"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

04 June 2008

ஒரு சிறைக் கைதியிடமிருந்து...
எங்கள் தேசம் (உயிர் மொழி) - 1-4/12/2008
நான் எங்கிருந்து துவங்குவேன்?
எங்குபோய் முடிப்பேன்?
நான் நலம்
நான் நலம்
காலத்தின் சுழற்சிக்கு எல்லை இல்லை
எனக்கு விதித்;த நாட்கள் வெகுதூரமில்லை
எனதான மனச்சுமைகளை யார்தான் சுமப்பது?
ஏனோ அதில் பாதியை என் குறிப்பேட்டில் சுமத்திவிட்டேன்

அநித்தியமான இந்த வாழ்க்கை அழுத்துவிட்டது
அந்த இறைவனுக்காய் பொறுமையுடன் இங்கு நான்
நான்கு சுவர்களுக்கு மத்தியில்
மெலிதாய் ஒரு ஒளிக்கீற்று
முகட்டைப் பிய்த்துக்கொண்டு வருகிறது
என்னில் மேவி ஆறுதல் சொல்கிறது

சூரிய தரிசனத்திற்காய் கூண்டுக் குருவிகள்……
இரவில் கசிந்த பனித்துளி போர்த்திய புள்வெளிகள்……
சிட்டுக்குருவிகளின் சினுங்கள்கள்……
வண்ணத்துப் பூச்சிகளின் சில்மிசங்கள்……
இயற்கையின் வணப்பில் எத்துனை ரம்யங்கள்
இத்தனையும் எனக்கிங்கு
கனாக்காட்சிகளாய் கானலாகிப்போனது

உன்னைப் பிரிகையில் எனக்குப் பதினாறு
இப்போது அதிலும் பாதியை எட்டிய இருபத்திநாளு
ஞாபகமிருக்கிறதா!
உன் மடியில் என் தலை உருண்ட பொழுதுகள்
தாயே! ஞாபகங்கள்தான் என்னை ஆசுவசிக்கின்றன

நான் நலம்
நான் நலம்
தாயே! என்னவர்களின் நலமறிய ஆவல்
என் தந்தை எப்படியிருக்கிறார்?
வழமைபோல் இறைதியானத்தில் லயிக்கிறாரா?
என்னைப் பற்றி யோசிக்கிறாரா?
என் உடன் பிறப்புகள் எப்படியிருக்கிறார்கள்?
என் தங்கை எப்படியிருக்கறாள்?
சடங்காகிவிட்டாளா?
என் பாட்டி?
எப்போதும்போல் வாசலில் அமர்ந்திருக்கிறாரா?
உங்கள் பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
உங்களனைவரையும் பார்த்து எவ்வளவு நாள்?
அதற்குள் எவ்வளவு மாற்றம் என்னில்
சிறைக் கம்பிகளை உடைத்துக்கொண்டு
ஓடி வரத் துடிக்குது என்மனம் தாயே!

துயிலுக்கு ஏனோ என்மீது வெறுப்பு
முயைந்து படுத்தாலும் உறக்கம் வருவதில்லை
இழுத்துக்கொண்டுவர முயன்றாலும்
உறக்கம் விலகியே செல்கிறது
பகட்டாய் கண்களை மூடினால்
இமைக்குள் பல சித்திரங்கள்

என்னைப் பற்றிய உங்கள் வேதனையை நான் அறிவேன்
கவலை வேண்டாம்
என்போன்ற பலர் இங்கே – ஆனாலும்
என்னறையில் அவர்கள் இல்லை
அவர்களறையில் நானில்லை
ஏகாந்தம்தான் எங்கள் ஆதனம்
நிசப்தம்தான் எங்கள் நண்பன்
கண்ணீரும் வற்றிவிட்டது
இனி எனக்கு அழுகைவராது தாயே!
உங்களுக்கும் கவலை வேண்டாம்!

என் வாழ்வில் இருமுறை மரணம்
வாழும்போது ஒரு முறை!
இறக்கும்போது ஒரு முறை!
கணதியான என்னிதயச் சுமைகளை வெகுவிரைவில்
இறக்கி விடுகிறேன் தூக்குக்கயிற்றில்
அப்போதேனும் தூக்கம் என்னை நேசிக்கட்டும்

தாயே! நான் நலம்
கவலை வேண்டாம்
இறைவனுக்காய் பொங்கி எழுந்தேன், கோசமிட்டேன்
அவனுக்காகவே சிறைக்கு வந்தேன், மோட்சம் கொண்டேன்
என் உடல், உயிர் அவனுக்கே சமர்ப்பணம்
இங்கு நரகின் வேதனையைச் சுமக்கிறேன்
நாளை சுவனத்தின் சுகந்தத்தை யாசித்தவனாக……

இதோ என் முடிவுரை
நிறுத்தவும் மனம் இடங்கொடுப்பதில்லை
தாயே! கவலை வேண்டாம்
நாளை சுவனத்தில் சந்திப்போம்
இவ்வரிகளின் முற்றுப் புள்ளியோடு – எனது
இவ்வுலக வாழ்வுக்கும் முற்றுப் புள்ளி விழுந்துவிடும்
தாயே! நான் நலம்
இதுவரைக்கும்……

எங்கள் தேசம் (உயிர் மொழி) - 1-4/12/2008
நான் எங்கிருந்து துவங்குவேன்?
எங்குபோய் முடிப்பேன்?
நான் நலம்
நான் நலம்
காலத்தின் சுழற்சிக்கு எல்லை இல்லை
எனக்கு விதித்;த நாட்கள் வெகுதூரமில்லை
எனதான மனச்சுமைகளை யார்தான் சுமப்பது?
ஏனோ அதில் பாதியை என் குறிப்பேட்டில் சுமத்திவிட்டேன்

அநித்தியமான இந்த வாழ்க்கை அழுத்துவிட்டது
அந்த இறைவனுக்காய் பொறுமையுடன் இங்கு நான்
நான்கு சுவர்களுக்கு மத்தியில்
மெலிதாய் ஒரு ஒளிக்கீற்று
முகட்டைப் பிய்த்துக்கொண்டு வருகிறது
என்னில் மேவி ஆறுதல் சொல்கிறது

சூரிய தரிசனத்திற்காய் கூண்டுக் குருவிகள்……
இரவில் கசிந்த பனித்துளி போர்த்திய புள்வெளிகள்……
சிட்டுக்குருவிகளின் சினுங்கள்கள்……
வண்ணத்துப் பூச்சிகளின் சில்மிசங்கள்……
இயற்கையின் வணப்பில் எத்துனை ரம்யங்கள்
இத்தனையும் எனக்கிங்கு
கனாக்காட்சிகளாய் கானலாகிப்போனது

உன்னைப் பிரிகையில் எனக்குப் பதினாறு
இப்போது அதிலும் பாதியை எட்டிய இருபத்திநாளு
ஞாபகமிருக்கிறதா!
உன் மடியில் என் தலை உருண்ட பொழுதுகள்
தாயே! ஞாபகங்கள்தான் என்னை ஆசுவசிக்கின்றன

நான் நலம்
நான் நலம்
தாயே! என்னவர்களின் நலமறிய ஆவல்
என் தந்தை எப்படியிருக்கிறார்?
வழமைபோல் இறைதியானத்தில் லயிக்கிறாரா?
என்னைப் பற்றி யோசிக்கிறாரா?
என் உடன் பிறப்புகள் எப்படியிருக்கிறார்கள்?
என் தங்கை எப்படியிருக்கறாள்?
சடங்காகிவிட்டாளா?
என் பாட்டி?
எப்போதும்போல் வாசலில் அமர்ந்திருக்கிறாரா?
உங்கள் பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
உங்களனைவரையும் பார்த்து எவ்வளவு நாள்?
அதற்குள் எவ்வளவு மாற்றம் என்னில்
சிறைக் கம்பிகளை உடைத்துக்கொண்டு
ஓடி வரத் துடிக்குது என்மனம் தாயே!

துயிலுக்கு ஏனோ என்மீது வெறுப்பு
முயைந்து படுத்தாலும் உறக்கம் வருவதில்லை
இழுத்துக்கொண்டுவர முயன்றாலும்
உறக்கம் விலகியே செல்கிறது
பகட்டாய் கண்களை மூடினால்
இமைக்குள் பல சித்திரங்கள்

என்னைப் பற்றிய உங்கள் வேதனையை நான் அறிவேன்
கவலை வேண்டாம்
என்போன்ற பலர் இங்கே – ஆனாலும்
என்னறையில் அவர்கள் இல்லை
அவர்களறையில் நானில்லை
ஏகாந்தம்தான் எங்கள் ஆதனம்
நிசப்தம்தான் எங்கள் நண்பன்
கண்ணீரும் வற்றிவிட்டது
இனி எனக்கு அழுகைவராது தாயே!
உங்களுக்கும் கவலை வேண்டாம்!

என் வாழ்வில் இருமுறை மரணம்
வாழும்போது ஒரு முறை!
இறக்கும்போது ஒரு முறை!
கணதியான என்னிதயச் சுமைகளை வெகுவிரைவில்
இறக்கி விடுகிறேன் தூக்குக்கயிற்றில்
அப்போதேனும் தூக்கம் என்னை நேசிக்கட்டும்

தாயே! நான் நலம்
கவலை வேண்டாம்
இறைவனுக்காய் பொங்கி எழுந்தேன், கோசமிட்டேன்
அவனுக்காகவே சிறைக்கு வந்தேன், மோட்சம் கொண்டேன்
என் உடல், உயிர் அவனுக்கே சமர்ப்பணம்
இங்கு நரகின் வேதனையைச் சுமக்கிறேன்
நாளை சுவனத்தின் சுகந்தத்தை யாசித்தவனாக……

இதோ என் முடிவுரை
நிறுத்தவும் மனம் இடங்கொடுப்பதில்லை
தாயே! கவலை வேண்டாம்
நாளை சுவனத்தில் சந்திப்போம்
இவ்வரிகளின் முற்றுப் புள்ளியோடு – எனது
இவ்வுலக வாழ்வுக்கும் முற்றுப் புள்ளி விழுந்துவிடும்
தாயே! நான் நலம்
இதுவரைக்கும்……


உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

fathima frm Eravur...
ungal pal thurai aatral ennai viyakka vaikkinrathu.... innum pal verupatta thuraihalil umathu aatral velippada enathu pirarththanaihal....
umathu kavithaiyl muluvathum enathu valkkaiku poruththam illavidinum.... ithu poonra vallkai kidaithalum nimmathiyai irukume.... thapothaiya enathu valkaiyai vida.....

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...