அன்றைய விஞ்ஞானிகளுக்கும் கிறிஸ்தவத் திருச் சபைக்குமிடையே ஏற்பட்ட உண்மைக்கும் வரட்டு கௌரவத்திற்கும் இடையிலான முரண்பாடாகும். பல விஞ்ஞானிகள் தீயிட்டுக்கொழுத்தப்பட்டதும் சிறையிலடைக்கப்பட்டதும் வரலாறு கூறும் உண்மைகள். இது அம்மக்களின் மனதில் மதம் பற்றிய சகப்புணர்வை ஏற்படுத்தியது. மதத்தை விட்டொழித்தால் மட்டுமே வாழ்வில் முன்னேர முடியும். இல்லாவிடின் நாம் காலாகாலமாக மதத்தின் பெயரால் கொடுமைப்படுத்தப்படுவோம். இவ்வாறான சிந்தனைகள் எழவே மதம் என்பது பொய், அது அபினைப் போன்றது. கடவுள் என்றொன்றில்லை. அனைத்தும் இயற்கையான தற்செயல் விபத்தின் மூலம் உருவானவையே என்று சிலர் கருத்து முன்வைத்து அதனை நிரூபனம் செய்ய பகுத்தறிவு ரீதியான பல ஆதாரங்களையும் திரட்டினர். இனால் கவரப்பட்ட மக்கள் இக்கொள்கைகளை ஆதரித்து அதில் இணைந்து கொண்டனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...