"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

12 March 2013

ஹலால் சின்னம் வெளிநாட்டு ஏற்றுமதிகளுக்கு மாத்திரம்: கட்டணம் அறவிடப்படாதுவெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திகளுக்கு மாத்திரமே ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படும். உள்ளூரில் சந்தைப்படுத்தப்படும் உற்பத்திகளில் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படமாட்டாது. அத்துடன் வெளிநாட்டு ஏற்றுமதிப் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவோர் வேண்டுகோள்விடுக்கும்பட்‌சத்தில் மாத்திரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழமைபோன்று ஹலால் சான்றிதழை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமாதானமும் இன நல்லுறவும்மிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாம் சில விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டியது அவசியம் எனவும் அதனப்படையிலேயே உலமா சபை இவ்வாறானதொரு தீர்மானத்திற்கு உடன்பட்டதாகவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திகளுக்கு மாத்திரமே ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படும். உள்ளூரில் சந்தைப்படுத்தப்படும் உற்பத்திகளில் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படமாட்டாது. அத்துடன் வெளிநாட்டு ஏற்றுமதிப் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டுக்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட பத்திரிகையாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவோர் வேண்டுகோள்விடுக்கும்பட்‌சத்தில் மாத்திரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழமைபோன்று ஹலால் சான்றிதழை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமாதானமும் இன நல்லுறவும்மிக்க இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் நாம் சில விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டியது அவசியம் எனவும் அதனப்படையிலேயே உலமா சபை இவ்வாறானதொரு தீர்மானத்திற்கு உடன்பட்டதாகவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...