கட்டுரை வெகு விரைவில்...
09 February 2015
04 February 2015
ஊனுண்ணித் தாவரங்கள்
அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் 54 வகையான தாவரங்களைப்
பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் மூன்று வகை தவிர்ந்த மற்ற அனைத்தும் பூமியில்
காணப்படுகின்ற தாவரங்களாகும். அல்குர்ஆனில் தாவரங்கள் தொடர்பாக வருகின்ற வசனங்களை ஆராயுமிடத்து
அவை தாவரங்களுக்கு உயிர்,
உணர்ச்சி இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. விஞ்ஞானமும் இதனையே கூறுகின்றது. மனிதர்களைப்போன்று தாவரங்களுக்கும் சிந்தித்து உணரும்
ஆற்றல் இருக்கின்றது என்ற ஒரு ஆய்வியல் தகவல் அண்மையில் “பிளாண்ட் பயாலஜி”என்ற சஞ்சிகையில்
வெளியாகியிருந்தது. மட்டுமன்றி அவை தமக்கிடையில் உரையாடுவதாகவும் பல்வேறு ஒலி சமிக்ஞைகளை
வெளியிடுவதாகவும் அவ்வாய்வில் அறிவித்திருந்தனர். இதற்கு ஒரு கட்டுரையாளர் பின்வரும்
அல்குர்ஆனிய வசனத்தைக் கூறி மனிதன் மட்டுமன்றி தாவரங்கள், மரங்கள், மலைகள் போன்ற அல்லாஹ்வின்
இதர படைப்புக்களுக்கும் சிந்தித்து முடிவெடுக்கின்ற ஆற்றல் இருக்கின்றது என்ற கருத்தை
ஒரு கட்டுரையில் தெளிவுபடுத்தியிருந்தார். இதுதான் அந்த அல்குர்ஆனிய வசனம்....
உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்
16 January 2015
சார்லி ஹெப்தே தாக்குதல் பற்றி போப் பிரான்சிஸ்
பாரிஸில் இடம்பெற்ற சார்லி ஹெப்தே தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டது பற்றி பிலிப்பைன்ஸ் வந்திருந்த போப் பிரான்சிஸ் அவர்களிடம் நிருபர்கள் கேள்வி கேட்டபோது அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக இருந்தது போப் அவர்களின் அதிரடிப் பதில்கள்.
முகநூலிலிருந்து...உங்கள் கருத்து:
Labels:
திடீர் NEWS,
வீடியோ க்ளிப்ஸ்
07 January 2015
சூழல் சுத்திகரிப்பாளன் பன்றி
பன்றி இறைச்சியை அல்குர்ஆன்
உற்பட பைபிளும் தடைசெய்கிறது. பன்றி இறைச்சியை அல்குர்ஆன்
மட்டுமன்றி நபியவர்களுக்கு முன் வந்த நபியான யேசு (ஈஸா) நபியும் பன்றியின் மாமிசத்தைத்
தடுத்துள்ளார்கள். இருந்தும் மேற்குலகிலும் எமது நாட்டிலும் பன்றிகளை வளர்ப்பவர்களாகவும்
பன்றி இறைச்சியை உண்பவர்களாகவும் அதிகம் இருப்பது கிறிஸ்தவர்கள்தான் என்பது கவலைக்குறிய
செய்தி. “பன்றியும் புசிக்கத்தகாது, அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும், அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக, இவைகளின் மாம்சத்தைப்
புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.”(உபாகமம் 14:8) (லெவிட்டிக்ஸ் 11:7-8) (டியுட்டர்னோமி 14:8) (புக் ஒப்ஃ எசாயா65:2-5) என்ற அமைப்பில் பல
அத்தியாயங்களில் பைபிள் பன்றி இறைச்சி உண்பதைத் தடுக்கின்றது. அவ்வாறே அல்குர்ஆனும் “தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர்
சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்” (2:173) (5:3) (6:145) (16:115) என்ற வசனங்களுடாக
பன்றி இறைச்சியைத் தடைசெய்கின்றது. இதற்கான பல்வேறு விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சி முடிவுகளை
இங்கே அவதானிக்கலாம்.
உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்
20 December 2014
மனித உடலில் இறை அத்தாட்சிகள்
நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது
தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்)
பல கோணங்களிலும், (ஏன்) அவர்களுக்குள்ளேயும்
நாம் காண்பிக்கின்றோம். (41:53) வல்லவன் அல்லாஹ்வின் இறுப்பு
சத்தியமானதும் சாத்தியமானதும்தான் என்பதை நாம் ஆராய்ந்து அறிந்துகொள்ளும் வகையில் அல்லாஹ்
அவனது படைப்புகளுடாக பல அத்தாட்சிகளை எமக்குக் காண்பிக்கின்றான். பிரபஞ்சத்தில் மாத்திரமல்ல
ஏன் எமது உடலுக்குள்ளேயே அவன் பல அத்தாட்சிகளை வைத்திருக்கின்றான் என்றே மேலுள்ள வசனத்தின்
இறுதியில் குறிப்பிடுகின்றான். இதனை மற்றுமொரு வசனம் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றது.
“உங்களுக்குள்ளேயும்
(பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?” (51:21) இத்தொடரில் எமது உடலில்
பொதிந்திருக்கும் இறை அற்புதங்கள் சிலதை அவதானிப்போம்.
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
படைப்பினங்கள்
Subscribe to:
Posts (Atom)








