். இந்த உய்குர் முஸ்லிம்களது இருப்பை கேள்விக்குள்ளாக்கி மிலேச்சத்தனமான அடக்குமுறைகளைக் கட்டுடைத்துள்ள சீன அரசாங்கத்தின் தோல் சர்வதேசத்தின் முன் உறிக்கப்பட்டதையும் இருப்பினும் அது இன்னும் தொடர்வதையும் தாங்கள் அறிவீர்கள். உண்மையில் உய்குர் முஸ்லிம்கள் யார்? இவர்கள் ஏன் வரலாற்று நெடுகிலும் அடக்குமுறைகளுக்கு இலக்காகி வருகிறார்கள்? சீன அரசு உய்குர் பிரதேசத்தை கையகப்படுத்த முயற்சிப்பதில் என்ன இலாபம் காண்கிறது? போன்ற கேள்விக்குறிகளுக்கு விடைகண்டு முற்றுப்புள்ளி வைக்க நாம் வறலாற்றைச் சற்று பின்னோக்கி வாசிக்க வேண்டும்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
உங்கள் கருத்து:
Labels:
வரலாறு
Subscribe to:
Posts (Atom)