இரவு
நேரங்களில் கொழும்பு பஸ்தரிப்பு நிலையங்களில் பஸ்ஸிற்காகக் காத்திருக்கும் பயணிகளை
வழிமறித்து கொள்ளையிடும் புதுவகையான கும்பலொன்று இயங்கிவருகின்றது. இரவு பத்து மணி
தாண்டியதும் கோட்டை, புறக்கோட்டை மற்றும் குனசிங்ஹ புர போன்ற இடங்களில் இவர்கள் அதிகம்
நடமாடுகின்றனர். இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகங்களிலிருந்து விடுமுறையில் வருபவர்களையும்
தூர இடங்களுக்குப் பயணிப்பவர்களையும் மடக்குவதற்காக இவர்கள் கையாளும் திட்டம் விபச்சார
முறையாகும்.
15 May 2012
10 May 2012
மீண்டும் ஒரு மிகப் பெரிய அல்குர்ஆன்
அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கியது அதனைக்கொண்டு மனிதர்கள் நல்வழியில் செல்ல. அதனைப் படித்து, ஆராய்ந்து சிறந்த வாழ்க்கையை வாழ. ஆனால் இன்று அல்குர்ஆன் காட்சிப்பொருளாக்கப்பட்டு வருகின்றது. இந்த மிகப் பெரிய அல்குர்ஆனை இத்தாலியின் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
800 கி.கி. நிறையையும் 2 m x 1.5 m x 25 cm அளவையும் 250 கிராம்களிலான
632 பக்கங்களையும் கொண்டுள்ளது. இதன் அட்டைப்பக்கம் தங்கம், சில்வர், மற்றும் malachite, மஞ்சள், நீல
பச்சை வண்ணம் கொண்ட இரத்தின கல், கோமேதகம், தங்கக்
கல் போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளது. தற்போது இதனை பழமைவாய்ந்த நகரங்களில் ஒன்றான போல்காரிற்கு
இதனை மாற்றத் தீர்மானித்துள்ளனர். ஏனெனில் அங்குதான் Volga Bulgaria என்பவர் இஸ்லாத்தை அரச மதமாக 922 இல் அங்கீகரித்தார்.
உங்கள் கருத்து:
09 May 2012
08 May 2012
தொல்லைதரும் ஈக்கள்
ஈக்கள் அதிகமாக குப்பை கூழங்களிலும் அழுகிய உணவுப் பொருட்களிலும் நகர்ப்புறங்களில்
அழுகிய வாய்க்கால்களிலும் மலசலகூடங்களிலும் அதிகமாகச் சஞ்சரிக்கின்றன. ஓரிடத்தில் ஈயொன்று
போய் அமர்ந்தால் அவற்றின் உடலிலும் கால்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான மயிர்களில் ஆயிரக்கணக்கான
நுண் கிரிமிகள் தொற்றிக்கொள்கின்றன. ஈக்கள் எமது உணவுகளில் வந்து மொய்க்கும் போது அக்கிருமிகள்
எமது உணவுகளிலும் தொற்றிக்கொள்கின்றன. இதனால் மனிதன் பல நோய்களுக்கும் ஆளாகின்றான்.
ஆனாலும் அல்லாஹ் அதே ஈக்களில் நோயெதிர்ப்புச் சக்தியையும் வைத்துள்ளான். இன்று விஞ்ஞானம்
கூறும் இத்தகவலை நபியவர்கள் 14 நூற்றாண்டுகளுக்கு
முன்பு கூறிய அற்புதத்தைப் பாருங்கள்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
தொழில்நுட்பம் : இயற்கையோடு இயைந்திருக்கட்டும்
மனிதன் இன்னும் தனது மூளையின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவில்லை. சாதாரண மனிதர்கள்
7 சதவீதமும் அறிஞர்கள் மற்றும்
சிந்தனையாளர்கள் 10 சதவீதமும் விஞ்ஞானிகள்
12 சதவீதமும்தான் மூளையைப் பயன்படுத்துகின்றனர்.
மூளையை இதுவரை கூடுதலாகப் பயன்படுத்தியவர் எல்பர்ட் ஐன்ஸ்டீன். இன்னும் மூளையில் 88 சதவீதமான அளவு பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கின்றது.
பயன்படுத்திய 12 சதவீதத்திற்கே இத்தனை
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளுமென்றால் மீதமாக உள்ள 88 சதவீதத்துடன் சேர்த்து முழு அளவில் மூளையைப் பயன்படுத்தினால்
என்னெ;ன கண்டு பிடிப்புகளெல்லாம்
வளர்ந்திருக்குமோ...?
உங்கள் கருத்து:
Labels:
தொழில்நுட்பம்
Subscribe to:
Posts (Atom)












