பிற கோள்களைவிடவும் சந்திரனை நாம் இரவு வானில் தெளிவாகக் காண முடியுமானபோதிலும் உலகில் யாரும் இருவரை நேரடியாகக் காணாத ஒரு பக்கமும் சந்திரனுக்கு உண்டு. அதாவது எப்போதும் சந்திரனின் ஒரே முகப்பக்கம்தான் இரவு நேரங்களில் பூமியை நேபக்கியிருக்கின்றது. புவிச் சுழற்சி மற்றும் சுற்றுகையினாலும் சந்திரனின் சுழற்சி மற்றும் சுற்றுகை என்பனவற்றாலும் சந்திரனின் மறுபக்கத்தை எம்மால் நேரடியாகக் காண முடியாதுள்ளது. 1959ஆம் ஆண்டில் ரஷ்யாவின் “லூனா- III” என்ற விண்களமே முதன் முதலில் சந்திரனின் மறுபக்கத்தைப் படமெடுத்து எம்மாலும் அதனைப் பார்க்கக்கூடிய விதத்தில் செய்தது. (படம்)
அல்லாஹ் சந்திரன் உட்பட அனைத்துமே குறிப்பிட்டதொரு தவணைவரை செல்வதாகக் குறிப்பிடுகின்றான். “சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தி வைத்திருக்கின்றான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றுக்கென) குறிப்பிட்டதொரு தவணைப்படியே செல்கின்றன.”(35:13)(39:5)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...