தகவல் பரிமாற்றத்தின் ஜாம்பவானாகத் திகழும் உலகளாவிய வலைப்பின்னல்தான் இணையம். பாவனையாளர்களையும் தகவல்களையும் கணினிகளையும் பிணைத்து இன்றைய உலகிலே ஒரு தகவல் புரட்சியை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் இக்கட்டுரையை எழுத முக்கியமானதொரு காரணம் உண்டு. அண்மையில் மீள்பார்வைப் பத்திரிகையிலும் விடியல்வெள்ளி சஞ்சிகையிலும் வெளியான இரு கட்டுரைகள் இதனை எழுதத் தூண்டுதலாக அமைந்தன என்பதை மறவாமல் குறிப்பிடுகின்றேன்.
23 May 2008
வலைப்பின்னலில் எழுதுவதன் அவசியம்.
13 May 2008
என்னைப் பற்றி சுருக்கமாக...
எம்.என் ஆலிப் அலி என்பது எனது பெயர். இலங்கைச் சிறு நாட்டில் எல்ல்லமுல்லை எனும் ஊரில் வாழ்ந்து வருகின்றேன். சிறியதொரு குடும்பம், அழகானதொரு வாழ்க்கை.
ஆரம்பக் கல்வியை ஒன்பதாம்
ஆண்டுவரை கொடவெல முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்றேன். அதன் பின் க.பொ.த.சா. தரக் கல்வியை
எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்று பரீட்சையிலும் சித்தியடைந்தேன்.
பின்னர் ஷரீஆக்கல்வியைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை
இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து அங்கு
ஆறு வருடக் கற்கையையும் புர்த்திசெய்துவிட்டேன். அங்கேயே உயர்தரக் கற்கையையும் G.A.Q (General Arts
Qualification) பரீட்சையையும் முடித்துக்கொண்டேன். எனது எழுத்துக்கு வழியமைத்து
வசதி செய்துதந்தது இஸ்லாஹிய்யா கலாசாலைதான் என்பதை மறவாமல் ஞாபகிக்கின்றேன்.
இஸ்லாஹிய்யாவில் இருந்து வெளியேறியது
முதல் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மேற்குப் பிராந்திய முழுநேர ஊழியனாகக் கடமையாற்றி
வருகின்றேன். கடந்த வருடம் (2013) மே மாதத்தில் BA பரீட்சை எழுதி சித்தியடைந்துள்ளேன். அதே ஆண்டில் தேசிய சமூக அபிவிருத்தி நிருவனத்தில் இரண்டு வருட உளவியல், உளவளத்துணை டிப்ளோமாக் கற்கையையும் பூர்த்திசெய்துள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்!
தற்போது நாட்டின் பல பகுதிகளுக்கும் தஃவா நிகழ்ச்சிகளுக்காகவும், உளவியல் வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காகவும் சென்றுவருகின்றேன்.

சுயமாக ஒரு வலைப்பூங்காவை
ஆரம்பிப்பதற்கு முக்கியமானதொரு காரணமுண்டு. உலகளவில் முஸ்லிம்களது இணையதளப் பிரவேசம்
மிகமிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. இதனை ஒரு ஆய்வுக் கட்டுரையில் வாசித்தேன்.
எனவே என்னாலான ஒரு சிறிய
இடைவெளியையாவது நிரப்ப முடியும் என்ற வலுவான நம்பிக்கையில் இணையம் மூலம் எனது பங்களிப்பை
இஸ்லாத்திற்கு வழங்க உழைக்கின்றேன். அத்தோடு சமகால பிரச்சினைகற்கு இஸ்லாம் வழங்கும்
தீர்வுகளையுதம் ஆராய்ந்து முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய உண்மையான நிலைப்பாட்டை
எடுத்து முன்வைத்துள்ளேன். இந்தத் தூய நோக்கிலேயே “என் கண்ணில் (In My eYe)” என்ற பெயரில் எனது
வலைப் பூங்காவை விதைத்து வளர்த்து வருகின்றேன்.
நான் க.பொ.த. சாதாரண தரம்
(O/L) கற்கும் நாட்களில் தான் எனது எழுத்துக்கள் அச்சேறத்துவங்கின.
அதற்கு முன் எனது ஆக்கங்கள் அனைத்தும் பாடசாலைச் சுவர்ப்பத்திரிகையில் மட்டுமே தஞ்சம்கிடந்தன.
முதல் ஆக்கம் அரங்குக்கு வந்ததுமே இன்னும் இன்னும் இன்னும் எழுதவேண்டும் என்ற உத்வேகம் உள்ளுக்குள் பிரளயமானது. எழுதினேன், எழுதுகின்றேன், பின்னும் எழுதிக்கொண்டே
இருப்பேன் என்பது உறுதியான என் எதிர்பார்க்கையாயுள்ளது. சமூகவியல் கட்டுரைகள், சர்வதேச அரசியல் கட்டுரைகள், என்னைக் கவர்ந்த அறிஞர்
பெருமக்களின் வாழ்க்கைக் குறிப்புகள், சரிதைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இறை வல்லமையை உணர்த்தினிற்கும் படைப்பினங்களின் அதிசயங்கள், இஸ்லாமும் விஞ்ஞானமும்
போன்ற தலைப்புகளில் என் படைப்புக்கள் அமைந்திருக்கின்றன.
இஸ்லாத்தின் அடிப்படைகள் பற்றி
எடுத்துக் கூறுவதாகவும் சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டுவதாகவும் அவற்றுக்கு இஸ்லாம்
வழங்கும் தீர்வுத் திட்டங்களை முன்மொழிவதாகவும் எனதாக்கங்களைக் கண்டுகொள்ளலாம்.
உண்மையில் எழுத்துத்துறையில்
என்னைத் தவழவைத்தது தொடர்ச்சியான என் வாசிப்புப் பழக்கம்தான். எப்போதும் எதனையும் முதலிலே
வாசித்துப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஒரு தீவிரம் என்னுள் வளர்ந்துவிட்டது. வாசித்து
வாசித்து வெறுமனே ஒரு தகவல் பெட்டகமாக எனது மூளையை நான் ஆக்கவிரும்பவில்லை. எனவேதான்
அதனை மற்றவர் பயன்படுத்தட்டும் என்று என் மனக்கோளம் பூண்ட சிந்தனைகளை எழுத்தில் கோளம்
போட்டேன்.
என் மூளையில் வாசித்து யோசித்து
பயன்படுத்தி பின் அனுபவங்களாகவும் ஆங்காங்கு சிதறிக்கிடந்த எண்ணங்களை, தகவல்களை கோர்வைசெய்து
ஒழுங்குபடுத்தி மெருகேற்றியது எழுத்துக்கள்தான். எழுத்துக்கள் என்னை நானே செதுக்கிக்ககொள்ளவும்
எனது தேடல்களைத் தீவிரப்படுத்திக்கொள்ளவும் எனக்குக் களமமைத்துத்தந்தன.
இதுவரை எனது படைப்புகள் அல்ஹஸனாத்,
உண்மை உதயம், அகரம்,
இளவேனில், சிட்டு,
படிகள் போன்ற சஞ்சிகைகளிலும் தினகரன்,
தினக்குரல், வீரகேசரி, எங்கள் தேசம், விடிவெள்ளி, மீள்பார்வை போன்ற
பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. எழுத்துத் துறையில்போன்றே நாடகத் துறையிலும் எனக்கு
அலாதி விருப்பம். நானே கதையெழுதி நடித்த பல நாடகங்களும் உண்டு. கல்லூரி வளாகத்தில்
அதிகம் எனது நாடகங்கள் அரங்கேறியுள்ளன. இப்படி இன்னும் பல.....
ஒரு கோரிக்கை
:
என்னவென்றால் தென்றலாய்
இப்பக்கம் வந்து செல்லும் நீங்கள் மறவாமல் உங்கள் காத்திரமான விமர்சனங்களை, வளர்ச்சிக் கருத்துக்களை
இங்கே தூவிவிட்டுச் செல்லுங்கள். அதனை நான் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். கருத்துக்களை
ஏற்று பிழைகளைத் திருத்திக்கொள்ளும் பக்குவமும் மனமும் உள்ளதையும் பணிவுடன் கூறிக்கொள்கின்றேன்.
அத்தோடு நீங்கள் அறிந்த உங்களுக்கு
அறிமுகமில்லாத உங்களைத் தெரிந்த உங்களுக்குத் தெரியாத சொந்தங்களுக்கெல்லாம் இப்பதிவை
அன்போடு அறிமுகம் செய்து வையுங்கள். இது என் அன்பார்ந்த வேண்டுகோள்!
இவன் என்றும் உங்கள் அன்புடன்.

உங்கள் கருத்து:
Labels:
என் சுயவிபரக்கோவை
இப்பதிவைப் பற்றி...
அஸ்ஸலாமு அலைக்கும்
தகவல் பரிமாற்றத்தின் ஜாம்பவானாகத் திகழும் உலகளாவிய வலைப் பூங்காவில் எனதெண்ணச் சிதறல்களையும் தூவிவிட வேண்டும் என்ற பேரவாவில் In My EyE ‘என் கண்ணில்…’ என்ற பெயரில் இப்பக்கத்தை ஆரம்பித்துள்ளேன்.
குறிப்பாக நான் படித்த இரு கட்டுரைகள்தான் என்னை வலைப்பூங்காவில் எழுதவைத்தது என்பதை மறுக்கமுடியாது. (அவற்றின் தழுவலாக எழுதிய ஒரு சிறு கட்டுரையை இங்கு பதித்துள்ளேன்) சமகால சமூகவியல் கட்டுரைகளையும் ஏக நாயன் அல்லாஹ்வின் வல்லமைகளை எடுத்துக்காட்டும் அவனின் படைப்புகளின் அற்புதங்களையும் இங்கே கொண்டுவருவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எம்மவர்களின் இணையத்திலான பதிப்பின் இடைவெளியை சற்றேனும் நிரப்புதற்கு என்னாலான சிறு முயற்சியாக இது அமையுமென எதிர்பார்க்கின்றேன். ஆக உங்கள் வரவை எதிர்பார்க்கும் நான் அதேவேளை மறவாமல் விமர்சனங்களையும் வரவேட்கிறேன்.

வாசித்துவிட்டு எழுதவும்……..!

Subscribe to:
Posts (Atom)