பொதுவாகவே இறந்த சடலங்களை
அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? எது சிறந்தது? என்ற வாத விவாதங்கள் நீண்ட காலமாகவே
இருந்து வருகின்றன. என்றாலும் கொரோனாத் தொற்றின் பரவலோடு இக்கதையாடல் இன்னும் சூடுபிடித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்துபோனவர்களது சடலங்களை அடக்கம் செய்வதா? தகனம் செய்வதா? அடக்கம் செய்வதால் ஏதும் பின்விளைவுகள், பாதிப்புகள் ஏற்படுமா? எரித்துவிடுவது சிறந்ததா? என பல வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக இங்கு சில தெளிவுபடுத்தல்களை
வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.
அஷ்.எம்.என்.ஆலிப்
அலி (இஸ்லாஹி) B.A
Dip. In
psychological Counseling, Al-Quran & Science researcher.
உங்கள் கருத்து:
இந்தோனேசியத் தீவுகளில் அதிலும் கொமோடோத் தீவுகளில் அதிகமாக வாழும் ஒரு உயிரினம்தான்
இந்த கொமோடோ டிராகன் (Comodo dragon). இவை தமிழில் கொமோடோ உடும்பு அல்லது கொமோடோ பல்லி என அழைக்கப்படுகின்றன. வாரனஸ்
கொமோடோயென்சிஸ் என்ற அறிவியற் பெயரில் அழைக்கப்படும் இவை வரானிடே என்ற உடும்பு குடும்பத்தில்
அடங்குகின்றன. உலகில் உள்ள பல்லி வகைகளிலேயே மிகப்பெரிய வகையும் இதுதான். பார்ப்பதற்கு
அச்சத்தை ஊட்டும் தோற்றத்தைக் கொண்டிருக்கும். தோற்றத்தில் அகன்ற, தட்டையான தலை, உருண்டையான வாய்ப் பகுதி, வளைந்த குட்டைக் கால்கள், பெரிய சதைப்பற்றான நீண்ட வால், சாம்பல் நிறத் தோல் என்பவற்றைக் கொண்டுள்ளன. இவை சுமார் பத்து
அடி நீளமும், 80 கிலோ எடையும் கொண்ட
ராட்சதப் பல்லிகளாகும்.
அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
“பிள்ளையைப் பெத்தா கண்ணீரு; தென்னையைப் பெத்தா இளநீரு” இப்படி ஒரு பாடல் வரி
உண்டு. “ஒன்ன வளக்குறத இரண்டு தென்னை மரத்த வளர்த்திருக்கலாம்! “பிள்ளைகளைப் பெற்று
அவர்களால் மனம் வருந்திக்கொண்டிருக்கும் பெற்றோர் இப்படியான வார்த்தைகளைக் கூறுவதை
முன் சென்ற பரம்பரையினரிடம் அடிக்கடி கேட்க முடியும். இதில் தென்னையை உதாரணமாகக் கூறியிருப்பது
தென்னையின் மகிமையும் அதன் பயன்பாடுகளும் மனிதனைவிட அதிகமாக இருக்கின்றது என்பதனால்தான்.
இத்தொடரில் தென்னையின் அற்புதப் பயன்கள் பற்றி அறிந்துகொள்வோம்.
அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
அறிமுகம்.
நீங்கள் இங்கு படத்தில் காண்பது ஆங்கிலத்தில் இகுவானா (Iguana) எனவும் தமிழில் பேரோந்தி எனவும் அறியப்படும் ஒருவகைப் பல்லி இனத்தைத்தான். இது உலகில் வாழும் மிக அறிய மற்றும் அற்புதமான உயிரினங்களில் ஒன்று. இந்த இகுவானாக்கள் தற்போது மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மெக்ஸிகோ, கலாபிகஸ் தீவுகள், கரிபியன் தீவுகள், பிஜி மற்றும் மடகஸ்கார் ஆகிய பகுதிகளில் பரவலாக வாழ்கின்றன. பிறந்ததிலிருந்து பல அபாயகரமான கட்டங்களைக் கடந்து, தமது உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடாத்தி உயிர் தப்பி வாழும் ஆச்சரியமான வாழ்க்கைப் பாடத்தை இவை நமக்கு சொல்லித்தருகின்ன. இவற்றிலிருந்தும் பாடம் கற்போம் வாருங்கள்.
அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
பேராதனை தாவரவியற் பூங்காவிற்குச் சென்றால் தவறாமல் ஒரு முறை மூங்கில் மரங்கள் நிறைந்திருக்கும் பகுதிக்குச் சென்று வாருங்கள். வகை வகையான மூங்கில் மரங்களைக் கண்டுகொள்ளலாம். பச்சை மூங்கில், மஞ்சள் மூங்கில், கருப்பு மூங்கில், சிவப்பு மூங்கில் என ஏராளமான, அளவிலும் தோற்றத்திலும் வித்தியாசமான பல மூங்கில் மரங்களைக் கண்டுகொள்ளலாம். அந்த இடம் கூட பார்ப்பதற்கு அழகாகவும் ரம்யமாகவும் இருக்கும். பூங்காவுக்கு பூக்களை மட்டுமே பார்க்கச் செல்லும் பலரும் மூங்கில் மரத்தில் என்னதான் இருக்கின்றது பார்ப்பதற்கு? என்று அலட்சியத்துடன் அதன் அழகை ரசிக்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிடுகின்றனர். பார்ப்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் மூங்கில் மரத்தில் பல விடயங்கள் இருக்கின்றன. படிப்போமா…
அஷ். எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
Dip. In psychological Counseling, Al-Quran & Science Researcher.
உங்கள் கருத்து: