"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

10 December 2011

இலங்கையில் பெருகிவரும் போதைப் பொருள் பாவனை.

இலங்கையில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதிகளவிலான போதைப் பொருள்கள் பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும் ஆபத்தான போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரசபையின் (National Dangerous Drugs Control Board) அறிக்கை தெரிவிக்கின்றது. 2010 ஆண்டு போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட 29,790 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 60% ஆனோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், 39% ஆனோர் 20 வயதை நெருங்கியவர்களாவர். 2005 முதல் 2010 வரை சிறுவர்களிடத்தில் குறைந்திருந்த போதைப்பொருள் பாவனை மீண்டும் தலை தூக்கிவருவதாகவும் புகைத்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பேரா. தாலோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி நண்பரே!

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...