மனிதன் இவ்வுலகில் படைக்கப்படுவதற்கு முன்பு அல்லாஹ் அவனை ரூஹாக ஆலமுல் அர்வாஹ் என்ற ஓரிடத்தில் படைத்து தன்னை இரட்சகனாக ஏற்கும்படி ஓரு வாக்குறுதியை வாங்கியுள்ளான். அவ்வாக்குறுதிதான் இவ்வுலகில் மனிதனிடம் இறைவன் இருக்கின்றான் என்ற உள்ளுணர்வாக, இயல்பூக்கமாக வெளிப்படுகின்றது. எவ்வாரெனின் மனித இயல்பு கற்றலோ கற்பித்தலோ இன்றி காரண காரிய விதியை ஏற்றுக்கொள்கின்றது.
காரண காரிய விதியென்பது எல்லா நிகழ்வுக்கும் பின்னால் ஒரு காரணமுண்டு. காரணமின்றிக் காரியமில்லை. செயல்களுக்குப் பின்னால் செய்தவன் ஒருவன் இருக்கின்றான். எதுவம் காரணமின்றித் தோன்றாது. நெருப்பில்லாமல் புகையாது என்பதுபோல்... இந்த விளக்கமே காரண காரிய விதியாகும்.
சிறு பிள்ளைகள் தம்மைச் சூழவுள்ள சிறுசிறு விடயங்களை உற்றுநோக்கி அவைகுறித்து அதிகமதிகம் கேள்விகேற்பதைப் பார்க்கின்றோம். தமக்குத் திருப்திகரமான பதில் கிடைக்கும்வரை இது தொடர்கிறது. இது யாரது தூண்டுதலுமின்றி மனித உள்ளம் இயல்பாகவே காரணத்திற்கான காரியத்தை வேண்டி நிற்பதை உணர்த்துகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...