“இறைவா! இந்த சாகரம் மட்டும் என்னைக் குறுக்கிட்டுத் தடுத்திராவிடின் கண்காணாத தூரம் வரை சென்று உன் நாமத்தைப் பரப்பியிருப்பேன்”
மேற்கு ஆபிரிக்காவின் கடற்கரையிலிருந்து அடுத்ததாக உள்ளது அட்லாண்டிக் சாகரம். அன்று வடமேற்கு ஆபிரிக்காவின் எல்லை வரை இஸ்லாமியத் தளபதி உக்பா வெற்றிகண்டுகொண்டே முன்னேறினார். இறுதியாக அட்லாண்டிக் சாகரத்தையடைந்ததும் இதற்கப்பால் தன்னால் செல்ல முடியவில்லையே என்ற கவலை தொனிக்கும் குரலில் தனது புரவியின் கழுத்தைச் சாகரம் தொடுமளவிற்க்கு அதனைக் கடலிலே செலுத்திவிட்டுக் கூறியதுதான் மேற்கண்ட கூற்று.
அதன் பின்பு தளபதி மூஸா பின் நுஸைரின் தலைமையில் வந்த படை ஸ்திரமாகவே வடஆபிரிக்காவில் நிலைகொண்டுவிட்டது. அங்கிருந்து இஸ்லாத்தின் ஒளிக்கீற்றுகள் படிப்படியாக ஐரோப்பாவின் எல்லைவரை பிரகாசிக்கலானது. இக்காலப் பிரிவு ரொட்ரிக் என்ற கொடுங்கோலன் ஸ்பைனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தான். அவனது அட்டகாசங்களையும் கொடுமைகளையும் தாங்காத மக்கள் அங்கிருந்து வடஆபிரிக்கா நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். காலச் சக்கரம் சுழல தினம் தோறும் இடம்பெயர்ந்து வந்து கவர்னர் மூஸாவிடம் முறையிடும் மக்கட்தொகை கூடிக்கொண்டே வந்தது. வடஆபிரிக்காவில் இஸ்லாத்தின் மகிமையைக் கண்ட அம்மக்கள் படிப்படியாக இஸ்லாத்தின் பால் கவரப்பட்டுவந்தனர்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...