பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி Dr.ஆஃபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தான் உளவுத்துரையினால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்க FBI இடம் விசாரனைக்காக ஒப்படைக்கப்பட்டார்.
“உஸாமாபின் லேடனின் தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவிகள் செய்துள்ளார்” என்ற போலிக் குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தியே விசாரனையென்ற பெயரில் அவரைக் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட அவர் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு வாய்விட்டுச் சொல்லமுடியாதளவு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் சித்திரவதைகளுக்கும் ஆளாகியுள்ளார்.
இக்கொடுமையை 2008 ஜுலை 06ஆம் திகதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்துள்ளார். அவர் சகோதரி ஆபியாவின் விடுதலைக்கான நடவடிக்கைகளில் களமிறங்கி செயற்பட்டுவருகின்றார்.
சுயநினைவிழந்து, பற்கள் மற்றும் மூக்கு உடைந்து, உதடுகள் கிழிந்து படுபயங்கரமான தோற்றத்துக்கு அப்பெண் மாற்றப்பட்டுள்ளதாக ரெட்லி குறிப்பிடுகின்றார்.
சகோதரி ஆஃபியாவை இறைவன் பொருந்திக்கொள்வானாக!
நிவ்யோக் நீதிமன்றத்தில்; குற்றம் நிருபனமானால் அவருக்கு 20 ஆண்டுகள் கடூழியச்சிறைத்தண்டனை வழங்கப்படும். ஏற்கனவே அவர் பட்டிருக்கும் வேதனைகளோ சொல்லிற்கடங்காதவை. இந்நிலையில்……
உடன் பிறவா அச்சகோதரியை எமது பிரார்த்தனைகளில் சேர்த்துக்கொள்வோம். அவரது விடுதலைக்காய்ப் பிரார்த்தித்து அநீதிக்கெதிராகக் குறல்கொடுப்போம்.
மேலதிக தகவல்களுக்கு….
2 comments:
May HE give us the best and let us be contended with it...Aamin!
Aameen!!!
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...