"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 July 2011

மேற்குலகின் சிந்தனா ரீதியான படையெடுப்பு

18ம், 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மேற்கொண்ட காலணித்துவ ஆதிக்கத்தின் தொடர்ச்சியாகவே இதனையும் நோக்க வேண்டும். அதுதான் இன்றைய மூன்றாம் உலகமகா யுத்தமாகக் கருதப்படும் மூன்றாம் மண்டல நாடுகள் மீதான மேற்குலகின் சிந்தனா ரீதியான படையெடுப்பாகும். உலகளாவிய ரீதியில் தங்களது தலைமை கை நழுவி விடக்கூடாதென்ற நப்பாசையும், வல்லரசு என்ற நாம மந்திரம் கை விட்டுப் போகக் கூடாதென்ற பேராசையுமே இவ்வாறானதொரு யுத்தத்திற்குத் திருப்பு முனையாக அமைந்துள்ளது. 2ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே வளர்முக நாடுகளை அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக மேற்குலகு அடிமைப்படுத்தி வந்தது. எனினும் உலகம் விழித்துக் கொண்டதனால் அதன் தொடர்ச்சியை இன்று சிந்தனைப் படையெடுப்பினூடாக மறைமுகமாக மேற்கொள்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...