"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

15 January 2017

எனது வீட்டு mini zoo

சிறுவயது முதலே செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் எனக்கு அலாதி விருப்பம். நான் ஒன்பதாம் ஆண்டு படித்து முடிக்கும் வரை வசித்தது எனது வாப்பாவின் ஊர் கொடவலையில்தான். எமது வீட்டுக்குப் பின்னால் பெரிய இரப்பர் தோட்டம். குளிர்ச்சியான கால நிலை. நீர் ஊற்றுக்கள், நீர் ஓடைகள், நீர் வீழ்ச்சிகள், குன்றுகள், மேடுகள், பள்ளனங்கள் என அழகான சுற்றுச் சூழல். பாடசாலை விட்டு வீடு வந்து மாலைப் பொழுதுகளில் மலை ஏறுவது எனக்கும் எனது சம வயது நண்பர்களதும் வழக்கம். தொலைக் காட்சியில் போகும் Rambo கார்டூனைப் பார்த்துவிட்டு அது போன்று வேடம் அணிந்துகொண்டு கத்தி, கம்பு எல்லாம் எடுத்துக்கொண்டு மலை ஏறுவோம். சிறு மரங்களை வெட்டி வீழ்த்துவதும், மரத்திற்கு மரம் தாவிப் பாய்வதும், மேடு பள்ளங்களில் பாய்ந்து ஓடுவதும், காட்டு மாங்காய், கொய்யா, விரலிக்காய் போன்றவற்றை மரத்திலிருந்துகொண்டே ருசி பார்ப்பதும் கூடாரங்களை அமைத்துக்கொண்டு கள்வன் பொலிஸ் விளையாடுவதும் இன்னும் நினைவில் ஜொலிக்கின்றன.

ஆலிப் அலி ((இஸ்லாஹி))

உங்கள் கருத்து:

06 December 2016

பிரபஞ்சத்திற்கு அப்பாலும் பிரபஞ்சங்கள்

*பிரம்மாண்டமான பிரபஞ்சம்.*

எமது பிரபஞ்சம் நன்றாகக் காற்று நிரப்பப்ட்ட ஒரு பலூனைப் போன்ற மிகப் பிரம்மாண்டமானதொரு வெளி. இது ஒவ்வொரு வினாடியும் 300,000 கிலோ மீட்டர் (ஒளியின்) வேகத்தில் விரிவடைந்துகொண்டிருக்கின்றது. இப்பிரபஞ்சத்தில் 300 மில்லியன்களுக்கும் அதிகமான கெலக்ஸிகள் காணப்படுகின்றன. கெலக்ஸி என்பது கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் அல்லது ஞாயிற்றுத் தொகுதிகளின் குவியல் என்று கூறலாம். 300 மில்லியன்களுக்கும் அதிகமான கெலக்ஸிகளில் பல்வீதி (Milky way) என்றழைக்கப்படும் ஒரு கெலக்ஸியில்தான் நாம் இருக்கின்றோம். இந்த கெலக்ஸியில் மாத்திரம் 250 பில்லியன்களுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் (சூரியக் குடும்பங்கள்) இருக்கவேண்டுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவற்றில் ஒன்றுதான் எமது சூரியக் குடும்பம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

20 November 2016

அறிவுத் திறன் மிக்க காகம்

பாலர் பாடசாலை செல்லும் நாட்களில் நான் முதலாவதாகப் பாடிய பாடலும் முதலாவதாகப் படித்த கதையும் காகம் பற்றியதுதான். “காகம் ஒன்று காட்டிலே, தாகத்தினால் தவித்ததாம்…” என்ற சிறுவர் பாடல் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. பொதுவாக மனிதர்களோடு மிகவும் நெருங்கி வாழக்கூடிய பறவை. அதனால்தான் வழமைக்கு மாற்றமாக வீட்டைச் சுற்றி காகங்கள் கரைந்தால் வீட்டிற்கு விருந்தாளிகள் வர உள்ளார்களென மூத்தவர்கள் கூறுவதுண்டு. மேலும் ஒற்றுமைக்கும் பகிர்ந்து உண்ணலுக்கும் காகங்கள் உதாரணமாக எடுத்துக்காட்டப்படுகின்றன. இந்தக் காகம் பற்றிய பல வியப்பான செய்திகளை இத்தொடரில் பார்க்கலாம்.

28 October 2016

மிதக்கவைக்கும் சாக்கடல்.

உலகின் மிகவும் தாழ்வான நிலப்பரப்பும் இதுதான். கடல் மட்டத்திலிருந்து -395 மீட்டர் (1295 அடி) பள்ளத்தில் இக்கடலும் அது சார்ந்த பிரதேசங்களும் அமைந்துள்ளன. இவ்விடத்தில் அல்குர்ஆனின் ஒரு வரலாற்று அற்புதத்தை ஞாபகப்படுத்தியாகவேண்டும். உலகிலேயே மிகவும் தாழ்வான பகுதி சாக்கடல் பகுதிதான் என்பது நவீன தொழில்நுட்பக் கருவிகள், அளவை முறைகள், புவியியல் ஆய்வு முறைகள் என்பவற்றின் துணையுடன்தான் அண்மைக்காலங்களில் கண்டறியப்பட்டது. ஆனால் இத்தகைய தொழிநுட்ப, அளவையியல் முறைமைகள் இல்லாத அன்றைய காலத்தில் அல்குர்ஆன் இதனைத் துள்ளியமாக்க் கூறியிருப்பது அல்குர்ஆன் ஓர் இறைவேதம் என்பதற்கு சான்றாகும். சூரா அர்ரூமில் மூன்றாவது வசனத்தில் “அத்னல் அர்ழ் – தாழ்வான பூமி” என்ற பிரயோகத்தின் மூலம் இதனை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
அஷ்.ஆலிப் அலி (இஸ்லாஹி)

28 September 2016

மிதக்கவைக்கும் சாக்கடல்

ஒக்டோபர் மாதம் வெளிவர இருக்கும் அகரம் சஞ்சிகையில் எனது கட்டுரை. 

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...