கருவறையில் 16 வாரங்களைக் கடந்ததன் பின்னர் சிசு கூடுதலாகவே வெளித் தூண்டுதல்களுக்குத்
துலங்களைக் காட்ட ஆரம்பிக்கின்றது. உடலுருப்புகள் போதுமான வளர்ச்சியை அடைந்திருக்கும்.
கண்கள் மூடியிருக்கும். தாய் உணராவிடினும் அது தனது கை கால்களை அசைத்துக் கொண்டிருக்கும்.
முகபாவனைகள் கூட செய்யும். இன்னும் சில வாரங்களில் விரல் சூப்ப ஆரம்பிக்கும். கண்களைச்
சிமிட்டும். முகம் சுழிக்கும். மெதுவாக அழும். அதிகமாகத் தூங்கும். தூக்கத்தில் சிறிக்கும்.
ஏழாம் மாதமாகும்போது சூழலை நன்கு புரியும் ஆற்றலைப் பெரும். வெளிச் சப்தங்களைச் செவியுறும்.
இவ்வாறு கருவரையிலிருக்கும் சிசு வெளி உலகின் மீது கவனத்தைக் குவிக்க ஆரம்பிக்கும்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...