அரபு நாடுகளின் சர்வாதிகார அடக்குமறை ஆட்சிக்கெதிராக வீருகொண்டெழுந்துள்ள மக்கள் புரட்சி இன்னும் இன்னும் சூடுபிடித்துக்கொண்டே வருகின்றது. முப்பதுஇ நாட்பது வருடங்களாக உள்ளுக்குள்ளே அமுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த மக்களின் உளக் குமுரல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எரிமலையாக வெடித்துச் சிதறிப் பெருக்கெடுத்துப் பிரளயமாய் ஓடுவதை இன்று உலகமே பார்த்துக்கொண்டிருக்கின்றது.
டியுனீஸியாவில் ஸைனுல் ஆப்தீன் பின் அலியின் 23 வருட அடக்குமறை ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி (ஜெஸ்மின் புரட்சி) வெடித்ததிலிருந்து காட்டுத்தீபோல் பிற நாடுகளுக்கும் புரட்சிச் சிந்தனைகள் பரவிவருகின்றன.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...