இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போதே உடம்பெல்லாம் புல்லரிக்கின்றது. ஒரு வகை
அருவருப்புடன் கூடிய பயம் ஆட்கொள்கின்றது. காரணம் அவற்றின் தோற்றம் பார்க்க பயங்கரமாக
இருப்பதால்தான். Scorpion என்றழைக்கப்படும்
தேள்கள் கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். ஊர் வழக்கத்தில் நட்டுவாக் காலி
என்றும் கூறுவார்கள். இத்தொடரில் தேள்களின் வியத்தகு வாழ்க்கை முறை பற்றி உங்களுடன்
பரிமாறிக்கொள்ள நினைக்கின்றேன்.
23 January 2017
15 January 2017
எனது வீட்டு mini zoo
சிறுவயது முதலே செல்லப்
பிராணிகளை வளர்ப்பதில் எனக்கு அலாதி விருப்பம். நான் ஒன்பதாம் ஆண்டு படித்து முடிக்கும்
வரை வசித்தது எனது வாப்பாவின் ஊர் கொடவலையில்தான். எமது வீட்டுக்குப் பின்னால் பெரிய
இரப்பர் தோட்டம். குளிர்ச்சியான கால நிலை. நீர் ஊற்றுக்கள், நீர் ஓடைகள், நீர் வீழ்ச்சிகள், குன்றுகள், மேடுகள், பள்ளனங்கள் என அழகான சுற்றுச் சூழல். பாடசாலை விட்டு
வீடு வந்து மாலைப் பொழுதுகளில் மலை ஏறுவது எனக்கும் எனது சம வயது நண்பர்களதும் வழக்கம்.
தொலைக் காட்சியில் போகும் Rambo கார்டூனைப் பார்த்துவிட்டு
அது போன்று வேடம் அணிந்துகொண்டு கத்தி, கம்பு எல்லாம் எடுத்துக்கொண்டு மலை ஏறுவோம். சிறு மரங்களை வெட்டி வீழ்த்துவதும்,
மரத்திற்கு மரம் தாவிப் பாய்வதும்,
மேடு பள்ளங்களில் பாய்ந்து
ஓடுவதும், காட்டு மாங்காய்,
கொய்யா, விரலிக்காய் போன்றவற்றை மரத்திலிருந்துகொண்டே ருசி
பார்ப்பதும் கூடாரங்களை அமைத்துக்கொண்டு கள்வன் பொலிஸ் விளையாடுவதும் இன்னும் நினைவில்
ஜொலிக்கின்றன.

உங்கள் கருத்து:
Labels:
என் சுயவிபரக்கோவை,
சிந்தனைக்கு,
படைப்பினங்கள்
Subscribe to:
Posts (Atom)