அரிசோனா பல்கலைக்கழகத்தின்
மைக்ரோபயாலஜித் துறை பேராசிரியர் சார்லஸ் கெர்பா என்பவர் சுற்றுச்சூழலில் நம்முடன் வசிக்கும் கிருமிகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். அதன்போதுதான் அவர் கழிவறையைவிடவும்
பத்து மடங்கு அதிகமாக செல்போனில்
கிருமிகள் வசிப்பதை கண்டறிந்துள்ளார். மனிதர்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வயிற்று
உபாதை, தொற்றுநோய் பரவல், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்பட கழிவறையை விட செல்போன்களே மிக அதிக அளவில் காரணமாக இருப்பதாகவும் அவர் மேற்கொண்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏராளமான கிருமிகளைக் கொண்டிருக்கும் செல்போன் எப்போதும் நமது கையிலும், வாய்க்கு அருகேயும்
இருப்பதால் பல நோய் உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று பேராசிரியர் சார்லஸ் கெர்பா தெரிவித்துள்ளார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
1 comments:
தகவலுக்கு மிக்க நன்றி...
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...