எம்மில் பலர் இவ்வுலக வாழ்க்கை நித்தியமற்றதென அறிந்திருந்தபோதிலும் ஷைதானுக்குக் கட்டுப்பட்டு மனோ இச்சைக்கு வலிப்பட்டு அதன்படி வாழ்ந்து மடிகின்றனர். இவ்வுலகில் உயர்ந்த அறிவார்ந்த படைப்பாகிய மனிதன் வெறும் உடலிச்சைகளையும் மனோ இச்சைகளையும் மாத்திரம் தீர்த்துக்கொண்டு அவன் படைக்கப்பட்டதன் உண்ணத நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் பொருளாதாரத்தை ஈட்டுவதில் மாத்திரம் குறியாய் வாழ்ந்து குறுகிய ஆயுளைச் செலவு செய்துவிட்டு இறந்துவிடுவதென்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று.
இவ்வுலகின் யதார்த்தம் யாதெனில் இது நிரந்தரமற்றது. அற்பமானது. இது இன்பமனுபவிப்பதற்கான இடமல்ல. இதுவொரு சோதனைக்களம். மனிதனின் நிரந்தரமான நித்திய வாழ்க்கை மறுமையில்தான் அமைகின்றது. இம்மை என்பது தற்காலிகத் தங்குமிடம் மாத்திரம்தான். இவ்வுலகம் பெறுமதியற்றது, கவர்ச்சிகரமிக்கது, வீணும் விளையாட்டும் நிரம்பியது. அல்லாஹ்விடத்திலும் நபிகளாரிடத்திலும் இவ்வுலக வாழ்க்கைக்கு எப்பெருமானமும் இருக்கவில்லை. அல்லாஹ் இதுபற்றி அல்-குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...