"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

20 September 2009

அமெரிக்க ஐரோப்பிய உற்பத்திகளில் பன்றிக்கொழுப்பு

ஷேக் சாஹிப் என்பவர் பிரான்ஸ் நாட்டு பிகால் (Pegal) நகர உணவுப்பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அதில் அவர் உணவுப்பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்யும் துறையில் பணிபுரிவதால் உணவு மற்றும் மருந்துப்பொருட்களின் தரத்தைப் பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.
எந்த நிறுவனமும் அவர்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முன்னதாக அது உணவுப் பொருளாயினும் சரி மருந்துப்பொருளாயினும் சரி அதனைச் சோதனைக்குட்படுத்திய பின்பே சந்தைப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் மருந்து மற்றும் உணவுகளின் கலவையை (Ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவுத் தரக்கட்டுப்பாட்டு மையம் அங்கீகாரம் அளித்தபின்பு மட்டுமே அவை விற்பனைக்கு வரும்.  உணவுத் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் உணவுப்பொருட்களைப் பிரித்து அதன் கலவையை ஆய்வுசெய்வார்கள். இக்கலைவைகளில் சிலவற்றுக்கு அறிவியல் பெயர்களையும் குறிப்பார்கள். சிலவற்றைக் குறியீடுகளைக் கொண்டும் குறிப்பார்கள். இக்குறியீடுகள்தாம் 
E-904, E-141 என பாவனையிலுள்ளன.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

27 August 2009

இது கதையல்ல நிஜம் : ஆழ்கடலினுள் ஸ்ஜுத் செய்த இளைஞன்

நான் பத்தொன்பது வயது நிரம்பிய ஒரு இளைஞன். வாழ்க்கையின் ஏகபோக உரிமைகளை அனுபவிப்பதில் விடாப்பிடியாய் இருந்தேன். பணம்,  மாடி வீடு, வாகனம் என்பவைதான் வாழ்க்கை என மிதம்மிஞ்சி எண்ணியிருந்தேன். எனக்கும் சில நண்பர்கள் இருந்தார்கள். அவர்களும் எவ்விதத்திலும் என்னைவிட தரம் குறைந்தவர்களல்லர். ஒரு வெள்ளிக்கிழமை. பொழுதுபோக்கிற்காக கடலில் சுழியோடச்செல்ல நண்பர்களோடு தயாராகிக்கொண்டிருந்தேன்.

18 August 2009

சிந்துக்கரையில் முஹம்மத் இப்னு காஸிம்

பஞ்ஜாப் பிரதேசத்திலிருந்து தனித்தனியாக ஓடிவரும் ஐந்து நதிகள் ஒன்று சேர்ந்தே சிந்துநதி எனப்பெயர் பெறுகின்றது. இதனையண்டித் தோற்றம்பெற்ற பெரும் நாகரிகம்தான் சிந்து நாகரிகம். அன்று சிந்து நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பல சிற்றரசர்கள் ஆண்டுவந்தனர். சிந்து மன்னனான உதயவீரன் அங்கு பெரும் கொடுங்கோலாட்சியையே புரிந்துவந்தான். அவனை அரேபியர் ‘தாஹிர்’ என்றழைத்தனர். அவனது ஆட்சிக்குட்பட்டு வாழ்ந்த மக்கள் மிருகங்கைளவிடவும் கேவலமாகவே நடாத்தப்பட்டனர். பல்வேறு இன்னல்களுக்கும் அட்டூளியங்களுக்கும் முகங்கொடுத்து வாழ்க்கைப்பட்டனர். இதனால் அவர்கள் தம்மன்னனின்மீது தீரா வெறுப்புக் கொண்டிருந்தனர்.

06 August 2009

வீடியோ விளையாட்டுக்களின் விபரீதம்

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய இலத்திரனியல் உலகில் பல இலத்திரனியல் சாதனங்களைக் கையாள வேண்டிய அவசியப்பாட்டை எதிர்நோக்கியுள்ளோம். அதிலும் வளர்ந்துவரும் தகவல் புரட்சியின் வேகத்திற்கு எம்மையும் ஈடுசெய்துகொள்ள இச்சாதனங்களின் உபயோகம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. அந்தவகையில் தொலைக்காட்சி, இணையம் என்பன உலக நடப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவும் பொருத்தமான ஊடகங்களாக விளங்குகின்றன. எனினும்,சமூகத்தில் பரவலாகக் காணப்படும் இச்சாதனங்களால் நாம் எதிர்நோக்கிவரும் புதுவகையானதொரு நோய்குறித்து ஆராய்வதே இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.

11 July 2009

மனித ஆன்மாவின் பயணத்தொடர்...

ஒரு விடயத்தை ஆழமாக விளங்கி விசுவாசிக்கும்போதுதான் அதன் சுவையும் கனதியும் உள்ளத்தில் ஆழப்பதிகின்றது. அதுமட்டுமன்றி ஈமானும் பலம்பெறுகின்றது. ஆன்மா, ஆன்மிகம் சம்பந்தமாக பல மதங்களும் பேசியுள்ளன. ஆனால் இஸ்லாம் கூறும் ஆன்மாவின் உண்மைத் தன்மையோ அது மனிதனை இறைவனிடம் நெருங்கவைத்து மனிதப் படைப்பின் நோக்கத்தைப் புறியவைக்கின்றது. அந்தவகையில் மனித ஆன்மாவின் பயணத்தொடர் குறித்து இக்கட்டுரையில் சற்று விளங்க முயற்சிப்போம்.

இறைவனின் படைப்புகளிலே மிகவும் உயர்ந்த படைப்பு மனிதன்தான். காரணம் யாதெனில் எந்தவொரு படைப்புக்கும் வழங்கப்படாத ‘ஆன்மா’ என்ற ஒரு அம்ஷம் மனித உடலில் காணப்படுகின்றது. இவ்வான்மா பறவைகளுக்கோ மிருகங்களுக்கோ தாவரங்களுக்கோ எம் கண்களுக்குப் புலப்படாத நுண்உயிரிகளுக்கோ வழங்கப்படவில்லை. மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...