"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 January 2017

எனது வீட்டு mini zoo

சிறுவயது முதலே செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் எனக்கு அலாதி விருப்பம். நான் ஒன்பதாம் ஆண்டு படித்து முடிக்கும் வரை வசித்தது எனது வாப்பாவின் ஊர் கொடவலையில்தான். எமது வீட்டுக்குப் பின்னால் பெரிய இரப்பர் தோட்டம். குளிர்ச்சியான கால நிலை. நீர் ஊற்றுக்கள், நீர் ஓடைகள், நீர் வீழ்ச்சிகள், குன்றுகள், மேடுகள், பள்ளனங்கள் என அழகான சுற்றுச் சூழல். பாடசாலை விட்டு வீடு வந்து மாலைப் பொழுதுகளில் மலை ஏறுவது எனக்கும் எனது சம வயது நண்பர்களதும் வழக்கம். தொலைக் காட்சியில் போகும் Rambo கார்டூனைப் பார்த்துவிட்டு அது போன்று வேடம் அணிந்துகொண்டு கத்தி, கம்பு எல்லாம் எடுத்துக்கொண்டு மலை ஏறுவோம். சிறு மரங்களை வெட்டி வீழ்த்துவதும், மரத்திற்கு மரம் தாவிப் பாய்வதும், மேடு பள்ளங்களில் பாய்ந்து ஓடுவதும், காட்டு மாங்காய், கொய்யா, விரலிக்காய் போன்றவற்றை மரத்திலிருந்துகொண்டே ருசி பார்ப்பதும் கூடாரங்களை அமைத்துக்கொண்டு கள்வன் பொலிஸ் விளையாடுவதும் இன்னும் நினைவில் ஜொலிக்கின்றன.

ஆலிப் அலி ((இஸ்லாஹி))

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...