ஒரு விடயத்தை ஆழமாக விளங்கி விசுவாசிக்கும்போதுதான் அதன் சுவையும் கனதியும் உள்ளத்தில் ஆழப்பதிகின்றது. அதுமட்டுமன்றி ஈமானும் பலம்பெறுகின்றது. ஆன்மா, ஆன்மிகம் சம்பந்தமாக பல மதங்களும் பேசியுள்ளன. ஆனால் இஸ்லாம் கூறும் ஆன்மாவின் உண்மைத் தன்மையோ அது மனிதனை இறைவனிடம் நெருங்கவைத்து மனிதப் படைப்பின் நோக்கத்தைப் புறியவைக்கின்றது. அந்தவகையில் மனித ஆன்மாவின் பயணத்தொடர் குறித்து இக்கட்டுரையில் சற்று விளங்க முயற்சிப்போம்.
இறைவனின் படைப்புகளிலே மிகவும் உயர்ந்த படைப்பு மனிதன்தான். காரணம் யாதெனில் எந்தவொரு படைப்புக்கும் வழங்கப்படாத ‘ஆன்மா’ என்ற ஒரு அம்ஷம் மனித உடலில் காணப்படுகின்றது. இவ்வான்மா பறவைகளுக்கோ மிருகங்களுக்கோ தாவரங்களுக்கோ எம் கண்களுக்குப் புலப்படாத நுண்உயிரிகளுக்கோ வழங்கப்படவில்லை. மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
2 comments:
அஸ்ஸலாமு அலைக்கும். பதிவுலகுக்கு அன்புடன் வரவேற்கிறேன்.
நல்ல பதிவு தொடருங்கள் நண்பரே.
பின்னூட்டப் பெட்டியின் கீழிருக்கும் word verification ஐ எடுத்துவிடுங்கள். எழுத்துரு மாற்ற வேண்டியிருப்பதால் நிறையப் பேர் பின்னூட்டமிடத் தயங்குவார்கள்.
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...