“Kangaroo
என்றழைக்கப்படும் கங்காருக்கள் உண்மையிலேயே அதிசயமானவை. பெயரில் மட்டுமல்ல
அவற்றின் தோற்றத்திலும் வாழ்க்கை அமைப்பிலும்தான். அவுஸ்த்ரேலியாவின்
தேசிய விலங்கு என அறியப்பட்டிருக்கும் இவ் விலங்குகள் உண்மையில் அந்நாட்டின்
தேசியவிலங்கு அல்ல. மாறாக அந்நாட்டின் அதிசயம் என்றுதான் கூறவேண்டும். அதனால்தான் அவுஸ்த்ரேலியாவின் தேசிய முத்திரையில் கங்காருக்கள்
இடம்படித்துள்ளன. கங்காருவால் பின்னோக்கி நடக்கவோ நகரவோ முடியாது. எனவே முன்னேற்றத்துக்கான அடையாளமாக
இது அரச முத்திரையில் இடம்பெற்றுள்ளதாகக்
கூறப்படுகின்றது. இத்தகைய சுவாரஷ்யமுள்ள இவ்விலங்கில் இறை வல்லமைகளைக்
கண்டுகொள்ள இத்தொடரில் சற்று
முயற்சிப்போம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
உங்கள் கருத்து:
அண்மையில் ஒரு வீடியோ காட்சி பார்க்கக் கிடைத்தது. ஒரு பெண் மலைப்பாம்பொன்றை கழுத்தில்
மாலையாகபோட்டுக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருக்கின்றாள். எல்லோருக்கும் ஆச்சரியம்.
மலைப்பாம்புக்கே பயப்படாத பெண்ணா? அந்த சமயம் பார்த்து
எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு கரப்பான் பூச்சி தொப்பென்று வந்து அப்பெண்ணின் மீது வீழ்ந்தது.
அய்யோ பாவம் மலைப்பாம்பைத் தூக்கி எரிந்துவிட்டு கூச்சலிட்டு, பதறியடித்துக்கொண்டு ஓடிவிட்டாள். சபையோர் எல்லோருக்கும்
ஒரே சிரிப்பு. மலைப்பாம்புக்குக்கூட பயப்படாதவர் இப்படி சாதாரண கரப்பான் பூச்சிக்குப்
பயந்துவிட்டாரே! இப்படி பலரையும் பார்க்கலாம். சிங்கத்திற்கும் புலிக்கும் பயப்படாதவர்கள்கூட
கரப்பான் பூச்சியின் பெயரைக் கேட்டாலே தொடை நடுங்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட “கரப்பான் பூச்சிகள்” பற்றி இத்தொடரில் அறிந்துகொள்வோம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
சிறுவயது முதல் எனக்குப் பிடித்தமான செல்லப்
பிராணி அணில்தான். இன்னும் ஞாபகம். எத்தனையோ தடவை மரங்களில் ஏறி அணில் கூடுகளைப் பிரித்து
அதில் உள்ள அணில் குஞ்சுகளை, தாய் அணில் கத்தக் கத்தக் கபளீகரம் செய்துகொண்டுவந்து
வீட்டில் பெட்டிப் பால் கொடுத்து வளர்க்க முற்பட்டுள்ளேன். பாவம். ஒன்றும் பிழைத்ததில்லை.
எங்கள் வீட்டின் முன் நிற்கும் கொய்யா மரத்திற்கு கூட்டமாக வரும் அணில்களையும் அவை
கொய்யாப் பழங்கள் உண்ணும் அழகையும் சேட்டை செய்து ஒன்றை ஒன்று விரட்டிப் பிடித்து விளையாடும்
குறும்புகளையும் பார்த்து மகிழும் வழக்கம் இப்போதும் உண்டு. இவற்றின் குறும்புத்தனமான
செயல்களினாலோ என்னவோ அவற்றுக்கு பிள்ளை என்றும் கூறுகின்றனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து:
தவளைகள் நீரிலும் நிலத்திலும்
வாழும் தகவமைப்பைப் பெற்ற இருவாழ்விகளாகும் (Amphibians). தவளை என்று கூறும்போது அதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன.
ஒன்று தவளை, மற்றையது தேரை. உலகத்தில்
6,771 வகையான தவளை, தேரை வகைகள் உள்ளன.
தவளைக்கும் தேரைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம், தவளையின் தோல் காய்ந்து சொரசொரப்பாகக் காணப்படும்.
தேரையின் தோல் வழுவழுப்பாக இருக்கும். தவளைகள் கறுப்பு, சாம்பள் போன்ற மங்களான
நிறங்களில் இருக்கும். ஆனால் தேரைகள் கண்கவர் அழகிய பிரகாசமான நிறங்களில் எல்லாம் இருக்கும்.
தவளைக்கு விஷ உறுப்பு கிடையாது. தேரைக்கு உண்டு. முக்கியமாக நீர், அதை ஒட்டியுள்ள நிலப்பகுதியில்
தவளை வசிக்கும். தேரை நிலத்தில் மட்டுமே காணப்படும். முழுவளர்ச்சி அடந்த தவளைகள் நீண்ட
பின்னங்கால்களையும் திரண்டு உருண்ட உடலையும் விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள மடிப்புகளையும்
இரு புறமும் பிதுங்கிய இரு கண் முழிகளையும்கொண்ட வாலில்லா ஓர் விலங்குதான் தவளை.
ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
உங்கள் கருத்து:
பூமியின் பிரதானமான இயற்கை
வளங்கள் நான்கு. நீர், காற்று, மண், மரம் என்பனவே அவை.
மற்ற கோல்கள் காய்ந்து வரண்ட நிலையில் காட்சியளிக்க பூமி மட்டும் குளிர்ச்சியாக நீல
நிரத்திலும் பசுமையாகப் பச்சை நிறத்திலும் காட்சியளிப்பதற்கு மிகப்பிரதானமான காணரம்
இவ் இயற்கை வளங்கள்தான். இவற்றில் மரங்கள் முக்கியமானவை. இவை உயிரின வாழ்கைக்கு பெரிதும்
பங்காற்றி வருகின்றன. மனிதனின் முதல் நண்பன் மரம். அம்மரங்கள் பற்றி இத்தொடரில் அலசுவோம்.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி)
உங்கள் கருத்து: