சிங்கம் காடிட்டின் அரசனாக மதிக்கப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் வீரத்திற்கு புலிதான் உவமிக்கப்படுகின்றது. சிங்கத்திற்கு இணையாக காட்டுக்குள் திமிரோடு திரியும் அடுத்த விலங்கு புலிதான். சிங்கத்தைவிடவும் உடலமைப்பில் புலி பெரியது. சிங்கத்திற்கும் புலிக்கும் இடையில் நடைபெற்றுள்ள சண்டைகளிலெல்லாம் புலிதான் வெற்றி பெற்றுள்ளது. உணவுச்சங்கிலியின் முக்கிய இனம். இத்தொடரில் புலிகளின் வீர தீரமான வாழ்க்கை பற்றிப் பார்ப்போம்.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி
(இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling, Al-Quran
& Science Researcher.
உங்கள் கருத்து:
காலை ஆறு மணி இருக்கும்.
ஜன்னல் வழியாக “டொக்… டொக்…” என்று ஒரு சப்தம்.
யார் ஜன்னலை விடாமல் தட்டிக்கொண்டிருப்பது? என்று சற்று கோபத்தோடு எட்டிப் பார்த்தேன். சின்னஞ் சிறிய ஹம்மிங்
பேர்ட் ஒன்று அதன் விம்பம் கண்ணாடியில் இருப்பதைக கண்டு ஏமார்ந்து தன் அலகினால் தட்டி
விளையாடிக்கொண்டிருந்தது. அந்த ஹம்மிங் பேர்ட் தான் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.
அஷ்.எம்.என்.ஆலிப்
அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling
Al-Quran & Science Researcher
உங்கள் கருத்து:
எமது இலங்கை நாட்டின் இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்திச் செல்லும் ஒரு சீரியல். "La víctima número 8 - victim number 8" (எட்டாவது பலி) என்ற ஸ்பானிஷ் தொலைக்காட்சித் தொடர் Netflix இல் காணக் கிடைக்கிறது. ஒரு நாட்டின் அரச புலனாய்வுத்துறையினர் பயங்கரவாத குண்டுத் தாக்குதலை நடத்தி விட்டு, அதைச் செய்தவர்கள் ஜிகாதி தீவிரவாதிகள் என்று சொல்லி ஒரு அப்பாவி அரபு இளைஞனை பலியாடு ஆக்குவது தான் கதைக்கரு. படத்தில் ஒமார் ஜமால் என்ற அரபு இளைஞனாக ஒரு ஸ்பானிஷ் நடிகரே நடித்துள்ளார். தமிழில் வெளியான விசாரணை படத்தின் பாணியில் தான் இந்தத் தொடர் எடுக்கப் பட்டுள்ளது.
நன்றி கலை மார்க்ஸ்
உங்கள் கருத்து:
எனது எதிர்காலத்திற்காக ஆரம்பப்பாடசாலையில் படித்தேன். பிறகு என்னுடைய எதிர்காலத்திற்காக
சாதாரண தரம் படிக்கச் சொன்னார்கள். படித்தேன். பின்னர் என் எதிர்காலத்திற்காய் உயர்தரத்தையும் படிக்கச்சொன்னார்கள்.
அதனையும்
படித்தேன். தொடர்ந்து எனது எதிர்காலத்திற்காய்
இளமாணிக்கற்கையையும் தொடரும்படி சொன்னார்கள். அதன்பிறகு என் எதிர்காலத்திற்காய் தொழிலொன்றைத்
தேடும்படி சொன்னார்கள். தேடினேன். பின்னர் எனது எதிர்காலத்திற்காய்
திருமணம் முடிக்கச் சொன்னார்கள். முடித்தேன்.
உங்கள் கருத்து:
நாம் ஒரு விடயத்தை
உண்மைப் படுத்துவதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவோம். அவ்வாறு அல்லாஹ்
ஒரு விடயத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவானென்றால் அதன் மீது சத்தியம் செய்வான்.
இரவு, பகல், சூரியன், சந்திரன், வானம், பூமி, மலைகள் என்று பலவற்றின்
மீதும் சத்தியம் செய்துள்ளான். அதேபோன்றுதான் அல்குர்ஆனில் 95 ஆம் அத்தியாயம் 1 ஆம் வசனத்தில் வத்Zஸைதூன் என ஸைதூனின்
மீது சத்தியமிட்டுள்ளான். மற்றுமொரு இடத்தில் அது பரகத் நிறைந்த்து என்றும் கூறுகின்றான்.
முஸ்லிம்கள் எம்மைப்போன்று யூத, கிறிஸ்தவர்களும் இதனை கண்ணியமான, புன்னியமான ஒன்றாகப்
பார்க்கின்றனர். அப்படி என்னதான் அதில் முக்கியத்துவம் இருக்கின்றது என்று பார்ப்போம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து: