இன்று உலக ஊடகங்களின் பரவலான பேசுபொருள் சென்னை நகரை மழை வெள்ளம்
மூழ்கடித்தபோது இந்திய முஸ்லிம்கள் தமது இந்துச் சகோதரர்களுக்கு செய்த நிவாரணப் பணி
குறித்ததுதான். வழமையாக இந்தியாவில் டிசம்பர் 6 என்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கெதிரான
ஆர்ப்பாட்டங்கள் கொடிகட்டும். ஆனால் அதே இந்த டிசம்பர் 6 முஸ்லிம் இந்து சகோதரர்களுக்கிடையிலான
நட்புறவு மலரக் காரணமாகியுள்ளது.
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
08 December 2015
03 May 2015
பிரபாகர் ஈழம் கேட்டார், மஹிந்தர் தெற்கைக் கேட்பாரோ?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷயின் நடவடிக்கைகளை
நோக்கும் போது தெற்கில் அவரது அதிகாரத்தை இஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில்
இரங்கியுள்ளார் போன்று தெரிகின்றது. தெற்கு
மக்களின் நல்லபிப்பிராயத்தையும் அனுதாபத்தையும் பெற்றுக்கொள்ளும் முயற்சிகள்
நடைபெறுகின்றன. தனது பதவிக்காலத்து தவறுகளை ஏற்றுக்கொள்வதாகவும் அவற்றுக்கு மக்கள்
முன் மன்னிப்புக் கோருவதாகவும் வசனம் பேசுகின்றார். தற்போதுள்ள
நல்லாட்சியை தெற்கு மக்களிடம் விமர்சித்தும் தூசித்தும் பேசிய பல காட்சிகள்
ஊடகங்கள் வாயிலாகவும் காணக்கிடைத்தது. மூன்று தடவைகள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி
பால அவர்களைக் கொலைசெய்யும் முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. எதற்கும் அரசாங்கம்
விழிப்புடன் இருக்கவேண்டும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
Labels:
அரசியல்
01 September 2014
துருக்கியின் புதிய பிரதமர் அஹமத் தாவுத் ஒக்லோ
துருக்கியின் பிரதமர் தைய்யிப் எர்துகான்
ஜனாதிபதியானதைத் தொடர்ந்து புதிய பிரதமராக அஹமத் தாவுத் ஒக்லோ பதவியேற்றுள்ளார். அத்தோடு
அண்மையில் அவர் தனது டிவிட்டர் கணக்கினூடாக துருக்கி அரசாங்கத்தின் இலக்குகளையும், பணிக்கூற்றையும் வெளியிட்டுள்ளார். “தமது முழு முதல் இலக்கு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதாகும்
என்பதோடு இது எமது நாட்டுக்கு மட்டுமல்ல எமது பிராந்தியத்துக்குமானது” என்று கூறியுள்ளார். "Our main goal is to build a better future for not only
our country but the region as a whole"
உங்கள் கருத்து:
12 August 2014
துருக்கி ஜனாதிபதித் தேர்தலின் பின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற எர்துகான் மக்கள் முன் ஆற்றிய முதல் உரை.
இந்தத் தேர்தலில்
எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த
நன்றிகள். அவுஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா வரைக்கும், எனக்காக
பிரார்த்தித்த, தங்களது
வாக்குகளை உரிய முறையில் வழங்கிய அனைத்து துருக்கியருக்கும் எனது நன்றிகள். இன்று, புதிய
துருக்கி வெற்றி பெற்றுள்ளது, 81 மாகாணங்கள் வெற்றி பெற்றுள்ளன. துருக்கி
மாத்திரம் அல்ல, பொஸ்னியா, அர்பில், இஸ்லாமாபாத், காஸா
வெற்றி பெற்றுள்ளன! சென்ற றமலான்
மாதத்தில் அனைத்து இடர்களையும் பாராது எமது கூட்டங்களில் கலந்து முழு ஆதரவையும்
வழங்கிய உங்களுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது. இன்று பழைய ஒரு தவணையை
முடித்து விட்டு புதிய ஒரு துருக்கிக்கான நுழைவாயிலில் கால் தடம் பதிக்கின்றோம்.
இன்றிலிருந்து சன்கயாவுக்கும் (ஜனாதிபதி மாளிகை) மக்களுக்கும் இடையிலான அனைத்து
தடைகளும் தகர்க்கப்பட்டு விட்டன. இனிமேல், இந்த நாட்டின் விதி முழுமையாக
இருக்கப்பெரும் மக்களுக்கு நான் ஒரு அமானிதமாக வழங்கப்பட்டுலேன்.
உங்கள் கருத்து:
Subscribe to:
Posts (Atom)









