பூமியின் பிரதானமான இயற்கை
வளங்கள் நான்கு. நீர், காற்று, மண், மரம் என்பனவே அவை.
மற்ற கோல்கள் காய்ந்து வரண்ட நிலையில் காட்சியளிக்க பூமி மட்டும் குளிர்ச்சியாக நீல
நிரத்திலும் பசுமையாகப் பச்சை நிறத்திலும் காட்சியளிப்பதற்கு மிகப்பிரதானமான காணரம்
இவ் இயற்கை வளங்கள்தான். இவற்றில் மரங்கள் முக்கியமானவை. இவை உயிரின வாழ்கைக்கு பெரிதும்
பங்காற்றி வருகின்றன. மனிதனின் முதல் நண்பன் மரம். அம்மரங்கள் பற்றி இத்தொடரில் அலசுவோம்.
13 December 2017
08 November 2017
மின்மினிப் பூச்சிகள்
இரவு நேரத்தில் பரந்த வயல்
வெளியையோ அல்லது அடர்ந்த மரத் தோப்பையோ அமைதியாக உற்றுப் பாருங்கள். வானில் நட்சத்திரங்கள்
விட்டு விட்டு ஒளிர்வதைப்போல நூற்றுக்கணக்கில் மின்மினிப் பூச்சிகள் அப்பகுதியெங்கும்
மின்னி மின்னிப் பறப்பதைக் கண்டு மகிழலாம். உண்மையிலேயே ரசனை உணர்வுடன் பார்ப்பீர்களானால்
இனம்புரியாத அமைதியும் நிம்மதியும் உங்கள் உள்ளங்களை ஆட்கொள்ளும். வல்லவனின் படைப்புகள்
யாவுமே அதிசயம்தான். அதில் மின்மினியும் ஒன்றுதான்.
உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்
20 October 2017
தந்திரக்கார நரிகள்
“ஒராம் ஒரு ஊரிலே…” என்று
ஆரம்பிக்கின்ற அனேகமான சிறுவர் கதைகளில் நரிக்கு கட்டாயம் ஒரு முக்கிய இடமுண்டு.
பாட்டி வடை சுட்ட கதையில் வரும் நரியின் தந்திரக் குணத்தை பாலர் பாடசாலையில்
கேட்டுப் படித்த ஞாபகம் என்னைப் போலவே உங்களுக்கும் இருக்கும். கவிதைகளிலும்,
பாடல்களிலும் கூட நரி இடம்பெறுகின்றது. அண்மைக் காலமாக “நரி வருது, நரி வருது
காக்கா காக்கா பறந்து வா…” என்ற சிறுவர் பாடல் அனேகர் மத்தியிலும் பிரபல்யமடைந்து
வருகின்றது. ஒரு காலத்தில் எமது நாட்டிலும் கிராமப் புறங்களில் எல்லாம் நரிகள்
பரந்து வாழ்ந்துள்ளன. எமது மூத்த தாத்தா, பாட்டி மாரிடம் கேட்டால் சொல்வார்கள். அந்த
அளவுக்கு முன்னேய காலங்களில் மிக இலகுவாக நரிகளை எமது கிராமப் புரங்களில் காண
முடியுமாக இருந்துள்ளது. ஆனால் இன்று மிருகக் காட்சி சாலையில் மட்டுமே சென்று
பார்க்க முடியுமான அளவுக்கு நரிகள் அழிந்து குறைந்து சென்றுள்ளன. காண அரிதாகிச்
சென்றுள்ள நரிகளைப் பற்றியும் அவற்றின் பயன்களைப் பற்றியும் இத்தொடரில் பார்ப்போம்.
அஷ்.எம்.என்.ஆலிப்
அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling
உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்
13 September 2017
லவ் பேர்ட்ஸ் - காதல் பறவைகள்
உலகின் செல்லப்பிராணிகளின் வரிசையில் மூன்றாவது
இடத்தை இந்த லவ்பேட்ஸ் பறவைகள் பிடித்துள்ளன. முதல் இரண்டும் நாய், பூனை
என்பனவாகும். லவ்பேட் என்பது இப்பறவை இனங்களின் செல்லப் பெயர்தான். ஆனால் அவற்றின்
உண்மையான பெயர் பட்ஜ்ரிகர் (Budgerigar) ஆகும். Melopsittacus undulates என்பது
இதன் விஞ்ஞானப் பெயர். மற்றைய பறவையினங்களுக்கு வைத்திருக்கும் பெயரைவிட இதன்
பெயர் சற்று வித்தியாசம்தான். லவ்பேட் - காதல்
பறவை. காதலின் சின்னமாகவும் இப்பறவை கருதப்படுகின்றது. லவ்பேட்… லவ்பேட்… என்று பழைய காலப் பாடல் ஒன்றும் உள்ளது. இப்பறவையினங்களின் குரும்புத்தனமான சேட்டைகளும் துரு துரு வென்ற உட்சாகமும் கீச் கீச் என்ற சப்தமும் பல வர்ண நிறமும்தான் அவை செல்லப் பிராணியாக
வளர்க்கப்படக் காரணம். 1805 ஆம்
ஆண்டில்தான் இப்பறவையினம் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தொடரில் லவ்பேட் பறவையினங்களின் வாழ்க்கையின் சுவாரஷ்யமான பக்கங்களைப் படித்துப் பார்ப்போம்.
உங்கள் கருத்து:
Labels:
படைப்பினங்கள்
23 August 2017
இறப்பின் பின் புழுத்து அழுகும் மனித உடல்
எதுவும் உடலினுள் இருக்கும்வரைதான் சுத்தம். வெளியேறினால் அசுத்தம்தான். எச்சில் வாயினுள்
இருக்கும்வரை சுத்தம் வெளியே துப்பிவிட்டால் அசுத்தம். உணவு இரைப்பையில் இருக்கும்
வரை சுத்தம் வாந்தியாகவோ, மலமாகவோ வெளியேறினால் அசிங்கம். நீர் உள்ளிருக்கும்வரை சுத்தம்.
சிறுநீராகவோ, வியர்வையாகவோ, இரத்தமாகவோ வெளியேறினால் அசுத்தம்தான். அதேபோன்று உடலினுள் ரூஹும், உயிரும் இருக்கும்வர உடல் சுத்தம்தான். ஆனால் அவை பிரிந்துவிட்டால்
அந்த உடல் அசுத்தமாகி அழுக்குற்று பழுதடைய ஆரம்பிக்கின்றது. ரூஹ் உடலை விட்டுப் பிரிந்ததும்
உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு அவை உருக்குலைய ஆரம்பிக்கின்றன.
அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
Al-Quran & Science Researcher, Dip. In psychological Counseling
உங்கள் கருத்து:
Labels:
ISLAM - Science,
ஆய்வு
Subscribe to:
Posts (Atom)









