அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் 54 வகையான தாவரங்களைப்
பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் மூன்று வகை தவிர்ந்த மற்ற அனைத்தும் பூமியில்
காணப்படுகின்ற தாவரங்களாகும். அல்குர்ஆனில் தாவரங்கள் தொடர்பாக வருகின்ற வசனங்களை ஆராயுமிடத்து
அவை தாவரங்களுக்கு உயிர்,
உணர்ச்சி இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. விஞ்ஞானமும் இதனையே கூறுகின்றது. மனிதர்களைப்போன்று தாவரங்களுக்கும் சிந்தித்து உணரும்
ஆற்றல் இருக்கின்றது என்ற ஒரு ஆய்வியல் தகவல் அண்மையில் “பிளாண்ட் பயாலஜி”என்ற சஞ்சிகையில்
வெளியாகியிருந்தது. மட்டுமன்றி அவை தமக்கிடையில் உரையாடுவதாகவும் பல்வேறு ஒலி சமிக்ஞைகளை
வெளியிடுவதாகவும் அவ்வாய்வில் அறிவித்திருந்தனர். இதற்கு ஒரு கட்டுரையாளர் பின்வரும்
அல்குர்ஆனிய வசனத்தைக் கூறி மனிதன் மட்டுமன்றி தாவரங்கள், மரங்கள், மலைகள் போன்ற அல்லாஹ்வின்
இதர படைப்புக்களுக்கும் சிந்தித்து முடிவெடுக்கின்ற ஆற்றல் இருக்கின்றது என்ற கருத்தை
ஒரு கட்டுரையில் தெளிவுபடுத்தியிருந்தார். இதுதான் அந்த அல்குர்ஆனிய வசனம்....
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...