Gecko இனப் பல்லிகளில் சுமார்
1500 வகை இனங்கள் இதுவரை
கண்டறியப்பட்டுள்ளன. வீட்டுப் பல்லி, மரப் பல்லி, சரகு இலைப் பல்லி, பச்சை நிறப் பல்லி, சிறுத்தைப் பல்லி, கீலா மான்ஸ்டர் என
இன்னும் எவ்வளவோ வகைகள் இருக்கின்றன. இவற்றில்
கீலா மான்ஸ்டர் அதிக விஷத்தன்மைகொண்ட பல்லியாகும். ஊர்வன இனத்தைச் சேர்ந்த இப் பல்லிகள்
குளிர் இரத்த உயிரிகள் என்பதால் உலகின் உஷ்ணப் பிரதேசங்களிலேயே வாழ்கின்றன. பல்லிகள்
பாலை நிலங்களிலும், மணல் மேடுகளிலும், மரங்களிலும், புற் புதர்களிலும்
வாழ்கின்றன. இவற்றை அதிகமாக எமது வீடுகளில் கண்டுகொள்ளலாம். வாசல், சமயலறை, சாப்பாட்டறை, களிவறை என எல்லாப்
பகுதிகளிலும் சுவர்களில் ஓடித்திரிவதைக் காணலாம்.
09 March 2015
04 March 2015
Bullfight விளையாட்டுக்களின் கொடூரம்
மிகப் பெரிய மைதானம் ஒன்றில் ரசிகர்கள் நிறைந்திருக்க சிவப்பு நிற பிடவைகளைக் கையில் ஏந்திய வண்ணம் பலர் சேர்ந்து மூர்க்கத்தனமான ஒரு எருதை மடக்கும் Bullfight விளையாட்டுக்களை நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். உண்மையில் இது வெறும் விளையாட்டல்ல. இதன் பிண்ணனியில்... (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
ஆலிப் அலி (இஸ்லாஹி)மிகப் பெரிய மைதானம் ஒன்றில் ரசிகர்கள் நிறைந்திருக்க சிவப்பு நிற பிடவைகளைக் கையில் ஏந்திய வண்ணம் பலர் சேர்ந்து மூர்க்கத்தனமான ஒரு எருதை மடக்கும் Bullfight விளையாட்டுக்களை நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். உண்மையில் இது வெறும் விளையாட்டல்ல. இதன் பிண்ணனியில்... (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
ஆலிப் அலி (இஸ்லாஹி)உங்கள் கருத்து:
Labels:
வீடியோ க்ளிப்ஸ்
03 March 2015
நிம்மதிக்கு எடுத்துக்காட்டான முன்மாதிரி இல்லம்
இது ஒரு மத்திம காலப் பாடல்
வரி "சொர்க்கம் என்பது நமக்கு, சுத்தம் உள்ள வீடுதான்; சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்" ஆஹா!
எத்தனை அர்த்தமுள்ள, அழகிய வரிகள். யதார்த்தமும்
அதுதானே! உண்மையில் வீடு வீடாக இருந்தால் தான் அதிலே மன நிம்மதியும் சந்தோசமும் கிடைக்கும்.
வீடு காடாக இருந்தால் அந்த வீட்டுக்குள் நுழைவதையே நாம் விரும்பமாட்டோம். நிம்மதியினதும்
அமைதியினதும் இருப்பிடமாக வீடு இருக்கவேண்டிய நிலையில் அது காடாகவும், சிலருக்கு நரகமாகவும்
இருப்பதால்தான் அவர்கள் வீட்டுக்கு வெளியே அந்த நிம்தியையும் அமைதியையும் தேடிச் செல்கின்றார்கள்.
உங்கள் கருத்து:
Labels:
சமூகவியல்,
சிந்தனைக்கு
09 February 2015
04 February 2015
ஊனுண்ணித் தாவரங்கள்
அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் 54 வகையான தாவரங்களைப்
பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் மூன்று வகை தவிர்ந்த மற்ற அனைத்தும் பூமியில்
காணப்படுகின்ற தாவரங்களாகும். அல்குர்ஆனில் தாவரங்கள் தொடர்பாக வருகின்ற வசனங்களை ஆராயுமிடத்து
அவை தாவரங்களுக்கு உயிர்,
உணர்ச்சி இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. விஞ்ஞானமும் இதனையே கூறுகின்றது. மனிதர்களைப்போன்று தாவரங்களுக்கும் சிந்தித்து உணரும்
ஆற்றல் இருக்கின்றது என்ற ஒரு ஆய்வியல் தகவல் அண்மையில் “பிளாண்ட் பயாலஜி”என்ற சஞ்சிகையில்
வெளியாகியிருந்தது. மட்டுமன்றி அவை தமக்கிடையில் உரையாடுவதாகவும் பல்வேறு ஒலி சமிக்ஞைகளை
வெளியிடுவதாகவும் அவ்வாய்வில் அறிவித்திருந்தனர். இதற்கு ஒரு கட்டுரையாளர் பின்வரும்
அல்குர்ஆனிய வசனத்தைக் கூறி மனிதன் மட்டுமன்றி தாவரங்கள், மரங்கள், மலைகள் போன்ற அல்லாஹ்வின்
இதர படைப்புக்களுக்கும் சிந்தித்து முடிவெடுக்கின்ற ஆற்றல் இருக்கின்றது என்ற கருத்தை
ஒரு கட்டுரையில் தெளிவுபடுத்தியிருந்தார். இதுதான் அந்த அல்குர்ஆனிய வசனம்....
உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்
Subscribe to:
Posts (Atom)









