அன்று மன்னாரிலிருந்து
வீடுவருவதற்காக ஒரு அரைச்சொகுசு (Semi Luxury) பஸ் வண்டியில் ஏறினேன். ஏறியதும் ஏன்தான்
ஏறினோமோ என்று எண்ணும் விதமாக இருந்தது அதில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்கள். தற்போது
எந்த பஸ்ஸில் ஏறினாலும் பஸ் சாரதியும், கண்டக்கர்களும் போடுவது ப்ஃளேஷ் பேக், ஒக்ஸிஜன்,
சீதுவ சகுரா, ஸன்பளவர் போன்ற இசைக் குழுக்களின் இசைக் கச்சேரிகளைத்தான். ஒரே பாடலையே
திருப்பித் திருப்பிப் போட்டு அழுத்து, வாந்திபோகும் அளவுக்கு ஒவ்வொரு பயணத்திலும்
நான் அவஸ்த்தைப் படுகின்றேன். எதிர்த்துப் பேசவும் முடியாது. மனிதாபிமானமற்ற மனிதர்கள்தான்
அவர்கள்.
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...